மேஷம் குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022

Advertisement

Mesham Guru Peyarchi 2021 to 2022 in Tamil

ஒவ்வொரு கிரகம் பெயர்ச்சி ஆகும் போது, நாம் எதிர்பார்க்கும் ஒரே விஷயம் என்ன என்றால் ஏதாவது ஒரு விஷயத்தில் நமக்கு நல்லது நடக்குமா? என்று தான் நமது எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் நவம்பர் மாதம் 13.11.2021 அன்று சனிக்கிழமை அன்று மாலை 6.22 மணிக்கு மகர ராசியில் உள்ள அவிட்டம் 2-ம் பாதத்திலிருந்து கும்ப ராசியில் இருக்கும் அவிட்டம் நட்சத்திரம் 3ம் பாதத்திற்கு குரு பெயர்ச்சி நிகழ உள்ளது. ஆகவே மேஷம் ராசி, மேஷம் லக்கனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த குருபெயர்ச்சி எப்படி இருக்கும் என்பதை பற்றி விரிவாக படித்தறியலாம் வாங்க.

மேஷம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2021:

மேஷம் ராசி

கடந்த காலத்தில் குருபகவான் தங்களது ராசியில் 10-ம் இடத்தில் சஞ்சரித்தார். இந்த குரு பெயர்ச்சியின் போது உங்களது ராசியில் 11-ம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகப்போகிறார். மேஷம் ராசிக்காரர்களுக்கு 11-ம் இடம் என்பது லாப ஸ்தானம் ஆகும். மேலும் மனமகிழ்ச்சியை குறிக்கக்கூடிய இடம், சந்தோசத்தை குறிக்கக்கூடிய இடம் ஆகும் ஆகவே நீங்கள் செயல்படுத்தும் அனைத்து செயல்களிலும் நல்ல லாபத்தை தங்களுக்கு குரு பகவான் வழங்குவார்.

ஆரோக்கியம்:

உங்கள் ராசி அதிபதியாக அழைக்கப்படுபவர் செவ்வாய் பகவான் ஆகவே குரு பகவான் செவ்வாய் நட்சத்திரத்தில் இருப்பதினால் உங்களுக்கு இதுவரை  இருந்த வந்த உடல்நல பிரச்சனைகள், மனதளவில் இருந்து வந்த பிரச்சனைகள், மனக்குழப்பங்கள் அனைத்தும் நீங்கும். மேலும் உங்களது செயல்திறன், சிந்தனை திறன், அறிவு திறன் போன்றவையெல்லாம் மேம்படும். உடல் ஆரோக்கியம் சிறந்து விளங்கும்.

பொருளாதாரம் நிதி நிலை:

குருபகவான் இந்த பெயர்ச்சியின் போது தங்களது ராசியில் லாப ஸ்தானத்தில் பெயர்ச்சியாவதால். வீட்டில் வருமானம் பெருகும். தொழில்/ உத்தியோகத்தில் லாபம் நன்கு கிடைக்கும். வீட்டின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வீர்கள். வீடு, மனை, வாகனம் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அவர்களது விருப்பங்கள் நிறைவேறும். உங்களது கடன் பிரச்சனைகளுக்கெல்லாம் நிரந்தரத் தீர்வு கிடைக்கும்

குடும்பம்:

வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். கணவன் மனைவி உறவுக்குள் ஒற்றுமை காணப்படும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்கள் சகோதரர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி ஒற்றுமை அதிகமாகும். உங்கள் சகோதரர்கள் உங்கள் செயல்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். புண்ணியத் தலங்களுக்குச் சென்று இறைவழிபாடுகளையும் வேண்டுதல்களையும் நிறைவேற்றுவீர்கள்.

மிதுனம் குரு பெயர்ச்சி பலன்கள்

கல்வி:

மாணவர்கள் படிப்பில் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். கல்வியில் சிறந்து விளங்குவார்கள். கலைஞர்களுக்கு இது பொன்னான காலம். புதிய வாய்ப்புகள் உங்கள் வாசலைத் தட்டும். மொத்தமாக இந்த குருப்பெயர்ச்சி இதுவரை தடுமாற்றதோடு இருந்த மேஷம் ராசிக்காரர்களை தாங்கிப் பிடித்து வெற்றிப்பாதையில் அழைத்து செல்லும்.

பரிகாரம்:

இந்த பெயர்ச்சியில் குருபகவான் தங்களுக்கு வழங்க இருக்கும் முழுமையான பலன்களை பெற தக்கோலம் தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள். வாழ்வில் ஆதரவில்லாமல் தவிக்கும் முதியோர்களுக்கு உங்களால் ஆன உதவிகளைச் செய்யுங்கள். குருவின் அருள் உங்களோடு இருக்கும்.

இதையும் படியுங்கள்–> குரு பெயர்ச்சி 2022 எப்போது வருகிறது?

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement