கும்பாபிஷேகம் பார்த்தால் எவ்வளவு நன்மைகள் தெரியுமா..?

Advertisement

கும்பாபிஷேகம் பலன்கள் | Kumbabishekam Palangal in Tamil

ஆன்மீக நண்பர்களுக்கும். இந்த பதிவுகளை படித்து தெரிந்துகொள்ள படித்துக்கொண்டிருக்கும் அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்..! கோவில் என்றால் அனைவருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் கோவில்களுக்கு செல்பவர்கள் அனைவருமே கடவுள் என்பவர் இருக்கிறார் என்று ஒரு நம்பிக்கையுடன் செல்கிறார்கள். ஆனால் சாமிகளை கும்பிடுபவர்கள் அந்த சாமிக்கென்று ஒரு அடையாளம் அதற்கேற்ற வரலாறு உண்டு அது தெரியுமா என்றால் பலர் தெரியாது என்பார்கள்.

சிலர் சில சாமிகளை பற்றி மட்டும் தெரியும் என்பார்கள். இன்னொரு விஷயத்தை பற்றி கேட்டால் யோசிப்பார்கள். அது என்வென்றால் கோவில் என்றால் அந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் என்ற சடங்கு செய்வார்கள் இதனை ஏன் செய்கிறார்கள் என்று தெரியுமா அல்லது அதனை நாம் பார்ப்பதனால் என்ன பலன் கிடைக்கும் என்று தெரியுமா தெரியவில்லை என்றால் தெரிந்துகொள்வோம் வாங்க..!

கும்பாபிஷேகம் விளக்கம்:

ஒரு கும்பாபிஷேகம் செய்யபடும் பொழுது அங்கு பல கலசங்கள் வைக்கப்படுகிறார்கள் அப்படி ஏன் வைக்கிறார்கள் என்றால் தெய்வத்தினுடைய அருள் ஆற்றலை முழுமையாக கொண்டு செல்ல யாகசாலை அமைத்து அங்கு பல கலசங்களை வைக்கிறார்கள். அதற்கு காலங்கள் தோறும் வேள்வி செய்து அதாவது பூஜை செய்து அந்த கடவுளுடைய அருளை பெற்று சேர்ப்பதற்கு கும்பாபிஷேகம் என்று பெயர். அதனை நமக்கு பார்ப்பதனால் கோடி புண்ணியம்.

கும்பாபிஷேகம் பலன்கள்:

  • கும்பாபிஷேகம், மந்திரங்கள் மற்றும் புனித நீர் நம் ஆன்மிக சக்திகளை அதிகரிக்க உதவுகிறது.
  • குடும்பத்தில் சுகம், வளம் மற்றும் சந்தோஷம் பெருகும்.
  • கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதன் மூலம் அந்த கோவிலின் மகிமையை அனுபவிக்க முடியும்.
  • இப்படி கும்பாபிஷேகம் பார்த்தல் அணைத்து விதமான பிரச்சனைகளும் நீங்கி, வாழ்வில் நன்மை உண்டாகும்.

கும்பாபிஷேகம் செய்த தண்ணீரை என்ன செய்யவேண்டும்:

  • கும்பாபிஷேகம் செய்த பின் அந்த தண்ணீரை பருகிக்கொள்ள அதனை கொடுப்பார்கள். சில கோவில்களில் அதனை இவ்வளவு ரூபாய் வென்று விற்பார்கள். அதனை வாங்கி கொண்டால் அதனை பக்கத்தில் உங்களுடைய வீடு இருந்தால் யாருடைய காலில் படாதவாறு கீழே சிந்தாமல் எடுத்துவரவேண்டும்.
  • அப்படி என்னால் செய்ய முடியாது என்றால் நீங்கள் வெளியூராக இருந்தால் நீங்கள் அந்த தண்ணீரை வேறு ஒரு பாட்டில் ஊற்றி பத்திரமாக வீட்டிற்கு எடுத்து செல்லலாம்.
  • பாட்டிலில் ஊற்றி விட்டோம் என்று கலசத்தை தூக்கி எறிய வேண்டாம். அதனையும் பத்திரமாக எடுத்துவந்து தண்ணீரை அதில் ஊற்றி பூஜை அறையில் வைக்கவேண்டும். இதனுடைய பலன் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று வேண்டி கொண்டு வீட்டில் இருக்கும் அனைவருக்கும் அதனை குடிக்க கொடுக்க வேண்டும். பின்பு மா இலையை கொண்டு வீடுகளில் இருக்கும் அறைகளை அனைத்திலும் வீடு முழுவதுமே தெளிக்கவேண்டும். தெளித்த பின் மீதி தண்ணீர் இருந்தால் உடனே அதனை நாம் வளர்க்கக்கூடிய செடிகளில் ஊற்றிவிடவேண்டும். பக்கத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்கலாமா என்று கேட்டால் தரலாமாக கொடுக்கலாம்.

சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் 

கலசங்களை என்ன செய்யவேண்டும்:

  • வீட்டில் செய்யக்கூடிய பூஜைகளில் மண் கலயங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • அப்படி இல்லையென்றால் வீட்டிலேயே நிரந்தர கலசமாக வைத்துவிடலாம். நூலை கழட்டாமல் அப்படியே வைத்து நிரந்தரமாக தண்ணீர் அல்லது அரிசி கொட்டி வழிபடலாம்.
  • அப்படி இல்லையென்றால் வீட்டு பூச்செடி வளர்க்கலாம். அப்படி வளர்க்கும் போது பானை உடைந்துவிட்டால் அது தவறு கிடையாது. மண் பொருளை மண்ணோடு சேர்த்துவிடலாம்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement