மிதுன ராசி என்ன தொழில் செய்யலாம்? எந்த தொழில் செய்யக்கூடாது? Mithunam Life Secret in Tamil
Mithunam Life Secret in Tamil – ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்றைய பொதுநலம்.காம் பதிவில் மிதுன ராசிக்காரர்கள் என்ன தொழில் செய்யலாம்? எந்த தொழில் செய்யக்கூடாது? என்பதை பற்றி தன தெரிந்துகொள்ள போகிறோம். ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு வகையான அமைப்புகள் உண்டு. ஆக அந்த அமைப்புகள் படி நாம் செயல்பட்டோம் என்றால் நமது வாழ்க்கையில் முன்னேற முடியும். அந்த வகையில் மிதுனம் ராசியில் அமையக்கூடிய நட்சத்திரங்கள் மிருகசீரிடம் நட்சத்திரம் மூன்றாம் பாதம், நான்காம் பாதம் ஆகும். திருவாதிரை நட்சத்திரம் 1, 2, 3 பாதங்கள் ஆகும். புனர்பூசம் நட்சத்திரம் 1,2,3 பாதங்கள் மிதுனம் ராசியில் வரும். இந்த முதுமை ராசிக்கு அதிபதி புதன் பகவான் ஆவார். மேலும் ஒருவரது வாழ்வில் எந்த துறையில் உத்தியோகம் அமையும், அல்லது எந்த துறையில் சொந்த தொழில் அமையும் என்பதை பற்றி எடுத்துக்கூறுவது லக்கனம் அல்லது ராசியின் 10-ஆம் இடம் ஆகும். ஆக மிதுனம் ராசிக்காரர்களுக்கு 10-ஆம் அதிபதியாக வரக்கூடியவர் குருபகவான் ஆவார். எனவே மிதுனம் ராசிக்காரர்களுக்கு என்ன தொழில் அமையும் என்பதை பற்றி இப்பொழுது அறியலாம் வாங்க.
மிதுன ராசி என்ன தொழில் செய்யலாம்..?
- மிதுனம் ராசியின் 10-ஆம் அதிபதியாக விளங்கும் குருபகவானின் காரகத்தொழில் ஏதாவது ஒன்றில் தான் உத்தியோகம் அல்லது சொந்த தொழில் அமையும் யோகமுடையவர்களாக இருப்பார்கள்.
- குருபகவானின் காரகங்களில் முக்கியமாக பார்க்கப்படுவது பணம் மேலும் ஆன்மிகம், மதம் சம்பந்தப்பட்ட தொழில்களில் ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். அதேபோல் பெரிய அளவில் பணம் புழங்கக்கூடிய உத்தியோகத்தில் பணிபுரிபவர்களாக இருப்பார்கள்.
- நிதித்துறை, நீதித்துறை, கஜானாக்கள், ஆசிரியர் தொழில் போன்ற தொழில்களில் மிதுனம் ராசிக்காரர்கள் அதிகம் யோகமுடியவர்களாக இருப்பார்கள்.
- மேலும் மிதுனம் ராசிக்காரரின் அதிபதி புதன் பகவான் ஆவார். ஆக புதன் பகவானின் காரக தொழிகளும் இவர்களுக்கு யோகம் தரும். புதனின் காரக தொழில்கள் என்று பார்த்தால் கம்ப்யூட்டர், எழுத்து, இலக்கியம், தொலைத்தொடர்பு, கணிதம், கமிஷன், தகவல் தொடர்பு, ஏஜென்சி, பொருளாதாரம் போன்ற துறைகளில் அதிகம் பணிபுரிபவர்களாக இருப்பார்கள்.
- மேலும் மிதுனம் ராசிக்காரர்கள் பலர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிபவர்களாகவும் இருப்பார்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பிறந்த நாளில் திருமணம் செய்யலாமா..?
குறிப்பு: எல்லோருக்கும் ஒரே லக்கனம் ராசி அமைவதில்லை ஆக உங்கள் சுய ஜாதகத்தின் லக்கினம் அல்லது ராசிக்கு யோகராக வரக்கூடிய கிரங்களில் யார் வலு பெற்றிருக்கிறார்களோ அந்த கிரகத்தின் காரக தொழிலையும் நீங்கள் தேர்ந்தெடுத்தல் யோகம் உண்டாகும்.
மிதுனம் ராசிக்காரர்கள் எந்த தொழில் செய்யக்கூடாது என்பதை விட கவனமாக பணியாற்ற வேண்டிய தொழில்கள் – Mithunam Life Secret in Tamil:
மிதுனம் ராசிக்காரர்களுக்கு 7-ஆம் இடம் என்பது பாதகஸ்தானம் ஆகும். அதாவது 7-ஆம் இடத்திற்கும், 10-ஆம் இடத்திற்குரிய குருபகவான் உங்களுக்கு பாதகாதிபதியாக வருவார். ஆக குருபகவானின் காரக தொழிலான பணம் புழங்கக்கூடிய ஆன்மிகம், நிதித்துறை, நீதித்துறை, கஜானாக்கள், ஆசிரியர் தொழில், அரசாங்கத்தில் அதிகார துறையில் இருக்கும் போது அந்த தொழிலை நேரமான முறையில் அரசாங்கத்திற்கு பயந்து செய்யும்பொழுது அந்த தொழில் எந்த ஒரு இடையூறும் வராது. அதுவே அந்த தொழில் நீங்கள் குறுக்குவழியில் அல்லது மற்றவர்களை ஏமாற்ற நினைத்தால் அந்த தொழில் நீங்கள் கடும் சரிவை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
மேலும் மிதுனம் ராசிக்காரர்களுக்கு அதிக பாவியாக வரக்கூடியவர் செவ்வாய் பகவான். இந்த செவ்வாய் பகவான் உங்கள் ராசிக்கு 6 மற்றும் 11-ஆம் இடத்திற்கு வரக்கூடியவர். ஆக செவ்வாய் பகவானின் காரக தொழிலான போலீஸ், ராணுவம், ரியலெஸ்டெட், தீயணைப்பு துறை, எலெட்ரிக்கல், சிவில், ஆப்ரேசன் தொழிலை செய்யும்பொழுது அந்த தொழில் மிகவும் கவனமாக பணியாற்ற வேண்டும். இந்த தொழில்களில் நீங்கள் அலட்சியமாக பணிபுரியும்போது இந்த தொழில் மூலம் உங்கள் உடலுக்கும் மனதிற்கும் அதிக கஷ்டத்தை கொடுக்கும். நேரமியாக பணியாற்றினால் எந்த பிரச்சனையும் ஏற்படாது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பீரோ வைப்பதற்கு சரியான திசை இதுதான்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |