மூக்கின் வடிவத்தை வைத்து நாம் எப்படிப்பட்டவர் என்று தெரிந்து கொள்ளலாம்..!

Advertisement

மூக்கு பற்றிய தகவல்..! Nose Shape Personality Test in Tamil..!

நண்பர்களுக்கு வணக்கம் நமது உடல் அமைப்பு வைத்து நாம் எப்படிப்பட்டவர்கள் என்று தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் நமது மூக்கின் வடிவத்தை வைத்து நாம் எப்படிப்பட்டவர்கள் என்று தெரிந்து கொள்ளலாம். ஆகவே கீழுள்ள  புகைப்படங்களில் ஒன்பது வடிவ மூக்குகள் உள்ளன. இதில் உங்களுடைய மூக்கு எந்த வடிவத்தில் இருக்கிறது என்பதை பார்த்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ரோமானிய மூக்கு:

மேல் காட்டப்பட்டுள்ளது போல் உங்களுக்கு  ரோமானிய மூக்கு இருக்கிறது என்றால் உங்களுடைய ஆளுமைத்தன்மை மிகவும் அழுத்தமானது ஆகும். அதாவது உங்களது வாழ்க்கையில் குறிக்கோள்கள் இருக்கும். அந்த குறிக்கோள்களை நிறைவேற்ற முயற்சி செய்து கொண்டே இருப்பீர்கள். எந்த ஒரு சவாலான விஷயங்களையும் மிக எளிதாக எதிர்கொள்வீர்கள். சமூகத்தில் நீங்கள் ஒரு சிறந்த மனிதராக இருப்பீர்கள். மேலும் நீங்கள் எந்த ஒரு விஷயத்திலும் சுலபமாக முடிவு எடுக்க மாட்டீர்கள்.

கைரேகை பலன்கள்

நூபியன் மூக்கு:

உங்களுக்கு மேல் படத்தில் உள்ள வடிவில் மூக்கு இருந்தால் நீங்கள் ஒரு தனித்துவமான மனிதனாக திகளப்படுவீர்கள். குறிப்பாக நீங்கள் எந்த இடத்திற்கு சென்றாலும் அங்கு தனியா தெரிய வேண்டும் என்று விரும்புவீர்கள். உங்கள் உடல் தோற்றம் சிறப்பாக இருக்கும். உங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை மிக சாதுர்யமாக எதிர் கொள்வீர்கள். இருப்பினும் சில நேரங்களில் அதிகளவு உணர்ச்சிவசப்படுவீர்ர்கள். ஏதோ ஓடு விஷயத்தை நீங்கள் தொடங்க சென்று அது சிக்கல் ஏற்பட்டாலும் இறுதியில் உங்களுக்கு அதன் மூலம் நல்ல பலன்களே கிடைக்க கூடும்.

நேரான மூக்கு:

உங்களது மூக்கு நேராக இருந்தால் உங்கள் ஆளுமை தெளிவாக சிந்திக்க கூடியதாக இருக்கும். குறிப்பாக உங்களிடம் எதையும் தாங்கும் சக்தி இருக்கும். பொறுமை, எளிமை, நேர்மை மற்றும் ஒரு விஷயத்தை கடைபிடிக்கவேண்டும் என்றால் அது எந்த விதிமுறைகளையும் மீறாமல் அதை அப்படியே பின்பற்றும் தன்மை உள்ளவர்களாக இருப்பீர்கள். அதேபோல் நீங்கள் நேசிக்கும் நபருக்காக எதைவேண்டுமானாலும் செய்வீர்கள். யாருடைய நம்பிக்கையையும் நீங்கள் உடைக்கமாட்டீர்கள்

கோணலான மூக்கு:

உங்களது மூக்கின் வடிவமைப்பு ஏதாவது ஒரு பகுதியில் கோணலாக இருந்தால்  கவலைப்பட வேண்டாம். உங்கள் குணம் மிகவும் எளிமையானதாகவும், நேர்மையானதாக இருக்கும். நீங்கள் எந்த விஷயத்தை செய்வதாக இருந்தாலும் ஆழமாக சிந்தித்த பின்புதான் அதனை செய்லபடுத்துவீர்கள். குறிப்பாக உங்கள் வாழ்வில் மிகவும் எளிமையான விஷயங்களை மட்டும் தான் விரும்புவீர்கள். உங்களுக்கு நல்ல நண்பர்கள் கூட்டம் அதிகம் இருக்கும். அனைவரிடமும் அன்பாக பழகுவீர்கள். யாரையும் கஷ்டப்படுத்தமாட்டிர்கள்.

காலில் மச்சம் இருந்தால் என்ன பலன்

உருண்டை மூக்கு:

fleshy nose

உருண்டையான மூக்கு உங்களுக்கு இருக்கிறது என்றால் நீங்கள் அனைத்து விஷயங்களையும் மிக வேகமாக சிந்தித்து செயல்படுத்தும் நபராக இருப்பீர்கள். உங்களைப் பற்றி நன்றாக தெரிந்தவர்களிடம் மட்டுமே உங்களுடைய விஷயங்களை பற்றி பகிர்ந்து கொள்வீர்கள். அதேபோல் நீங்கள் எந்த வித சிக்கல்களிலும் மாட்டிக்கொள்ளக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பீர்கள். யாரிடமும் அவ்வளவு எளிதாக பழகிட மாட்டீர்கள்.

பட்டன் மூக்கு:

பட்டன் மூக்கு என்பது மிகவும் அழகானமூக்கு ஆகும். உங்கள் உடல் தோற்றம் அழகாகவும், அனைவரையும் எளிதில் கவரும் வண்ணத்தில் இருக்கும். உங்களிடம் ஆழமான மன உறுதி இருக்கும் என்பதால் நீங்கள் செயல்படுத்தும் காரியத்தை முடித்துவிட்டு தான் அடுத்த வேலையையே பார்க்க ஆரம்பிப்பீர்கள். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நல்ல எண்ணங்களை மட்டுமே நினைப்பீர்கள். உங்கள் மனதில் என்ன தோன்றுகிறதோ அந்த விஷயத்தை மட்டுமே செய்ய விரும்புவீர்கள்.

கூரான மூக்கு:

உங்களது மூக்கு கூர்மையாக இருக்கிறது என்றால் உங்களது ஆளுமையும் மிகவும் கூர்மையானதாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சுதந்திரமாக இருக்கவே இரும்புவீர்கள். உங்கள் வாழ்க்கையில் கிடைக்கக்கூடும் அனைத்து நல்ல வாய்ப்புகளையும் எப்பொழுதுமே தவறவிடமாட்டீர்கள். எல்லாரும் செல்கிறார்கள் நாமும் அந்த வழியை பின்பற்றுவோம் என்று எப்பொழுதுமே நீங்கள் நினைக்கமாட்டிர்கள். உங்களுக்கென்று தனி வழியை உருவாக்குவீர்கள். அவற்றில் வெற்றி பெற முழுமையாக முயற்சி செய்வீர்கள். உங்களுக்கு ஆன்மிகத்திலும் அதிக நாட்டம் இருக்கும்.

குட்டி மூக்கு:

உங்கள் மூக்கு சிறிய அளவில் இருந்து உங்களுடைய மூக்கின் நுனி மேல் பக்கம் வளைந்தவாறு காணப்பட்டால் நீங்கள் மிகச் சிறந்த நபராக சமூகத்தில் விளங்குவீர்கள். பல வேலைகளை ஒரே நேரத்தில் பார்க்க விரும்ப மாட்டிர்கள். ஒரு வேலையை முடித்துவிட்டுத்தான் அடுத்த வேலையை செய்ய ஆரம்பிப்பீர்கள். எந்த விஷயத்தை பற்றியும் நீங்கள் கவலைப் படமாட்டீர்கள். இதன் காரணமாக உங்கள் வாழ்க்கையில் சில முக்கியமான விஷயங்களை தவற விட்டுவிடுவீர்கள்.

கால் விரல் ஜோதிடம்

பெரிய மூக்கு:

உங்களது மூக்கு பெரிதாக மற்றும் நாசி துவாரம் உள்ளதாக இருந்தால். எப்பொழுதுமே உங்கள் மனதில் ஏதோ ஒரு விஷயத்தைப்பற்றி யோசித்துக்கொண்டே இருப்பீர்கள். மற்றவர்களுக்கு கீழ் எப்பொழுதும் அடிபணிந்து இருக்க விரும்ப மாட்டீர்கள். உங்களுக்கில் பத்துபேர் பணிபுரிய வேண்டும் என்றே நினைப்பீர்கள். தனித்துவமான பணிகளை செய்யவே விரும்புவீர்கள். உங்களது செயல்களை எப்பொழுதுமே கடமைக்காக செய்யமாட்டீர்கள். நீங்கள் செய்யும் வேலையை முழுமனதோடு சிறப்பாக செய்து முடிப்பீர்கள். மற்றவர்களது பிரச்சனைக்கு சிறந்த தீர்வினை அளிப்பீர்கள். வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதே உங்கள் எண்ணமாக இருக்கும்.

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement