பங்குனி உத்திரம் குலதெய்வ வழிபாடு..!

Panguni Uthiram Kula Deivam Valipadu

Panguni Uthiram Kula Deivam Valipadu..!

குலதெய்வ வழிபாடு என்பது காலம் காலமாக அவர்களது முன்னோர்களை மனதில் நினைத்து வழிபாடும் ஒரு நாளாகும். பங்குனி உத்திரம் அன்று குல தெய்வ வழிபாடுகளும் நடைபெறும். அன்றைய தினம் குலதெய்வ வழிபாடு செய்வது மிக முக்கியமானதாகும். ஒவ்வொருவரும் அவர்களது இஷ்ட தெய்வங்களை வணங்கினாலும், குல தெய்வ வழிபாடு தான் முக்கியம். குல தெய்வத்தை வழிபடாமல், வேறு எந்த தெய்வத்தை வணங்கினாலும், குலதெய்வம் அணுக்கிரகம் இல்லையென்றால் புண்ணியம் இல்லை. ஆகவே மார்ச் 18, 2022 வெள்ளிக்கிழமை அன்று பங்குனி உத்திரம் அன்று தங்களது குலதெய்வங்களை வழிபடுங்கள் அவர்களது ஆசிர்வாதம் தங்களுக்கு முழுமையாக கிடைக்கும். சரி இந்த பதிவில் பங்குனி உத்திரம் அன்று குலதெய்வம் வழிபாடு எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.

குலதெய்வம் வழிபடும் முறை:

உங்கள் குல தெய்வம் கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து படையல் போட்டு வணங்கியப்பின்னரே, அர்ச்சனை செய்து திரும்ப வேண்டும். இருப்பினு ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக குல தெய்வத்தை வழிபடுவார்கள். ஆகவே அவரவர் சம்பர்தாயத்துக்கு ஏற்ப பூஜை செய்யலாம். இதை செய்வதே முறையான குலதெய்வ வழிபாடு ஆகும். குலதெய்வம் படத்தை வாங்கி வந்து உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

பங்குனி உத்திரம் அன்று குலதெய்வம் வழிபாடு செய்வதினால் கிடைக்கும் பலன்கள்:

வெளியூர்களில் வசிப்பவர்கள் அல்லது இருப்பவர்கள், வருடத்துக்கு ஒரு முறையாவது தங்களது குல தெய்வ கோவிலுக்கு சென்று வணக்கி வந்தால் மிகவும் சிறந்தது. அதுவும் பங்குனி உத்திரத்தினம் அன்று குல தெய்வங்களை வணங்கினால் புண்ணிய பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும், நோய்கள் நீங்கவும், பிள்ளை வரம் கிடைக்கவும், இயற்கை செழிக்கவும் மக்கள் குல தெய்வத்தையே பெரிதும் நம்புவதுண்டு.

மற்ற நாட்களில் குல தெய்வத்தை வழிபடுவதை விட பங்குனி உத்திரம் அன்று வழிபடுவதுதான் நூறு சதவீத பலனை பெற்றுத் தரும். பங்குனி உத்திர திருநாளில் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால் நம் குலம் சிறப்பதோடு, குடும்பமும் செழிப்பு அடைந்து மேன்மை பெறும். குல தெய்வங்கள் மனம் மகிழ்ந்து நம்மை ஆசீர்வதிப்பதால், குடும்பங்கள் பல்வேறு துன்பங்கள், துயரங்கள், இடையூறுகளில் இருந்து காக்கப்படும்.

குல தெய்வ வழிபாடு என்பது முக்கியம். பங்குனி உத்திரம் அன்று அவரவர்களுடைய குல தெய்வக் கோவிலுக்குச் சென்று வருவது நல்லது. கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள், தங்களது வீட்டிலேயே குல தெய்வ படத்தை அலங்கரித்து, பாரம்பரிய, வழக்கமான படையலை வைத்து மனம் உருக வழிபாடு செய்யுங்கள்.

குலதெய்வ வழிபாடு செய்வது எப்படி ?
குலதெய்வம் தெரியாதவர்கள் அதை தெரிந்து கொள்வது எப்படி?

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்