குலதெய்வத்தை வழிபடும் முறை | Kula Deivam Valipadu Murai in Tamil
குலதெய்வம் என்பது அனைவருக்குமே இருக்கும் சிலரை முறையாக குல தெய்வத்தை வழிபடுவார்கள். சிலர் குல தெய்வத்தை முறையாக வலைப்படமாட்டார்கள். சிலருக்கு குலதெய்வத்தை வழிபடுவது எப்படி என்று தெரியாது. குலதெய்வத்தை வழிபாடும் முறை தெரியாதவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நாம் நமது குலதெய்வத்தை முறையாக வழிபட்டால் அந்த குலதெய்வத்தின் அருள் நமக்கு கிடைப்பதுமட்டுமல்லாமல். நாம் செய்ய இருக்கும் நல்ல விஷயங்கள் அனைத்திற்கும் அந்த தெய்வம் பக்கத்துணையாக இருக்கும். நம் வீட்டிற்கும் குலதெய்வம் வருகை தரும். சரி வாங்க குலதெய்வம் கோவிலுக்கு நாம் செய்ய வேண்டிய சில விஷயங்களை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
No: 1
நாம் நமது குலதெய்வம் கோயிலுக்கு செல்லும் போது நாம் எதை முதலில் வாங்க வேண்டும் என்றால், அந்த கோயிலில் உள்ள கோபுரத்தை தான் முதலில் வணங்க வேண்டும். அதாவது அந்த கோபுரத்தை பார்த்து மனதார வணங்க வேண்டும். இப்படி செய்வதினால் நமது குலதெய்வங்கள் மிகவும் மகிழ்ச்சி அடையுமாம்.
No: 2
குலதெய்வ கோவிலுக்கு செல்லும் போது அந்த எல்லை மண்ணை நெற்றியில் பூசிக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதினால் நமக்கு அந்த தெய்வம் சக்தியை வழங்கும்.
No: 3
குலதெய்வ கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்துவிட்டீர்கள் என்றால், அந்த தெய்வத்தை மனதில் பரிபூரணமாக நினைத்து ஒரு நாலாவது விரதம் எடுக்க வேண்டும். பிறகு உங்கள் குலதெய்வ கோவிலுக்கு செல்ல வேண்டும். இப்படி செய்வதினால் உங்கள் குலதெய்வம் மிகவும் மகிழ்ச்சி அடையும்.
No: 4
உங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று அபிஷேகம் செய்வது அல்லது அர்ச்சனை செய்வது, அல்லது பொங்கல் வைப்பது இது போன்ற எந்த ஒரு விஷயங்களை செய்திருந்தாலும். அதனை எல்லாம் முடித்த பிறகு உங்கள் குலதெய்வத்திடம் சென்று மனதார உங்கள் குறைகள், மனக்கஷ்டங்கள், பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் அதனை மனதில் சொல்லி வேண்டுங்கள் இப்படி செய்வதினால் உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் அகலும்.
No: 5
குலதெய்வ கோவிலுக்கு சென்று உங்கள் பிராத்தனை புடிந்த பிறகு.. உங்கள் குலதெய்வத்திற்கு எலுமிச்சை பலத்தாலோ, அல்லது பூசணிக்காயிலோ ஒரு திருஷ்டி கழிக்கவும். இந்த திருஷ்டி கழிப்பதை அந்த கோயிலில் உள்ள பூசாரித்தான் எடுக்க வேண்டும். இப்படி செய்வதினால் உங்கள் குலதெய்வம் மிகவும் உற்சாகமடையும்.
No: 6
உங்கள் குலதெய்வம் கோவிலுக்கு தேவைப்படும் பொருட்களை வாங்கி கொடுக்க வேண்டும், கோவிலில் ஏதாவது பழுதடைந்திருந்தால் அதனை சரி செய்து கொடுக்கலாம். இது போன்ற விஷயங்களை செய்து கொடுப்பதினால் அந்த தெய்வத்தின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்.
No: 7
உங்கள் பிராத்தனை முடிந்து வெளியே வரும்போது உங்கள் குலதெய்வத்திடம் இப்போது நான் கிளம்புகிறான். மீண்டும் உன்னை அடுத்த மாதம் சந்திக்கிறேன், அடுத்த வருடம் சந்திக்கிறான், உனக்கு என்ன வேண்டும் என்று உங்கள் தெய்வத்திடம் பேசிவிட்டு நம்பிக்கையை கொடுத்துவிட்டு வர வேண்டும். படி செய்வதினால் உங்கள் குலதெய்வம் வருத்தம் அடையாமல் இருக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
குலதெய்வம் தெரியாதவர்கள் அதை தெரிந்து கொள்வது எப்படி?
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |