மிளகுடன் இந்த பொருளை சேர்த்து வீட்டில் வைய்யுங்கள்.! கோடி கடனும் எளிதில் அடையும்.!

Advertisement

Milagu Pariharam

கடன் என்பது அனைவரது வீட்டிலும் இருக்கின்றன பெரும் பிரச்சனை. ஏதோ ஒரு தேவைக்காக நாம் கடன் வாங்கி இருப்போம். இதனை எளிதில் அடைக்க வேண்டும் என்பதற்காக அனைவருமே பெரிதும் முயற்சி செய்து கொண்டு இருப்போம். ஆனால் இதற்கு சரியான நேரம் என்பதே அமையாது. ஏதாவதொரு தடங்கல் வந்து கொண்டே இருக்கும். எனவே ஆன்மீகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் கடனை அடைப்பதற்கான முயற்சிகளுடன் சேர்த்து சில பரிகாரங்களையும் செய்வார்கள். கடனை அடைப்பதற்கு முயற்சி செய்யும் வேலையில் பரிகாரங்களை செய்தால் எளிதில் கடன் அடையும் என்பது அனைவரது நம்பிக்கை. எனவே கடனை அடைக்க கூடிய பரிகாரங்களில் ஒன்றான மிளகு பரிகாரம் பற்றித்தான் இப்பதிவில் பார்ப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

மிளகு பரிகாரம்:

மிளகு பரிகாரம்

இப்பரிகாரத்தை எப்போது செய்ய வேண்டும்.?

இந்த மிளகு பரிகாரத்தை நீங்கள் புதன்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் செய்யலாம். மேலும் இப்பரிகாரத்தை நீங்கள் பிரம்ம முகூர்த்தத்தில் செய்ய வேண்டும். உங்களால் பிரம்ம முகூர்த்தத்தில் செய்ய இயலவில்லை என்றால் காலை 4 மணி முதல் மதியம் 12 மணிக்குள் செய்யலாம் அல்லது மாலை 5 மணி முதல் இரவு 12 மணிக்குள் செய்யலாம்.

கடன் தொல்லை தீர இதை மட்டும் செவ்வாய்கிழமை செய்திடுங்கள்

பரிகாரம் செய்யும் முறை:

முதலில் ஒரு வெள்ளை நிற துணியை எடுத்து கொள்ளுங்கள். அதனை விரித்து, அதில் 1 கைப்பிடி (50 கிராம்) புதிதாக வாங்கி வந்த மிளகு, 1 கைப்பிடி பச்சரிசி மற்றும் பச்சை கற்பூரம் ஆகியவற்றை வைத்து கொள்ளுங்கள்.

 மிளகு பரிகாரம் செய்வது எப்படி

பிறகு, இதனை முடிச்சு போட்டு பூஜை அறையில் வைத்து விளக்கேற்றி வழிபடுங்கள். உங்களுக்கு என்ன பணக்கஷ்டம் இருக்கிறதோ அதனை சொல்லி பிராத்தனை செய்யுங்கள். பிறகு, உங்களுடைய குலதெய்வத்தை நினைத்தும் வழிபாடு செய்யுங்கள்.

பச்சை கற்பூரம்

முடிச்சியினை எங்கு வைக்க வேண்டும்.?

கடவுளை வணங்கி பிராத்தனை செய்த பிறகு, இம்முடிச்சியினை உங்கள் வீட்டில் பணம் வைக்கும் இடத்திலோ அல்லது பீரோவிலோ வைத்து கொள்ளுங்கள்.

இதனை செய்த பிறகு, கடனை அடைப்பதற்கான முயற்சிகளையும் செய்து வந்தீர்கள் என்றால் அதற்கான முழு பலன்களும் கிடைக்கும்.

இம்முடிச்சியினை ஒரு மாதத்திற்கு அப்படியே வைத்து, பிறகு அதனை ஓடும் தண்ணீரில் விட்டு விடுங்கள்.

இப்பரிகாரத்தை நீங்கள் தொடர்ந்து 3 மாதங்களுக்கு செய்து வந்தால் விரைவில் அனைத்து கடன் பிரச்சனைகளும் நீங்கி பணவரவு அதிகரிக்கும்.

ஒரு கைப்பிடி கல் உப்பு போதும் 10 நாட்களில் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement