திருமண ரேகை பலன் | தார ரேகை பலன் | Thirumana Regai Palangal

marriage line

திருமண ரேகை பலன்கள் | Thirumana Regai in Tamil..!

Thirumana Regai Palangal:- ஒவ்வொருவருக்கும் தங்கள் எதிர்காலத்தை பற்றி தெரிந்து கொள்ள மிகுந்த ஆர்வம் இருக்கும். அதில் நாம் எவ்வளவு நாள் வாழப்போகிறோம் என்பதாகட்டும், தொழிலாகட்டும், பணம் சம்பாதிப்பதாகட்டும், காதல் அல்லது திருமணமாகட்டும், இவற்றையெல்லாம் தெரிந்து கொள்ள அதிக ஆர்வம் கொள்வோம். அதிலும் குறிப்பாக காதல் மற்றும் திருமண வாழ்க்கையை பற்றி தெரிந்துகொள்வதற்கு மிகுந்த ஆர்வம் கொள்வோம். அந்த வகையில் காதல் மற்றும் திருமண வாழ்க்கையை குறித்து கைரேகை சாஸ்த்திரத்தில் தார ரேகை அல்லது திருமண ரேகை என்று ஒரு ரேகை உள்ளது. அது ஒருவரின் காதல், திருமணம் மற்றும் வாழ்க்கை துணையை குறித்து கூறும் ஒரு ரேகையாகும். சரி இந்த பதிவில் திருமண ரேகை பலன்களை (Thirumana Regai Palangal) பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.

குழந்தை எந்த கிழமையில் பிறந்தால் அதிர்ஷ்டம்..!

திருமண ரேகை இருக்கும் இடம் – Thirumana Regai in Tamil:-

 Marriage line in hand

நம் சுண்டு விரலுக்கும், இதய ரேகைக்கும் இடையே புதன் மேட்டின் பக்கவாட்டில் சரிவில் உள்ள ரேகையைத் தான் நாம் திருமண ரேகை அல்லது தார ரேகை என்று சொல்கிறோம்.

மேல் காட்டப்பட்டுள்ள படத்தில் உள்ளது போல் திருமண ரேகையானது ஒன்றுக்கு மேற்பட்ட கோடுகள் கூட சிலருக்கு இருக்கும். சிலருக்கு ஒரு கோடு மட்டுமே இருக்கும். சிலருக்கு இந்த திருமண ரேகையே இருக்காது. சரி இந்த தார  ரேகை ஒருவருக்கு எப்படி இருந்தால் என்ன பொது பலன் என்பதை பற்றி இப்பொழுது தெரிந்துகொள்வோம் வாங்க.

எப்பொழுது திருமணம் நடைபெறும்: 1

ஒருவருக்கு திருமண ரேகையானது இதய ரேகைக்கு அருகில் இருந்தால் 20 முதல் 25 வயதுக்குள் அவர்களுக்கு திருமணமாகிவிடும். நடுவில் இருந்தால் 25 வயது முதல் 30 வயதுக்குள், சுண்டு விரலுக்கு அருகில் இருந்தால் 35 வயதிற்கு மேல் ஒருவருக்கு திருமணம் ஆகும்.

இரண்டு அல்லது அதற்கு மேல் திருமண ரேகை இருந்தால் என்ன பலன்: 2

ஒருவருக்கு திருமண ரேகையானது இரண்டு அல்லது அதற்கு மேல் இருந்தால் என்ன பொது பலன் என்று பார்க்கலாம்.

ஒருவருக்கு திருமண ரேகையானது சுண்டு விரலுக்கு, இதய ரேகைக்கு இடையில் ஒரு ரேகை நீளமாகவும், ஒரு ரேகை குட்டையாகவும் இருந்தால், அதில் நீளமான ரேகை திருமணத்தையும், குட்டையான ரேகை காதல் முறிவையும் குறிக்கின்றது.

ஒருவருடைய கையில் அடர்த்தியாக, அதேபோல் ஒரே நீளமுள்ள இரண்டு ரேகைகள் இருந்தால் அவர்களுக்கு இரண்டு திருமணம் நடைபெற வாய்ப்புள்ளது என்று அர்த்தம் அல்லது வேறு ஒருவருடன் உறவும் உள்ளது என்றும் அர்த்தமாகிறது.

சிலருக்கு நிறைய திருமண ரேகை இருக்கும் அவர்கள் மிகவும் ரொமெண்டிக்கானவர்களாகவும் நிறைய முறை காதலில் விழுந்து எழுபவராக இருப்பார்கள், மேலும் பலரை ஒருதலை காதல் செய்து தோல்வியை கூட கண்டிருப்பார்கள்.

பல்லி விழும் பலன்..!

Marriage line in hand – பொது பலன்: 3

திருமண ரேகை கீழே நோக்கி இதய ரேகையை தொட்டு நின்றால் அது அவர்களுடைய காதல் திருமணத்தை குறிக்கும். காதல் திருமணமும் தோல்வியில் முடிவடையும். பின் இரண்டாம் திருமணம் தான் நிலைத்து நிற்கும்.

Thirumana regai in tamil – பொது பலன்: 4

திருமண ரேகைக்கு குறுக்கே சிறு ரேகை இருந்தால் அது அவர்களது திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை ஏற்படுத்துவதுடன், விவாகரத்து வரை கொண்டு செல்லும்.

திருமண ரேகை பொது பலன்: 5

சிலருக்கு திருமண ரேகையின் முடிவில் கிளைகள் இருக்கும், அது உங்கள் துணையின் ஆரோக்கிய பிரச்சனையால் அடிக்கடி அவஸ்த்தைபடுவதாக இருக்கும்.

தார ரேகை பொது பலன்: 6

திருமண ரேகையில் சிறிது விரிசல் இருந்தால், அது அவர்களின் திருமணத்திற்கு பின் சிறிய பிரச்சனையால் சிறிது காலம் பிரிந்திருப்பார்கள்.

Marriage line in hand – பொது பலன்: 7

திருமண ரேகை ஆரம்பத்தில் இரு பிரிவுகளாக காணப்பட்டால், அவர்களுக்கு அவ்வளவு சீக்கிரமாக திருமணம் நடைபெறாது, அப்படி திருமணம் நடைபெற்றாலும் அவர்களுடைய குடும்ப வாழ்வில் சில காலம் மகிழ்ச்சி இருக்காது.

Thirumana regai in tamil – பொது பலன்: 8

ஒருவருக்கு திருமண ரேகையே இல்லாமலோ அல்லது அந்த ரேகை மேல் நோக்கி வளைந்து சுண்டுவிரலை தொடுமாறு இருந்தாலோ அது வாழ்நாள் முழுவதும் சந்நியாசியாக வாழ்வதை குறிக்கின்றது.

காகம் தலையில் தட்டினால் என்ன காரணம்?

தார ரேகை பொது பலன்: 9

திருமண ரேகை கீழ் நோக்கி வளைந்து இருந்தால் அவர்கள் அவருடைய வாழ்க்கை துணையை மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும்.

திருமண ரேகை பொது பலன்: 10

Thirumana Regai Palangal: ஒருவருக்கு ஒரே ஒரு அழுத்தமான திருமண ரேகை இருந்தால் அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் அவர்களின் திருமண வாழ்க்கை வாழ்நாள் முழுவதும் மிகவும் சந்தோஷமாக நீடித்து நிலைக்கும் என்பதை குறிக்கின்றது.

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்