சனி பகவானுக்கு பிடித்த ராசிகள்
ஒவ்வொரு வருடமும் சனிப்பெயர்ச்சி வருகிறது. இத்தகைய சனி பெயர்ச்சி காரணமாக சில ராசிகளுக்கு நன்மையும் சில ராசிகளுக்கு கெடுதலும் நடக்கும். ஏனென்றால் ராசி மற்றும் நட்சத்திரங்களின் அடிப்படையில் தான் அவர்களுடைய பலன் அமையும். அதுமட்டும் இல்லாமல் நம்முடைய செயலை பொறுத்து தான் சனி பகவான் அதற்கு ஏற்ற மாதிரியான பலனை தருவார் என்றும் ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது. இப்படி இருக்கும் பட்சத்தில் சனிபகவானுக்கு மிகவும் பிடித்த ராசிகள் என்று 5 ராசிகள் உள்ளது என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது. ஆகையால் சனி பகவானுக்கு மிகவும் பிடித்த ராசிகளில் உங்களுடைய ராசியும் உள்ளதா என்று இன்றைய பதிவில் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.
இதையும் படியுங்கள்⇒ மிதுன ராசிக்குள் செவ்வாய் நுழைவதால் 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை பொழிய போகிறது அடுத்த 2 மாதங்களுக்குள்..
சனி பகவானுக்கு பிடித்தது:
காலச்சக்கரத்தில் பதினெட்டு ராசிகள் இருந்தாலும் கூட சனிபகவானுக்கு பிடித்த ராசி என்றால் அது 5 ராசிகள் தான் சனிபகவானுக்கு பிடித்த ராசி என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது.
ரிஷிப ராசி:
பதினெட்டு ராசிகளில் 2-வது ராசி ரிஷிப ராசியாகும். இந்த ராசியானது சனி பகவான் மற்றும் சுக்கிரனுக்கு உகந்த ராசியாக உள்ளது. ஆகையால் சனி பகவானின் தாக்கம் மற்ற ராசிகளுக்கு அளவிற்கு ரிஷிப ராசியின் மீது இருக்காது என்று கூறப்படுகிறது. ஆகவே சனிபகவானுக்கு பிடித்த ராசியில் ரிஷிப ராசியும் ஒன்று.
துலாம் ராசி:
துலாம் ராசியில் சனி பகவான் உச்சம் பெற்றுள்ளார். அதுமட்டும் இல்லாமல் இந்த ராசிக்காரர்கள் எப்போதும் மற்றவர்கள் மீது அன்பு கொண்டவராகவும் மற்றும் நேர்மை குணம் கொண்டவராகவும் திகழ்வார்கள். அதனால் சனி பகவானின் பார்வை இந்த ராசியின் மீது பட்டு நல்ல நிலை உண்டாகும்.
தனுசு ராசி:
தனுசு ராசியில் சனி பகவான் எத்தனை வருடம் இருந்தாலும் மிதமான தாக்கத்தினை மட்டுமே அளிப்பார். ஏனென்றால் தனுசு ராசியினை ஆன்மீகத்தில் வியாழனுடைய ராசி என்று கூறுவார்கள். சனியும் வியாழனும் மிகவும் நெருக்கமானவர்கள். ஆகாயல் தனுசு ராசிக்கு எந்த விதமான தாக்கமும் இல்லாமல் வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும்.
இந்த ராசிக்காரர்களிடம் சண்டை போட்டு ஜெயிக்க முடியாது.. |
கும்ப ராசி:
கோவில் கலசங்களை அடையாளமாக கொண்டுள்ள கும்ப ராசிக்காரர்களுக்கு நிதிநிலையில் எந்த பிரச்சனையும் வராது என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது. ஏனென்றால் கும்ப ராசிக்கு சனி பகவான் அதிபதியாக உள்ளார். அதனால் சனிபகவானுக்கு பிடித்த ராசியில் கும்ப ராசியும் ஒன்று.
மகர ராசி:
பொதுவாக மகர ராசிக்காரர்கள் அவர்களுடைய திறமையினை வெளிப்படுத்தி வெற்றி பெறுவதற்காக விடாமல் முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள். அதுமட்டும் இல்லாமல் மகர ராசிக்கும் சனிபகவன் அதிபதியாக உள்ளார். அதனால் மகர ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் அருள் எப்போதும் இருக்கும் என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |