நட்சத்திர பொருத்தம் பார்ப்பது எப்படி? | Natchathira Porutham in Tamil

Advertisement

நட்சத்திர பொருத்தம் | Natchathira Porutham in Tamil | Star Matching table for marriage tamil

Natchathira Porutham in Tamil:- பொதுவாக ஆண், பெண் இருவருக்கும் வரன் தேடும் போது நமக்கு தெரிந்தவர்களிடமோ, உறவினர்களிடமோ அல்லது நண்பர்களிடமோ அந்த ஆண் அல்லது பெண்ணின் நட்சத்திரத்தை சொல்வோம். அதாவது அவர்களுக்கான பொருத்தமான ஜாதகத்தில் உள்ளவர்களை வரன் தேடி பார்க்குமாறு சொல்வோம். திருமணம் செய்து கொள்ளுபவரின் ஜாதகத்துடன், அவருக்கான வரன் ஜாதகத்தை வைத்து திருமணம் பொருத்தம் பார்க்கும் வழக்கம் பொதுவாக அனைவருக்கும் இருக்கிறது. அதாவது திருமணம் செய்து கொள்ளும் இருவருக்கும் ராசி நட்சத்திரம் நன்றாக பொருந்துகிறதா, இருவரும் இந்த திருமண பந்தத்தில் நீண்ட காலம் மகிழ்ச்சியாக வாழ்வார்களா? என இது போன்று பல விஷயங்களை நாம் இருவருடைய ஜாதகத்திலும் பார்ப்போம். இவை அனைத்தும் விட பொதுவாக திருமணத்தில் பார்க்கப்படும் விஷயம் தான் நட்சத்திர பொருத்தம். சரி இந்த பதிவில் ஆண் பெண் இருவருக்கும் பொருந்தக்கூடிய நட்சத்திர பொருத்தங்களை (star matching table for marriage tamil) பற்றி இப்பொழுது நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

Thirumana Porutham – மேஷம் ராசிக்காரர்களுக்கான பொருத்தமான நட்சத்திரங்கள்:-

ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்

ஆண் நட்சத்திரம் பெண் நட்சத்திரங்கள்
அஸ்வினி பரணி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம்
பரணி ரோகிணி, சுவாதி, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அஸ்வினி
கார்த்திகை 1-ம் பாதம் சித்திரை 3, 4, அவிட்டம் 1, 2

பெண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள் – திருமண பொருத்தம்

பெண் நட்சத்திரம் ஆண் நட்சத்திரம்
அஸ்வினி பரணி, திருவாதிரை, பூசம், பூராடம், திருவோணம், சதயம்
பரணி புனர்பூசம், உத்திராடம், ரேவதி, அஸ்வினி
கார்த்திகை 1 ம் பாதம் சதயம்

 


ரிஷபம் ராசிக்காரர்களுக்கான பொருத்தமான நட்சத்திரங்கள்:-

ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள் – Marriage Porutham

ஆண் நட்சத்திரம் பெண் நட்சத்திரங்கள்
கார்த்திகை (பாதம் 2,3,4) அஸ்தம், சித்திரை 1, 2, கேட்டை, அவிட்டம் 3, 4
ரோகிணி மிருகசீரிஷம் 1, 2, உத்திரம், அனுஷம், உத்திரட்டாதி
மிருகசீரிஷம் (பாதம் 1,2) புனர்பூசம் 4, அஸ்தம், பூரட்டாதி, ரேவதி, ரோகிணி

பெண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான ஆண் நட்சத்திரம்:-

பெண் நட்சத்திரம் ஆண் நட்சத்திரங்கள்
கார்த்திகை (பாதம் 2,3,4) சதயம்
ரோகிணி மிருகசீரிஷம் 1, 2, புனர்பூசம் 4, உத்திரம் 1, பூரட்டாதி, பரணி
மிருகசீரிஷம் (பாதம் 1,2) உத்திரம் 1, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், சதயம், அஸ்வினி, ரோகிணி

 


மிதுனம் ராசிக்காரர்களுக்கான பொருத்தமான நட்சத்திரங்கள்:-

ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்

ஆண் நட்சத்திரம் பெண் நட்சத்திரங்கள்
மிருகசீரிஷம் (பாதம் 3,4) திருவாதிரை, புனர்பூசம், அஸ்தம், சுவாதி, பூரட்டாதி 4, ரேவதி
திருவாதிரை பூசம், உத்திராடம் 1, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4
புனர்பூசம் (பாதம் 1,2, 3) பூசம், சுவாதி, பூராடம், உத்திரட்டாதி, ரேவதி

பெண் நட்சத்திரத்துக்கு பொருத்தமான ஆண் நட்சத்திரம்:-

பெண் நட்சத்திரம் ஆண் நட்சத்திரங்கள்
மிருகசீரிஷம் (பாதம் 3,4) திருவாதிரை, உத்திரம், அஸ்தம், மூலம், உத்திராடம் 2, 3, 4, சதயம், பரணி
திருவாதிரை பூரம், பூராடம், பரணி, மிருகசீரிஷம் 3, 4
புனர்பூசம் (பாதம் 1,2, 3) அவிட்டம் 3, 4, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4

 


கடகம் ராசிக்காரர்களுக்கான பொருத்தமான நட்சத்திரங்கள்:-

ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்:

ஆண் நட்சத்திரம் பெண் நட்சத்திரங்கள்
புனர்பூசம் (பாதம் 4) பூசம், அனுஷம், பரணி, ரோகிணி
பூசம்  உத்திரம், அஸ்வினி, புனர்பூசம் 4
ஆயில்யம் அஸ்தம், அனுஷம், பூசம்

பெண் நட்சத்திரத்திக்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்:

பெண் நட்சத்திரம் ஆண் நட்சத்திரங்கள்
புனர்பூசம் (பாதம் 4) பூசம், சுவாதி, அவிட்டம் 1, 2, உத்திரட்டாதி, மிருகசீரிஷம்
பூசம் ஆயில்யம், அஸ்தம், சுவாதி, விசாகம் 1-2-3, பூரட்டாதி 4, ரேவதி, திருவாதிரை, புனர்பூசம்
ஆயில்யம் சித்திரை, அவிட்டம் 1, 2

 


சிம்மம் ராசிக்காரர்களுக்கான நட்சத்திர பொருத்தம்:-

ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்:

ஆண் நட்சத்திரம் பெண் நட்சத்திரங்கள்
மகம் சித்திரை, அவிட்டம் 3, 4
பூரம் உத்திரம், அஸ்தம், சுவாதி, உத்திராடம் 1, திருவோணம்
உத்திரம் பூராடம், ரோகிணி, மிருகசீரிஷம், பூரம்

பெண் நட்சத்திரத்திக்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்:

பெண் நட்சத்திரம் ஆண் நட்சத்திரங்கள்
மகம் சதயம்
பூரம் உத்திரம் 1, பூரட்டாதி 1, 2, 3, அஸ்வினி
உத்திரம் சுவாதி, அனுஷம், பரணி, ரோகிணி, பூசம், பூரம்

 


கன்னி ராசிக்காரர்களுக்கான நட்சத்திர பொருத்தம்:-

ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்:

ஆண் நட்சத்திரங்கள் பெண் நட்சத்திரங்கள்
உத்திரம் (பாதம் 2,3,4) பூராடம், திருவோணம், ரேவதி
அஸ்தம் உத்திராடம், உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4
சித்திரை (பாதம் 1,2) விசாகம் 4, திருவோணம், ஆயில்யம்

பெண் நட்சத்திரத்திக்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்:

பெண் நட்சத்திரம் ஆண் நட்சத்திரம்
உத்திரம் (பாதம் 2,3,4) அனுஷம், பூராடம், ரோகிணி, பூசம், பூரம்
அஸ்தம் பூராடம், உத்திராடம் 1, ரேவதி, மிருகசீரிஷம், பூரம், ஆயில்யம், கார்த்திகை 2, 3, 4
சித்திரை (பாதம் 1,2) கார்த்திகை 2, 3, 4, மகம்

 


துலாம் ராசிக்காரர்களுக்கான நட்சத்திர பொருத்தம்

ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்:

ஆண் நட்சத்திரங்கள் பெண் நட்சத்திரங்கள்
சித்திரை (பாதம் 3,4) விசாகம், திருவோணம், சதயம், ஆயில்யம்
சுவாதி அனுஷம், பூரட்டாதி 1, 2, 3, புனர்பூசம் 4, பூசம்
விசாகம் (பாதம் 1,2,3) சதயம், ஆயில்யம்

பெண் நட்சத்திரத்திக்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்:

பெண் நட்சத்திரம் ஆண் நட்சத்திரம்
சித்திரை (பாதம் 3,4) கார்த்திகை 1, மகம்
சுவாதி பூராடம், அவிட்டம் 1, 2, பரணி, மிருகசீரிஷம் 3, 4, பூரம், புனர்பூசம்
விசாகம் (பாதம் 1,2,3) அவிட்டம் 1, 2, சித்திரை 3, 4

 


விருச்சிகம் ராசிக்காரர்களுக்கான நட்சத்திர பொருத்தம்

ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்:

ஆண் நட்சத்திரங்கள் பெண் நட்சத்திரங்கள்
விசாகம் (பாதம் 4) சதயம்
அனுஷம்  உத்திராடம் 2, 3, 4, பூரட்டாதி, ரேவதி, உத்திரம்
கேட்டை திருவோணம், அனுஷம்

பெண் நட்சத்திரத்திக்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்:

பெண் நட்சத்திரம் ஆண் நட்சத்திரம்
விசாகம் (பாதம் 4) அவிட்டம், சதயம், சித்திரை
அனுஷம் கேட்டை, சதயம், பூரட்டாதி 1, 2, 3, ரோகிணி, புனர்பூசம், ஆயில்யம், அஸ்தம், சுவாதி
கேட்டை கார்த்திகை 2, 3, 4

 


தனுசு ராசிக்காரர்களுக்கான நட்சத்திர பொருத்தம் 

ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்:

ஆண் நட்சத்திரங்கள் பெண் நட்சத்திரங்கள்
மூலம் அவிட்டம், கார்த்திகை 1, மிருகசீரிஷம் 3, 4
பூராடம் உத்திராடம், திருவோணம், அஸ்வனி, திருவாதிரை, சுவாதி, உத்திரம் 2-3-4, அஸ்தம்
உத்திராடம் (பாதம் 1) பரணி, மிருகசீரிஷம் 3, 4, அஸ்தம், பூராடம்

பெண் நட்சத்திரத்திக்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்:

பெண் நட்சத்திரம் ஆண் நட்சத்திரம்
மூலம்  உத்திரட்டாதி, பூரம், சுவாதி, பூராடம்
பூராடம் பூரட்டாதி, புனர்பூசம் 1, 2, 3, உத்திரம், ரேவதி
உத்திராடம் (பாதம் 1) உத்திரட்டாதி, திருவாதிரை, பூரம், பூராடம், அஸ்தம், சுவாதி

 


மகரம் ராசிக்காரர்களுக்கான நட்சத்திர பொருத்தம் 

ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்:

ஆண் நட்சத்திரங்கள் பெண் நட்சத்திரங்கள்
உத்திராடம் (பாதம் 2,3,4) பரணி, மிருகசீரிஷம் 1, 2
திருவோணம் உத்திரட்டாதி, அஸ்வனி, மிருகசீரிஷம் 1, 2, அனுஷம்
அவிட்டம் (பாதம் 1,2) புனர்பூசம் 4, ஆயில்யம், சுவாதி, விசாகம், திருவோணம்

பெண் நட்சத்திரத்திக்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்:

பெண் நட்சத்திரம் ஆண் நட்சத்திரம்
உத்திராடம் (பாதம் 2,3,4) உத்திரட்டாதி, பரணி, பூசம், அஸ்தம், அனுஷம், பூராடம்
திருவோணம் அவிட்டம் 1, 2, பூரட்டாதி 4, பரணி, புனர்பூசம் 4, உத்திரம் 2, 3, 4, சித்திரை, கேட்டை, பூராடம்
அவிட்டம் (பாதம் 1,2) கார்த்திகை 1, மூலம்

 


கும்பம் ராசிக்காரர்களுக்கான நட்சத்திர பொருத்தம் 

ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்:

ஆண் நட்சத்திரங்கள் பெண் நட்சத்திரங்கள்
அவிட்டம் (பாதம் 3,4) சதயம், புனர்பூசம் 1, 2, 3, விசாகம் 4
சதயம் கார்த்திகை, மிருகசீரிஷம், மகம், விசாகம் 4, அனுஷம், அவிட்டம் 3, 4
பூரட்டாதி (பாதம் 1,2,3) உத்திரட்டாதி, ரோகிணி, பூரம், அனுஷம், பூராடம்

பெண் நட்சத்திரத்திக்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்:

பெண் நட்சத்திரம் ஆண் நட்சத்திரம்
அவிட்டம் (பாதம் 3,4) கார்த்திகை, சதயம், மகம், மூலம்
சதயம் சித்திரை 3, 4, விசாகம், அவிட்டம் 3, 4
பூரட்டாதி (பாதம் 1,2,3) மிருகசீரிஷம் 1, 2, சுவாதி, அனுஷம்

 


மீனம் ராசிக்காரர்களுக்கான நட்சத்திர பொருத்தம் 

ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்:

ஆண் நட்சத்திரங்கள் பெண் நட்சத்திரங்கள்
பூரட்டாதி (பாதம் 4) உத்திரட்டாதி, பூராடம், திருவோணம், ரோகிணி, பூசம்
உத்திரட்டாதி ரேவதி, புனர்பூசம், உத்திரம் 2, 3, 4, உத்திராடம், பூரட்டாதி 4
ரேவதி பரணி, பூசம், அஸ்தம், பூராடம், உத்திரட்டாதி

பெண் நட்சத்திரத்திக்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்:

பெண் நட்சத்திரம் ஆண் நட்சத்திரம்
பூரட்டாதி (பாதம் 4) உத்திரட்டாதி, மிருகசீரிஷம், அனுஷம்
உத்திரட்டாதி ரேவதி, திருவாதிரை, ரோகிணி, புனர்பூசம் 1, 2, 3, அஸ்தம், திருவோணம், பூரட்டாதி
ரேவதி மிருகசீரிஷம், புனர்பூசம் 1, 2, 3, உத்திரம் 2, 3, 4, அனுஷம், உத்திரட்டாதி

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement