உங்கள் வீட்டில் இந்த இடத்தில் சமையலறை இருந்தால் செல்வ வளம் பெருகும்..!

Kitchen Vastu in Tamil

வீட்டின் எந்த பகுதியில் சமையலறை அமையலாம்? | Kitchen Location as Per Vastu in Tamil

Kitchen Vastu in Tamil – அனைவரது வீட்டிலும் கண்டிப்பாக சமையல் செய்வதற்கென்று தனியாக ஒரு அறை இருக்கும் அல்லது இடம் இருக்கும் அங்கு தான் சமையல் செய்வார்கள். இந்த சமையல் அறை எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்க போகிறோம். பொதுவாக சமையலறை வீட்டின் தென்கிழக்கு மூலையில் அமைப்பதே சிறந்தது. நல்ல காற்றோட்டமும், வெளிச்சமும் கிடைக்கும். அப்படி உங்கள் வீட்டில் தென்கிழக்கு திசையில் சமையலறையை அமைக்க முடியாது என்றால், வடமேற்கு மூலை இரண்டாவது வாய்ப்பாக இருக்கும். சரி வாங்க சமையல் அறையை வேறு எந்த இடங்களில் எல்லாம் அமைக்கலாம் என்று பார்க்கலாம்.

சமையலறை வாஸ்து | Kitchen Vastu in Tamil

தென்கிழக்கு:

இந்த பகுதியில் சமையலறை வருவது மிகவும் சிறப்பு. தென்கிழக்கில் சமையலறை அமைக்க முடியாதவர்கள் வடமேற்கில் அமைத்துக்கொள்ளலாம். வீட்டில் உள்ள பெண்களின் உடல் நலம், மனநிம்மதி, மகிழ்ச்சியும், செல்வமும் பெருகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கடனுக்கு மேல் கடன் சுமையை ஏற்படுத்தும் வாஸ்து அமைப்புகள்..

வடமேற்கு:

வடமேற்கு பகுதியில் சமையலறை அமைக்கும் போது கிழக்கு நோக்கி நின்று சமையல் செய்வது மிகவும் அவசியமானது. இங்கு சமையலறை இருந்தால் புதிய நண்பர்களும் அவர்களால் தொழிலில் முன்னேற்றமும் அமையும். கட்டிட வடிவமைப்பில் தோஷம் எதுவும் இல்லாமல் இருந்தால் படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறலாம்.

வடகிழக்கு:

இந்த பகுதியில் சமையலறை அமைக்கக்கூடாது. அப்படி அமைத்தால்  வீட்டில் செலவுகள் அதிகரித்து வறுமை நிலை உண்டாகும். குடும்பத்தில் நிம்மதியின்மை ஏற்படும். வீட்டில் உள்ள ஆண் வாரிசுகளுக்கு பல பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். பெண்களுக்கு குழந்தையின்மை பிரச்சனை ஏற்படலாம்.

தெற்கு:

தெற்கு பகுதியில் சமயலறை வருவதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு அமைக்கும்போது வறுமை ஏற்படும். மன உளைச்சல் பெருகும். வீட்டில் நிம்மதி இருக்காது.

தென்மேற்கு:

தென்மேற்கில் சமையலறை அமைக்கக்கூடாது. ஏனென்றால் அந்த வீட்டின் ஆண், பெண் இருவருக்கும் பெரிய அளவில் பாதிப்பை கொடுக்கலாம். மருத்துவத்திற்கு கட்டுப்படாத உடல்நல சீர்கேடு, துஷ்ட சக்திகளால் பாதிப்பு, கடன், வழக்குகள், திருமண தாமதம் அல்லது மண வாழ்வில் தீராத துயரம் போன்ற பல பாதிப்புகளை கொடுக்கும்.

மேற்கு:

மேற்கு பகுதியில் சமையலறை வருவதை தவிர்க்கவும். இதனால் வீட்டில் உள்ளவர்களின் நிம்மதி பாதிக்கப்படும்.

வடக்கு:

வீட்டின் வடக்கு பகுதியில் சமையலறை அமைப்பதை தவிர்க்கவும். அப்படி அமைக்கும் பட்சத்தில் குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் உண்டாகும்.

கிழக்கு:

இந்த பகுதியில் சமையலறை அமைப்பதை தவிர்க்கவும். குடும்ப  தலைவியின் உடல் நலனும், மகிழ்வும், நிம்மதியும் கெடும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வீட்டில் வளர்க்க வேண்டிய வாஸ்து செடிகள்..!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்