எந்த குபேரர் சிலை வீட்டில் இருந்தால் அதிக பணவரவு வரும் தெரியுமா.?

Advertisement

எந்த குபேரர் சிலை வீட்டில் இருந்தால் என்ன பலன்

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் எந்த குபேரர் சிலை வீட்டில் இருந்தால் என்ன பலன் என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம்.  குபேர சிலையில் பல வகைகள் உள்ளது. அவற்றில் எந்த வடிவ குபேர சிலையை வீட்டில் வைத்தால் வீட்டில் அதிர்ஷ்டம் உண்டாகும் என்பதை இப்பதிவை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

Kubera Silai Palangal – நீங்கள் என்னதான் செலவு செய்தாலும், உங்கள் வீட்டில் குறையாத செல்வம்..  பெறுக வேண்டுமா? அப்படியென்றால் உங்கள் வீட்டில் குபேர சிலையை வைத்து வழிபடுங்கள். குபேர சிலையை வீட்டில் வைத்து வழிபடுவதினால் செல்வம் அதிகரிக்கும். இந்த குபேர சிலையிலும் சில வகையான சிலைகள் உள்ளது. ஆக எந்த குபேர வீட்டில் வைத்து வழிபட்டால் என்ன பலன் என்பதை பற்றி இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.

எந்த குபேரர் சிலை வீட்டில் இருந்தால் பணம் வரவு அதிகரிக்கும்.?

இந்து சாஷ்திரத்தில் குபேரர் செல்வத்திற்குரிய கடவுள், இவர் யார் என்றால் ராவணனின் சகோதரர். இராவணன் மற்றும் குபேரர் இருவருமே சிவபெருமானின் பக்தர்கள். குபேரர் சிவன் மெது அதிகப்படியான பக்தி கொண்டு தவம் இருந்ததால் சிவபெருமானின் அருளும், ஆசியாலும் குபேரர் மக்களுக்கு வழங்க கூடிய ஒரு அற்புத சக்தி பெற்ற கடவு ஆவர். மேலும் மகாலக்ஷ்மியின் அருளும், ஆற்றலும் பெற்ற லட்சுமி குபேரராகவும் விளங்குகிறார்.

குபேரர் சிலை வைக்கும் இடம்:

இந்த குபேரர் சிலையை வடக்கு திசை பார்த்து வைக்க வேண்டும். குபேரர் சிலையை எந்த ஒரு காரணத்திற்க்காகவும் தரையில் வைக்க கூடாது. குபேரர் சிலையை உயரமான இடத்தில் வைத்து தான் வழிபட வேண்டும். மேலும் குபேரர் சிலையை தெற்கு பார்த்து வைக்கவே கூடாது. மேலும் குபேரர் சிலையை பூஜை அரை மற்றும் ஹாலில் வைக்கலாம் மற்ற இடங்களில் வைக்க கூடாது.

குபேரர் சிலையை வீட்டில் வைத்து வழிபட்டு வந்தால் தீராத கடன் பிரச்சனைகள் தீரும், குறையாத செல்வம் கிடைக்கும். உங்கள் மனதில் நினைக்கும் காரியங்கள் நிறைவேறும். என்று இந்து சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது.

மேல் படத்தில் கட்டியுள்ள குபேரர் புகைப்படம் நமது இந்து சாஸ்த்திரத்தில் வழிபடும் குபேரர் ஆவார்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
குபேர மூலையில் என்ன வைக்கலாம்

மற்றொரு குபேரர் சிலை:

  • சீன நாடு மற்றும் ஜப்பான் நாட்டிலும் வழங்கக்கூடிய சிரிக்கும் புத்தர் சிலை இந்த சிலையும் செல்வத்தை குறிக்கக்கூடிய கடவுள் என்று அந்த நாட்டவர்கள் சொல்கின்றன. இதை நாம் வழிபடலாமா என்று கேட்டல் கண்டிப்பாக வழிபடலாம், இந்த சீன புத்தர் சிலை என்று சொல்லக்கூடிய குபேரர் சிலையில் நிறைய வகைகள் உள்ளது. அவற்றில் நாம் எந்த சிலையை வீட்டில் வைத்து வழிபடலாம் என்றால் குபேரர் செல்வங்களை மூட்டையாக கட்டி தன முதுகிற்கு பின்னல் வைத்திருக்கும் சிலையை வீட்டில் வைத்து வழிபடலாம்.
  • இந்த சிலையை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் வீட்டில் செல்வம் பெருகும் என்று சொல்லப்படுகிறது. சீனர்களின் புத்தர் சிலைகளில் அந்த வகை உள்ளது. அந்த சிலைக்கான பலன்களை பற்றி பார்ப்போம்.
  • நிர்ப்பது போல் அமைப்புள்ள குபேரர் சிலையை வாங்கி வீட்டில் வைத்து வழிபட்டால் உங்களுக்கு அதிகப்படியான பொருட்கள் மற்றும் செல்வங்கள் சேர்க்கை அதிகமாக இருக்கும்.
  • சாந்த மாதிரி குபேரர் சிலை வாங்கி வீட்டில் வைத்து வழிபட்டால் நமது வீட்டில் அமைதியும், மகிழ்ச்சியும், புரிதலும், ஒற்றுமையும் வீட்டில் நிறைந்து காணப்படும்.
  • செல்வதை முன் பகுதியில் வைத்திருப்பது போல் உள்ள குபேரர் சிலையை வாங்கி வீட்டில் வைத்து வழிபட்டால் நீங்கள் நினைக்கும் காரியங்கள் வெற்றி பெரும்.
  • செல்வதை பின்னால் வைத்திருப்பது போல் குபேரர் சிலையை வாங்கி வீட்டில் வைத்து வழிபட்டால் வீட்டில் செல்வம் வரவு அதிகரிக்கும்.
  • வட்ட வடிவில் உள்ள குபேரர் சிலையை வீட்டில் வைத்து வழிபட்டால் உங்கள் வீட்டில் பாதுகாப்பு மற்றும் அமைதி நிலவக்கூடிய சூழ்நிலை உங்கள் வீட்டில் இருந்துகொண்டே இருக்கும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement