மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை பற்றி பலருக்கும் தெரியாத 20 சுவாரஸ்யமான உண்மைகள்..!

madurai meenakshi amman temple facts in tamil

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் உண்மைகள்

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் நாம் பார்க்கப்போவது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் 20 சுவாரஸ்யமான உண்மைகள் தான். பொதுவாக மதுரை என்றதுமே நாம் அனைவர்க்கும் நினைவிற்கு வருவது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தான் . அப்படிப்பட்ட புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள சுவாரஸ்யமான உண்மைகள் பற்றிதான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

இந்த பதிவை முழுதாய் படித்து பயன் பெறுங்கள் அனைவரும் வாங்கள் பதிவினுள் செல்லலாம்..!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் 20 சுவாரஸ்யமான உண்மைகள்:

 • சக்தி பீடங்களில் ஒன்றான இந்த பீடத்திற்கு ராஜமாதாங்கி சமலா பீடம் என்று பெயர்.
 • மீனாட்சி சுந்தரேசுவரர் என்ற பெயரில் தமிழகத்தில் உள்ள 366 கோவில்களில் இந்த கோவில் தான் முதன்மையான கோவில் ஆகும்.
 • சிவபெருமான் தனது திருவிளையாட்டுகளில் லவற்றை இந்த கோவிலை சுற்றியே நடத்திருக்கிறார்.
 • ஒரு ஆண்டிற்கு 274 நாட்கள் திருவிழா காணும் இந்த ஸ்தலம் நவகிரகங்களில் புதன் ஸ்தலம்மாகும்.
 • இங்குள்ள மீனாட்சி அம்மனின் சிலை மரகதகற்களால் ஆனது.இங்குள்ள மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேசுவரரின் கருவறைகள் தேவேந்திரனால் அமைக்கபட்டது என்று ஸ்தலவரலாறு கூறுகின்றது.32 சிங்கங்கள்,64 சிவகணங்கள் ,8 கல்யானைகளும் தங்கிநிற்கும் ஆபூர்வ கருவறை கொண்டது இந்த கோவில்தான்.
 • விருத்த அசுரனை கொன்ற இந்திரன் பிரம்மஹஸ்தி தோஷம் நீங்க பாண்டியநாட்டில் உள்ள கடம்பவனத்தில் இருந்த சுயம்புலிங்கத்தை வணங்கி தோஷம் நீங்கப்பெற்றார்.பின்பு அந்த லிங்கம் தேவர்களால் பூஜிக்கப்பட்டது.அந்த லிங்கமே ஒரு வியாபாரி கூறிய தகவலின்படி குலசேகர பாண்டிய மன்னனால் கண்டறியப்பட்டு கோவில் உருவாக்கபட்டு பின்னர் அந்த கோவிலைச்சுற்றி நகரமும் உருவானது அதுவே இன்றைய மதுரை மாநகரம் ஆகும்.
 • சிவபெருமானால் ஆதில் படைக்கப்பட்ட இக்கோவிலின் தீர்த்தம் ஆதி தீர்த்தம் என்று அழைக்கப்படுகின்றது. பின்னர் இத்தீர்த்தமே பொற்றாமரை குளம் என்று பெயர் மாறியது. இந்த பொற்றாமரை குளத்திலிருந்து 450ஆண்டுகளுக்கு முன்னதாக ஒரு ஸ்படிக லிங்கம் கண்டுஎடுக்கபட்டது அந்த லிங்கம் இப்பொழுது தர்மபுரா ஆதீனத்தில் பூஜிக்கப்பட்டுவருகிறது .
 • சிவன் ஸ்தலம் அனைத்திலும் இடது பாதத்தை தூக்கிக்கொண்டு ஆடும் நடராஜர் இந்த மீனாட்சி அம்மன் கோவிலில் வலது பாதத்தை தூக்கிக்கொண்டு ஆடுகிறார். பாண்டிய மன்னன் ராஜசேகரனுக்கு சிவபெருமான் இப்படி காட்சி அளித்ததாக சொல்லப்படுகிறது.
 • மீனாட்சி அம்மன் கோவிலில் 4 பெரிய கோபுரங்களும்,8 சிறிய கோபுரங்களும் உள்ளன. கிழக்குவாசல் கோபுரம் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் 1238-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.மேற்குகோபுரம்பராக்கிரம பாண்டியனால் 1347-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. தெற்குகோபுரம் சிராமலை செவ்வந்திஊட்டி என்பவரால் 1559-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. வடக்குகோபுரம் கிருஷ்ணாவிரப்ப நாயக்கரால் 1572-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.
 • மீனாட்சி அம்மன் கோவிலிருக்கு எதிரில் உள்ள அஷ்டசக்தி மண்டப தூணில் அஷ்டசக்திகளான கௌமாரி,ரௌத்ரி,வைஷ்ணவி,மகாலட்சுமி,எஃஞருபினி,சமலை,மகேஸ்வரி,மனோன்மணி ஆகிய அஷ்டசக்திகளின் ரூபங்கள் செதுக்க பட்டிருக்கின்றது.
 • 17-ஆம் நூற்றாண்டில் திருமலை நாயக்கருக்கு அரண்மனை கட்டுவதற்காக வண்டியூர் மாரி அம்மன் கோவிலின் குளத்தில் மண் எடுக்கப்பட்டது அப்போது மண்ணிற்கு அதிலிருந்து முக்குறுணிவிநாயகர் சிலை கண்டுஎடுக்கப்பட்டதாகவும் அதனை மன்னார் திருமலை நாயக்கர் மீனாட்சி அம்மன் கோவிலில் பிரதிஷ்டை செய்ததாகவும் ஸ்தல வரலாறு கூறுகிறது.
 • மதுரை வடக்குமாசிவீதியில் கோவில் கொண்டுள்ள செலத்தம்மன் மீனாட்சி அம்மனின் அம்சம் என்று கருதுவதால் மீனாட்சி அம்மனின் திருக்கலியாணத்தின் பொது முதலில் இந்த அம்மனுக்கும் ஒரு புடவை,தாலி,மெட்டி ஆகியவை பல்லக்கில் ஏற்றி இன்று அனுப்பட்டுவருகிறது.
 • 1310-ஆம் ஆண்டில் அலாவுதீன் கில்ஜியின் தளபதியான மாலிக்கபூரின் ஆட்டுழியங்களால் பெரும் சேதத்திற்கு உள்ளனது மீனாட்சி அம்மனின் கோவில் இங்கு இருந்த அம்மன் மற்ற சுவாமி சன்னதிகளும் அதனை சுற்றியுள்ள சில மண்டபங்களும் அந்த பெரும் சேதத்திலிருந்து தப்பியது.இதன் பிறகு 68 ஆண்டுகள் மூடியே கிடந்தது. அதன் பிறகு 1378-ல் விஜயநகர சாம்ராஜ்யத்தை சேர்ந்த குமார கம்பனா என்பவரால் மீண்டும் புதிப்பித்து திறக்கபட்டது.
 • மூர்த்திநாயனார் சந்தனக்கட்டை கிடைக்காததால் தன் முழங்கையை சந்தனம் தேய்க்கும் கல்லில் வைத்து தேய்க்க துவங்கினார்.சிவபெருமான் அவரை தடுத்து அவரை அரசனாக்கினார். இதை நிலைநிறுத்தும் வகையில் மூர்த்திநாயனார் தனது கையை தேய்த்த அந்த கல் இன்றும் மீனாட்சி அம்மனின் கோவிலில் இன்றும் உள்ளது.
 • ஆதிசங்கரர் மீனாட்சி அம்மனை தரிசித்து மீனாட்சி பஞ்சரத்தினம்,மீனாட்சிஅஷ்டகஸ்தோத்திரம் இவற்றையெல்லாம் பாடியுள்ளார்.
 • காஞ்சிகாமக்கோடி பீடம் மற்றும் செங்கேறி சாரதாபீடம் ஆகியவற்றில் ஆஸ்த்தான வித்துவானாக திகழ்ந்த மகான் பீவியுர் சுப்பிரமணிய சாஸ்திரிகளுக்கு கண் பார்வை இழந்து கஷ்டப்பட்டார் அவர் மதுரை மீனாட்சி அம்மனை போற்றி 15 பாடல்களை கொண்ட ஸ்துதி ஒன்றை பாடிகண்பார்வையை திரும்ப பெற்றார் என்று கூறப்படுகிறது. அந்த ஸ்துதியை இன்றும் பார்வை குறை உள்ளவர்கள் மீனாட்சி அம்மனின் கோவில் பாடினால் நல்ல கண்பார்வை கிடைக்கும் என்று நம்பப்படுகின்றது.
 • மீனாட்சி அம்மனின் கோவிலின் முகமண்டபம் மிகவும் வரலாறு சிறப்பு உள்ளது இந்த மண்டபத்தில்தான் குமரகுருபரர் தான் எழுதிய மீனாட்சி அம்மன் பிள்ளைத்தமிழை திருமலை நாயக்கருக்கு படிக்காட்டினார். இந்த நிகழ்வு நடந்தபோது மீனாட்சி அம்மனே குழந்தை வடிவில் வந்து குமரகுருபரருக்கு அருள் புரிந்ததும் இந்த மண்டபத்தில்தான்.இந்த மண்டபத்தில்தான் சித்திரை திருவிழாவின்போது மீனாட்சி அம்மனுக்கு முடிசூட்டு விழாவும் நடைபெறுகிறது.நாயகமானர்கள் அம்மனிடம் இருந்து செங்கோல் வாங்கியதும் இந்தமண்டபதில்தான்.
 • சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வே மீனாட்சி அம்மனின் திருகல்யாணம்தான் இந்த திருகல்யாணத்தின்போது மணமக்களுக்கு அணிவிக்கும் நகைகள் திருமலை நாயக்கர் அம்மனுக்கு காணிக்கையை அளித்ததுதான்.
 • இந்த கோவிலின் சிறப்புகளின் மகுடமாக திகழ்வது இந்த கோவிலின் ஆயிரம்கள்மண்டபம் விஸ்வநாத நாயக்கர் மதுரையை ஆட்சி செய்தபோது அவருக்கு படைத்தளபதியாக இருந்தவர் அரியநாத முதலியார் இவரே இந்த ஆயிரம்கள்மண்டபத்தை கட்டியவர் ஆவர்.
 • இந்த ஸ்தலம் அம்மை ஆட்சிபுரியும் ஸ்தலம் என்பதால் இங்கு வந்து வேண்டிக்கொண்டால் அம்மன் பதவியோகும் தருவாள் என்று நம்பப்படுகிறது. மேலும் இந்த ஸ்தலத்தில்தான் சிவபெருமானே வந்து அம்பிகையை திருமணம் செய்து கொண்டதால் இங்கு வந்து அம்மனை வேண்டிக்கொண்டால் பெண்களுக்கு உடனடியாக திருமணம் நடக்கும் என்று நம்பப்படுகின்றது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில் தல வரலாறு..!

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil