கடக ராசி குணங்கள் 2023..! Kadaga Rasi Characteristics in Tamil..!

Advertisement

கடக ராசி குணம் 2023..! Kadaga Rasi Characteristics in Tamil..!

Kadaga Rasi Characteristics in Tamil: எதையும் துணிச்சலோடு சந்திப்பவர்கள் கடக ராசி அன்பர்கள் ஆவர். கடகம் காலச்சக்கரத்தின் சுப ஸ்தானம் என்று சொல்லப்படுகிறது. கடக ராசிக்காரர்களின் அதிபதி சந்திரன். பஞ்ச பூதங்களில் நீர் தத்துவத்தை குறிக்கும் கடக ராசி ஒரு பெண் ராசியாக கருதப்படுகிறது. இந்த கடக ராசியில் புனர்பூசம் 4-ம் பாகமும், பூசம் மற்றும் ஆயில்யம் போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் கடக ராசிக்காரர்கள் ஆவர். கடக  ராசி ஆடி மாதத்தை குறிக்கும். சரி இந்த பதிவில் கடக ராசிக்காரர்களின் பொதுவான குணங்களை பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க.

மேஷ ராசி குணம் 2023

கடகம் ராசி குணங்கள் 2023..!

கடக ராசி குணம் 2023 / Kadagam Rasi Palan:

கடக ராசிக்காரர்கள் குணம் மரியாதையும், சாந்தமும், சகிப்புத்தன்மை மற்றும் அதிக கடவுள் பக்தியுடன் இருக்கும்.

இவர்களின் பேச்சியில் உறுதி இருந்தாலும், இவர்கள் எப்பொழுது மென்மையாகவும் சாந்தமாக மட்டுமே பேசுவார்கள். கடகத்தில் வீடு காலச்சக்கரத்தின் சுப ஸ்தானமாக இருப்பதினால் கடக ராசியில் பிறந்தவர்கள் பிறப்பில் ஏழ்மையாக பிறந்தாலும், படிப்படியாக தனது உழைப்பால் இவர்களின் லட்சியங்களை அடைவார்கள்.

கடகத்தில் ராசி அதிபதி சந்திரனாக இருப்பதினால் தாயின் மீது அதிக பாசத்தை வைத்திருப்பார்கள். அதாவது தெய்வத்திற்கு நிகராக தனது தாயை மதிப்பார்கள்.

கடக வீட்டில் குரு உச்சம் பெறுவதினால் எந்த இடத்திலும் கடக ராசிக்காரர்கள் முதல் இடத்தை தான் பிடிப்பார்கள்.

இவர்கள் பிறந்த இடத்தை விட்டு நீண்ட தூரத்தில் எங்கு குடி இருக்கின்றார்களோ அங்கு தான் மேன்மை அடைவார்கள். பொதுவாக இவர்களுடைய பரம்பரை அதிக தெய்வ வழிபாடு கொண்டதாக அமையும்.

கடக ராசிக்காரர்களுக்கு நிலம், வீடு, வாகனம் என வசதி வாய்ப்புகள் எப்பொழுதும் நிரந்திரமாக கிடைக்கும்.

உங்களுடைய ராசி அதிபதி சந்திரன் ரிஷபத்தில் உச்சமைடைவதினால், தாங்கள் பேச்சால் மற்றவர்களை வசியம் செய்யும் ஆற்றல் தங்களுக்கு உண்டு.

கடக ராசிக்காரர்களுக்கு நல்ல கற்பனை திறன் இருக்கும். அதே போல் நல்ல ஞாபக சக்தி இருக்கும்.

தங்களிடம் மற்றவர்கள் பழகுவது என்பது மிகவும் கடினம் என்றாலும், பழகிய பின் பிரிவது என்பதும் மிகவும் கடினமாகும்.

கடக ராசிக்காரர்கள் தன்னை நம்பியவர்களுக்கு எல்லாவிதமான உதவிகளையும் செய்வார்கள். இதனால் மற்றவர்களிடமிருந்து அடிக்கடி ஏமாந்தும் போவார்கள்.

இவர்களிடம் தியாக மனப்பான்மை இருந்தாலும், கள்ள கபடம் இன்றி வெளிப்படையாக பேசும் வெகுளி குணம் இவர்களிடம் இருக்கும்.

கடக ராசிக்காரர்களுக்கு தனம், வாக்குஸ்தானமாக சிம்மம் ராசி இருப்பதினால் நிலைத்த செல்வமும், செல்வத்தால் பெரும் புகழும் தங்களுக்கு கிடைக்கும். மேலும் கால சக்கரத்தின் 5-ம் இடம் சிம்மம் என்பதால், சிம்மராசி தங்களுக்கு சந்ததி விருத்தியை கொடுக்கும் என்பதால், தாங்கள் சேர்க்கும் செல்வங்கள் அனைத்து தங்கள் சந்ததியர்களின் சந்தோஷத்திற்கு நிலைத்து பல தலைமுறைக்கு இருக்கும்.

கடக ராசி அன்பர்களுக்கு தாங்கள் விருப்பியவை அனைத்தும் சற்று கால தாமதமாகத்தான் அடையமுடியும்.

மிதுன ராசி பொதுவான குணங்கள் 2023..!

உடல் அமைப்பு:

நடுத்தர உயரத்தில் இவர்கள் இருந்தாலும் வயது அதிகரிக்க அதிகரிக்க எடை அதிகரித்து குண்டான தோற்றத்தில் இருப்பார்கள். சுருண்ட தலைமுடிகளும், நிமிர்ந்த உறுதியான மார்பும், கூர்மை இல்லாத மூக்கும், ஒற்றை தாடையும், முத்துக்கள் போன்ற பற்களும், கண்களில் கவர்ச்சியும், அகன்ற முதுகும் இவர்களின் உடல் அமைப்பாக இருக்கும்.

உடல் நலம்:-

கடகம் மார்பு பகுதியையும், அதை சார்ந்த உறுப்புகளில் அதாவது கணையம், கல்லீரல், பித்தப்பை போன்ற பகுதிகளையும் இரத்த நாளங்களையும் குறிப்பதால், கடக ராசி அன்பர்களுக்கு சளி தொல்லையும், ஆஸ்துமா போன்ற குளிர் சம்மந்தமான நோய்கள் அடிக்கடி வந்து கொண்டே இருக்கும்.

கடக ராசி திருமண வாழ்க்கை:-

கடக ராசி திருமண வாழ்க்கை: திருமண முயற்சியில் கால தாமதமும், ஒரு சிலருக்கு திருமணம் நிச்சயித்த பிறகு மாறி அமையும் நிலை ஏற்படலாம். அல்லது தன்னைவிட வயதில் முதிந்தவர்களை திருமணம் செய்து கொள்வார்கள். பெரும்பாளும் கடக ராசிக்காரர்களுக்கு திருமணத்திற்கு பிறகு பதவி, உத்தியோகம், சுயதொழில் மேன்மையடையும். இவர்களது திருமணம் பெரியோர்களால் நிச்சயித்து நடப்பதை விட, தான் விரும்பி திருமணம் செய்து கொள்வது மிகவும் நல்லது.

நட்பு ராசிகள்:-

இந்த ராசிக்கு ரிஷபம், விருச்சிகம், கன்னி, மகரம் மற்றும் மீனம் போன்ற ராசிகள் நட்பு ரசிகளாக அமையும்.

ரிஷப ராசி குணங்கள் 2023..!

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement