சனி பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு எப்போது முடிவடைகிறது..

Advertisement

Meena Rasi Sani Peyarchi 2023 to 2026 Tamil

ஜோதிடத்தில் சனி பகவான் ரொம்ப முக்கியமான ராசியாக கருதப்படுகிறார். இவர் ராசியினர் செய்யும் செயல்களை பொறுத்து தண்டனையை வழங்குவார். அதனால் தான் இவரை தர்மத்தின் தலைவர் என்று அழைக்கிறோம். அதனால் மீன ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சி  போகிறது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

மீன சனி பெயர்ச்சி பலன்கள்:

மீன ராசி

மீன ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்த சனிபகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 17.01.2023 முதல் 29.03.2025 வரை உள்ள காலகட்டங்களில்  ஏழரைச் சனியின் தொடக்கமாக வருகிறார். ஏழரைச்சனியாக இருந்தாலும் நல்ல பலன்களையே தருவார். இப்போது ராசிக்கு 12-ல் சென்று மறைவதால் தடைபட்டுக் கொண்டிருந்த பல காரியங்களை இனி விரைந்து முடிப்பீர்கள்.

பணியிடம்:

பணியிடம் சற்று மந்தமாக காணப்படும். பணிகள் அதிகமாக இருப்பதால் பணிகளை திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். பணிகளில் பொறுப்புகள் அதிகமாக இருப்பதால் பதற்றமடைவீர்கள். வேலை இல்லாதவர்களுக்கு பிடித்த வேலை கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பராக இருந்தால் அதில் வெற்றி காண்பதற்கு ரொம்ப கஷ்டப்பட்டு உழைக்க வேண்டியிருக்கும்.

மகர ராசிக்கு ஏழரை சனி எப்போது முடியும்

குடும்பம்:

குடும்பத்தில் இருக்கும் பெற்றோர்கள்,உடன் பிறந்தவர்கள் நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்திற்கும் பக்க பலமாக இருப்பார்கள். வீட்டில் வயதானவர்கள் இருந்தால் அவர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும். குழந்தைகளுக்காக அதிக செலவு செய்ய நேரிடும். இதனால் கவலை  அடைவீர்கள். திருமணம் ஆகாதவர்கள் தங்களின் துணையை தேர்ந்தெடுக்கும் போது கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும்.

திருமண வாழ்க்கை:

திருமண வாழ்க்கையில் உங்களின் துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். நாட்கள் ஆக ஆக இருவருக்கிடையே நல்லுறவு குறைந்து விடும். அதனால் உங்களின் துணையை புரிந்து கொள்வதன் மூலம் உறவில் நல்லுறவு நீடிக்கும்.

நிதிநிலைமை:

சனி பெயர்ச்சி கால கட்டத்தில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். மேலும் உங்களுக்கு நெருங்கிய உறவுகளாக இருந்தாலும் அவர்கள் சொல்லும் எல்லா விஷயத்தையும் நம்பி இறங்காதீர்கள். மற்றவர்களிடம் கடன் வாங்குவதை தவிர்த்து விடவும். புதிதாக தொழில் தொடங்கினால் அதை ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்து செயல்படவும்.

தனுசு ராசி ஏழரை சனி முடிவு எப்போது?

நட்சத்திர படி சனி பெயர்ச்சி: 

மீன ராசி அவிட்டம் நட்சத்திரத்தில் 24.11.2023 வரை சனி பகவான் செல்வதால் புதிதாக திட்டங்கள் ஏதும் இருந்தால் அவை நிறைவேறும். இந்த கால கட்டத்தில் உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிதாக நிலம், வீடு, வாகனம் போன்றவை வாங்குவீர்கள்.

சதயம் நடச்த்திரத்தில் பிறந்தவர்களுக்கு 27.12.2024 சனி பெயர்ச்சி இருப்பதால் வாகனத்தில் செல்லும் போது கவனமாக செல்ல வேண்டும். தங்கம் வாங்கிசேமிப்பீர்கள். வெளிநாடு அல்லது கோவிலுக்கு சென்று வருவீர்கள்.

7.4.2024 முதல் 29.03.2025 வரை பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திருமண தடைகள் ஏதும் இருந்தால் அவை  நீங்கி நல்ல வரன் கைகூடும். ஆன்மிகத்தில் அதிகமாக ஈடுபடுவீர்கள்.

பரிகாரம்:

சனிக்கிழமை உடல் ஊனமுற்றவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு சனிக்கிழமையும் கணபதி, ஆஞ்சநேயர் மற்றும் விநாயகரை வழிபடுங்கள். ஹனுமார் சாலீஸாவை பாராயணம் செய்யுங்கள்.

சனிக்கிழமை ஏழை எளியவர்களுக்கு போர்வை மற்றும் ஆடை தானம் செய்யுங்கள்

அசைவம் மற்றும் மது போன்றவற்றை சனிக்கிழமையில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

கல் உப்பு ஜாடியில் இந்த இரண்டு பொருளை வைய்யுங்கள்..  தீராத கடனும் தீர்ந்து விடும் 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement