உங்கள் உதடு இப்படி இருந்தால் உங்கள் குணம் இப்படி தான் இருக்கும்..!

Advertisement

உதடை வைத்து உங்கள் குணத்தை அறியலாம் வாங்க | Personality Test for Lips in Tamil

Personality Test for Lips in Tamil – ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. நமது குணங்களை அறிய பலவகையான வழிகள் உள்ளது. ஜாதகம், எண் கணிதம், ரேகை பார்த்து பலன் கூறுவது என்று பலவகையான வழிகள் உள்ளது. அவற்றில் ஒன்று தான் உடல் அமைப்பு, ஒருவரது உடல் அமைப்பை வைத்து அவர்கள் குணம் எப்படி இருக்கும் என்று அறிந்துகொள்ள முடியும், அந்த வகையில் உங்கள் உதடை வைத்து நீங்கள் உங்கள் குணத்தை அறிய விரும்பினால் உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க ஒருவரது உதடை வைத்து ஒருவரது ஆளுமையை அறிந்துகொள்ளலாம்.

உதடு இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தால் என்ன பலன்?

நீங்கள் நல்ல அறிவுத்திறன் கொண்டவராக இருப்பீர்கள், நீங்கள் செல்வ செழிப்பாக இருப்பீர்கள்.

உங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள், மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உங்களிடம் இருக்கும்.

ஒருசிலர் உயர்ந்த பதிவில் இருக்கக்கூடியவராக இருப்பீர்கள், குறிப்பாக புகழ் பாராட்டு உங்களை தேடி வரும்.

சமுதாயத்தில் நல்ல மதிப்பும், மரியாதையும் உள்ள நபராக நீங்கள் இருப்பீர்கள்.

சிறிய உதடாக இருந்தால் என்ன பலன்?

சிறிய உதடாக உங்களுக்கு இருந்தால் தங்களை அதிகமாக வெளியே கட்டிக்கொள்ளும் நபராக நீங்கள் இருப்பீர்கள். உங்களுக்கு ஆசைகள் அதிகமாக இருக்கும்.

இதுமட்டுமில்லாமல் உங்கள் பெருமைகளை நீங்கள் மற்றவர்களுக்கு காட்ட நினைப்பீர்கள்.

குறிப்பாக உங்களுக்கு எப்பொழுது நிதி சார்ந்த பிரச்சனைகள் எதுவும் இல்லாமல் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ நினைப்பீர்கள்.

ஆக உங்களிடம் பணம் வரவு இருந்துகொண்டே இருக்கும்.

உதடு தடிப்பாக இருந்தால் என்ன பலன்?

உங்கள் உதடு மிகவும் தடிப்பாக இருந்தால் நீங்கள் சிறந்த அறிவாளியாக இருப்பீர்கள். உங்களுக்கு அதிக தைரியம் இருக்கும். எந்த ஒரு செயல்களையும் மிகவும் துணிந்து செய்வீர்கள்.

சமூகத்தில் எப்பொழுது சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள்.

சமூகத்தில் எதாவது தப்பு நடந்தால் அதனை தட்டிக்கேட்கும் துணிச்சல் உங்களிடம் இருக்கும்.

மேல் உதடு சிறியதாகவும், கீழ் உதடு பெரியதாகவும் இருந்தால் என்ன பலன்?

உங்கள் மேல் உதடு சிறியதாகவும், கீழ் உதடு பெரியதாகவும் இருந்தால் நீங்கள் சமூகத்தில் நல்ல நிலைமையில் இருப்பீர்கள்.

உங்கள் வாழ்க்கையில் சில ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். பொதுவாக நீங்கள் அனைவரிடமும் எப்பொழுது பட்டும் படாமலும் இருப்பீர்கள். யாரிடமும் அவ்வளவு எளிதாக பழக்கமாட்டிறீர்கள்.

உதடு கருப்பாக இருந்தால் என்ன பலன்?

உங்கள் உதடு கருமையாக இருந்தால் உங்களுக்கு அடிக்கடி உடல்நல கோளாறுகள் ஏற்படும். ஆக உங்கள் உடல்நலத்தில் நீங்கள் எப்பொழுது அதிகமாக அக்கறை செலுத்த வேண்டும்

உங்கள் மன நிலை அமைதியாக இருக்காது, உங்கள் மனம் எப்பொழுது குழப்பமான நிலையில் இருக்கும்.

உதடு தடிப்பாக கீழ் உதடு தொங்குவது போல் இருந்தால் என்ன பலன்?

ஒருவரது உதடு தடிப்பாக அதிலும், கீழ் உதடு மட்டும் தூங்குவதுபோல் இருந்தால் அவர்கள் எப்பொழுது குழப்பமான மனநிலையில் இருப்பது போல் இருப்பார்கள்.

சமூகத்தில் மரியாதை குறைவான நபராக இருப்பீர்கள். நீங்கள் கடின உழைப்பாடி என்று சொல்லலாம்.

அதேபோல் உங்களுக்கு அதிக கோபமும் வரும். இத்தகைய குணங்கள் உங்களிடம் இருக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
திருநீறு, குங்குமம், சந்தனம் இதில் ஏதேனும் ஒன்றை உங்கள் மனதில் நினைத்து கொள்ளுங்கள் உங்களை பற்றி சொல்கிறேன்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement