மகா சிவராத்திரி வரலாறு..! Maha Shivaratri History..!

Maha Shivaratri History

மஹா சிவராத்திரி உருவான வரலாறு..! History Of Maha Shivaratri Story In Tamil..!

Maha Shivaratri In Tamil / மஹா சிவராத்திரி வரலாறு: இன்றைய பொதுநலம்.காம் பதிவில் அனைவருக்கும் பிடித்த கடவுளான சிவனின் சிவராத்திரி தோன்றிய வரலாறுகளை பற்றி இன்றைய பதிவில் பார்க்கலாம். சிவராத்திரி நன்னாள் என்பது சிவனுக்கு மிகவும் சிறப்பான நாள் என கூறப்படுகிறது. சிவராத்திரி என்பது மாசி மாதத்தில் நள்ளிரவில் கொண்டாடப்படும் விழாவாகும். சரி வாங்க இப்போது மஹா சிவராத்திரி உருவான வரலாற்றை முழுமையாக படித்து தெரிந்துக்கொள்ளுவோம். 

மகாசிவராத்திரி கொண்டாடப்படும் நேரம்:

Maha Shivaratri In Tamil

மகாசிவராத்திரி என்பது இந்து மதத்தில் கொண்டாடப்படும் சிறப்பான விசேஷமாகும். இந்த விழாவானது மாசி மாதத்தில் தேய்பிறையில் சதுர்த்தசி (14 ஆம் திதி) என்று சொல்லக்கூடிய திதியில் நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பாக கொண்டாடப்படும் விழா.

ஒவ்வொரு மாதமும் அமாவாசை முன் தினம் சதுர்த்தசியில் இருக்கும் சிவராத்திரியை மாத சிவராத்திரி என்று சொல்லப்படுகிறது.

சிவராத்திரி தோன்றிய இடம் வரலாறு:

Maha Shivaratri In Tamil

மஹாசிவராத்திரி திருவண்ணாமலை என்ற இடத்தில் தோன்றியது. சிவன் குடியிருக்கும் பஞ்ச பூத ஸ்தலத்தில் ஒன்றான அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை சிறந்து விளங்குகிறது  .

மலை யுகங்கள்:

Maha Shivaratri In Tamil

மலை யுகங்களான கிரேதாயுகத்தில் திருவண்ணாமலை “தங்க மலையாகவும்”  கிரேதாயுகத்தில் தங்க மலைக்கு அடுத்து “வெள்ளி மலையாகவும்” யுகங்களில் அடுத்து துவாராயுகத்தில் “செம்பு மலையாகும்” கலியுகத்தில் “மண் மலையாகவும்” யுகங்கள் இருக்கின்றன. இந்த நான்கு யுகங்களையும் சதுர யுகம் என்று அழைக்கப்படுகிறது.

சிவராத்திரி வரலாறு:

சதுர யுகங்கள் பல கடக்கும் நிலையில் பிரளயங்கள் ஏற்படுகிறது. ஒவ்வொரு யுகங்களிலும் அண்ணாமலையார் அருளிகிறார். அவற்றில் தான் சிவராத்திரி தோன்றியது என்கின்றனர்.

பிரம்மதேவருக்கும், விஷ்ணுவுக்கும் நான்தான் பெரியவன் என்ற விவாதம் ஏற்பட்டது. அதனால் இருவரும் கயிலை மலையில் இருக்கும் சிவபெருமானிடம் தீர்வை கேட்க சென்றனர். பிரம்மதேவரும், விஷ்ணுவும் பிரச்சனையை கூறுகின்றனர். சிவபெருமான் உடனே நான் விஸ்வரூபம் எடுக்கிறேன் என்றார்.

சிவபெருமான் எடுக்கும் விஸ்வரூபத்தை இரண்டு பேரில் யார் முதலில் அறிந்து வருகிறார்களோ அவர்கள் தான் பெரியவர் என்று தீர்வை முடிக்கிறார். சிவபெருமானின் அவதாரத்தை காண இரண்டு பெரும் செல்கின்றனர்.

newஓம் நம சிவாய மந்திரம் மற்றும் சிவனின் 108 போற்றி..!

சிவபெருமான் அவதாரம்:

பிரம்மதேவர் அவதாரத்தை தேடி மிகவும் சோர்வடைந்தார். திடீரென்று பிரம்மதேவருக்கு அருகில் தாழம்பூ ஒன்று தோன்றியது. அந்த பூவிடம் இவர் எங்கிருந்து வருகின்றாய் என்று விசாரித்தார். அந்த பூவானது கூறிய பதில் எம்பெருமானின் முடி உச்சியில் இருந்து வருகிறேன். இப்போது பூமியை நோக்கி செல்கிறேன் என்றது தாழம்பூ.

பிரம்மதேவர் பெரியவர் என்ற பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக தாழம்பூவிடம் ஒரு பொய் கூற சொன்னார். சிவபெருமானிடம் பிரம்மதேவர் தலையின் திருமுடியை அறிந்து விட்டார். என்னையும் அங்கிருந்து தான் எடுத்து வந்தார் என்று பொய்யாக கூறவேண்டும் என்றார் பிரம்மதேவர்.

பிரம்மதேவரும் விஷ்ணுவும்:

Maha Shivaratri In Tamil

பிரம்மதேவர் கூறிய பொய்யிற்கு தாழம்பூ ஒத்துக்கொண்டது. சிவபெருமானிடம் விஷ்ணு என்னால் திருவடியை அடைய முடியவில்லை என்று கூறினார். அடுத்து பிரம்மதேவர் நான் திருமுடியை கண்டறிந்து விட்டேன். அதற்கான சாட்சிதான் இந்த தாழம்பூ என்றார் பிரம்மதேவர்.

பிரம்மதேவர் கூறிய பொய் செய்திகளை மாறாமல் தாழம்பூ பெருமானிடம் கூறியது. சிவபெருமான் எல்லாவற்றையும் தெரிந்துக்கொண்டு நீ பொய் செய்திகளை கூறுகிறாய். பிரம்மதேவரை பார்த்து சிவபெருமான் இந்த உலகத்தில் உனக்கான ஆன்மீக இடம் கிடையாது என்று கோபமாக கூறினார் . அடுத்ததாக சிவபெருமான் தாழம்பூவை பார்த்தும் என்னுடைய பூஜையில் இடம் இல்லை என்று கூறிவிட்டார்.

லிங்கம் உற்பத்தியான காலம்:

Maha Shivaratri In Tamilஇது நடந்த இடம் திருவண்ணாமலையில் மாசி மாதத்தில் தேய்பிறையில் சதுர்த்தசி எனும் திதியில் நள்ளிரவில் விஸ்வரூப தரிசனத்தை சிவபெருமான் கொடுத்தார். இதனை லிங்கோத்பவ காலம் என்று அழைக்கின்றனர்.

புண்ணியம் தரும் சிவராத்திரி:

Maha Shivaratri In Tamilசிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து அன்று நடக்கும் ஆறுகால பூஜைகளையும் கண்டு தரிசனம் செய்து வந்தால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். நள்ளிரவு முழுவதும் கண் விழிக்க முடியாதவர்கள் லிங்கோத்பவ கால நேரம் வரை பூஜை செய்துவந்தால் முழு பலனையும் பெற்றதாக சமம் என்று கூறுகிறார்கள்.

பூஜை நடைபெறும் இடம்:

Maha Shivaratri In Tamilலிங்கோத்பவ பூஜையானது திருவண்ணாமலையில் இருக்கும் மூலவருக்கு பின்புறம் லிங்கோத்பவர் சிலைக்கு இன்றும் பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த பூஜையை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்து வருவார்கள்.

சிவ வழிபாடுகள்:

Maha Shivaratri In Tamilசிவபெருமான் இருக்கும் அண்ணாமலையில் பூஜை தோன்றியதால் திருவண்ணாமலையில் தேவார திருவாசக ஸ்தோத்திரத்தை பாடி பக்தர்கள்  வலம் வருகின்றனர்.

பூஜையில் கலந்து கொள்ளமுடியாதவர்கள் அருகில் இருக்கும் சிவன் ஆலயத்தில் சென்று தரிசனம் செய்வதும், திருவண்ணாமலை சென்று தரிசனம்செய்ய முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே அருகிலிருக்கும் சிவாலயத்திற்கு சென்றும் சிவனை வழிபட்டு வருகிறார்கள்.

ஆலயத்திற்கு சென்றும் வழிபாடு செய்ய முடியாதவர்கள் தாங்கள் வீட்டு பூஜை அறையில் அமர்ந்து தேவார பாடலை பாடி வழிபடுவதும் சிறந்த புண்ணியமாகும்.

செல்வ செழிப்பு பெற:

Maha Shivaratri In Tamilநம்மிடமிருக்கும் தீய சக்திகள் விலகி, நல்வினைகள் அனைத்தும் நம்மிடம் சேர்ந்து, இல்லத்தில் அனைத்து வித செல்வங்களும் வர, இறையருள் பெற்று வாழ இந்த சிவராத்திரி பூஜையை அனைவரும் செய்ய வேண்டும்.

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்