பெண்கள் அம்மா வீட்டிலிருந்து இந்த பொருட்களை மட்டும் தெரியாமல் கூட எடுத்துட்டு போகவே கூடாதாம்..

Pengalukkana Aanmeega Kurippu in Tamil

பெண்கள் அம்மா வீட்டில் இருந்து இந்த பொருட்களை மட்டும் தெரியாமல் கூட எடுத்துட்டு போகவே கூடாதாம்.. Pengalukkana Aanmeega Kurippu in Tamil

ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.. இன்று நாம் பெண்களுக்கான ஆன்மீக தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். அதாவது திருமணத்திற்கு பிறகு பெண்கள் அம்மா வீட்டிற்கு வந்துவிட்டு, பின்பு புகுந்த வீட்டிற்கு செல்லும் போது என்னென்ன விஷயங்களை செய்யக்கூடாது என்பதை பற்றி தான் இன்றிய பதிவில் பார்க்க போகிறோம். சரி வாங்க பதிவை தொடர்ந்து படித்து ஆன்மிக தகவல்களை படித்து தெரிந்துகொள்வோம்.

பெண்கள் அம்மா வீட்டிலிருந்து எடுத்து செல்ல கூடாத பொருட்கள்:

பெண்கள் அம்மா வீட்டில் இருந்து கிளம்பும் போது மஞ்சள், உப்பு, புளி, துடைப்பம், முருங்கைக்காய், எண்ணெய், சீயக்காய் இது போன்ற பொருட்களை எக்காரணம் கொண்டும் எடுத்துச்செல்ல கூடாது. அப்படி எடுத்து செல்ல வேண்டும் என்றால் அதற்க்கான பணத்தை கொடுத்துவிட்டு எடுத்து செல்லலாம். இனமாக மட்டும் எடுத்து செல்ல வேண்டாம். ஒருவேளை எடுத்து சென்றால் இருவர் வீட்டிற்கும் பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.

அதேபோல் கூர்மையான பொருட்களான அருவாள், கத்தி, கடைபாரை இது போன்ற பொருட்களை எடுத்து வர கூடாது. மேலும் அகத்திக்கீரை, பாகற்காய், கருவேப்பிலை, அரிசி அளவுக்கு படி, முறம், சமைத்த அசைவ உணவுகள் மற்றும் கோலமாவு ஆகிய பொருட்களை தாய் வீட்டில் இருந்து எடுத்துவரக்கூடாது.

அம்மா வீட்டில் இருந்து பெண்கள் ஈர துணியை உலர வைக்காமல் எடுத்து செல்ல கூடாது. இதனால் எம பயத்தை உண்டு பண்ணும், விபத்து நிகழலாம், கெட்ட காரியங்கள் நடக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பெண்கள் இந்த விஷயங்களை பின்பற்றினால் வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும்..!

புகுந்த வீட்டில் இருந்து பிறந்த வீட்டிற்கு வந்த பின்பு எக்காரணம் கொண்டும் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் புகுந்த வீட்டிற்கு மறுபடியும் கிளம்பு கூடாது. அப்படி கிளம்பினாள் மகாலட்சுமியும் கூடவே சேர்ந்து சென்றுவிடும் என்பது அவர்களுடைய அசைக்க முடியாத நம்மிக்கையாக இருந்து வருகிறது.

மேலும் பெண் விட்டார்கள் தன் மகளை எட்டாம் நாள், மாதத்தின் கடைசி நாள், அஷ்டமி, நவமி போன்ற நாட்களிலும் தன் மகளை புகுந்த வீட்டிற்கு அனுப்பு வைக்க மாட்டார்கள். ஏன் என்றால் இந்த நாட்கள் எல்லாம் அசுப நாட்களாக கருதப்படுவதால் வீட்டிற்கு வந்த மகளை வெளியே அனுப்புவதை தவிர்க்கின்றன.

அம்மா வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு கிளம்பும் போது எண்ணெய் வைத்து அன்றைய தினம் குளிக்காதீர்கள். அதேபோல் தலைக்கு எண்ணெயும் தேய்க்க கூடாது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பெண்கள் கட்டாயம் இந்த 5 அணிகலன்ளை அணிய வேண்டும் ஏன் தெரியுமா..?

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்