பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் வரலாறு மற்றும் சிறப்புகள்..!

பிள்ளையார்பட்டி கோவில்

பிள்ளையார்பட்டி கோவில் வரலாறு மற்றும் சிறப்புகள் (Pillayarpatti history in tamil)..!

இந்த பிள்ளையார்பட்டி கற்பக விநாயர் திருக்கோவில் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு மூலவராக கற்பக விநாயகரும், விருட்சமாக மருதமரமும் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கு குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒரு முறை பால் அபிஷேகமும், கணபதி ஹோமமும் செய்தால் தொழில் விருத்தியடையும். இக்கோயில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மிகவும் பழமையான ஆலயமாகும்.

தஞ்சை பெரிய கோவில் சிறப்புகள்..! Thanjai Periya Kovil..!

 

சரி இங்கு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் வரலாறு (pillayarpatti history in tamil), சிறப்புகள், கோயில் அமைப்பு போன்ற விவரங்களை படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

பிள்ளையார்பட்டி கோவில் தல சிறப்பு:-

விநாயகருக்குரிய மிக பெரிய குடைவரைக்கோயில் இதுவே. இங்கு விநாயகர் சதுர்த்தியன்று 18 படி அளவில் ராட்சக கொழுக்கட்டை நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். அதேபோல் விநாயகருக்கும் 6 படை வீடு உள்ளது. இத்தலத்தில் உள்ள கற்பக விநாயகர் சன்னதி ஐந்தாவது படை வீடாகும். நகரத்தார் திருப்பணி செய்த கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.

பிள்ளையார்பட்டி கோவில் வரலாறு (Pillayarpatti history in tamil):-

குன்றைக் குடைந்து அமைக்கப்பட்ட குடைவரைக் கோயிலான பிள்ளையார்பட்டி கோயில், சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்டது என்பதைக் கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது. பல்லவர்களுக்கு முன்பே குடைவரைக் கோயில்களை அமைத்த பெருமை முற்கால பாண்டியர்களுக்கு உண்டு. ஏக்காட்டூர் கோன் பெருபரணன் என்கிற சிற்பியால் பிள்ளையாரின் உருவமும், சிவலிங்கத்தின் உருவமும் செதுக்கப்பட்டுள்ள தகவல் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஆய்வின்படி மகேந்திரவர்ம பல்லவன் காலத்துக்கும் முன்பு இரண்டு அல்லது ஐந்து நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தது இந்தக் குடைவரைக் கோயில் என்பதை அறியலாம். 4ம் நூற்றாண்டில் பிள்ளையார் சிலையை செதுக்கி இருக்கலாம் என்று நம்மப்படுகிறது. இது போல் 14 சிலை உருவங்கள் இக் கோயிலில் உள்ளது.

மேலும், கல்வெட்டுகள் மூலமாக, எருக்காட்டூர், மருதங்குடி, திருவீங்கைக்குடி, திருவீங்கைச்வரம், இராச நாராயணபுரம். மேலும், மருதங்கூர், தென்மருதூர், கணேசபுரம், கணேச மாநகரம், பிள்ளைநகர் போன்றவை இத்தலத்தின் முற்காலப் பெயர்கள் என அறிய முடிகிறது.

இந்தக் கோயில் கி.பி.12-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் செட்டிநாட்டு நகரத்தார்கள் வசமானது என்பது வரலாறு. நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் மேற்பார்வையில் மிகச் சிறப்பான முறையில், ஆகம முறை தவறாமல் வழிபாடு நடைபெறுகிறது. இத்தல கற்பக விநாயகருக்கு தேசி விநாயகர் என்ற பெயரும் உண்டு. தேசி விநாயகர் என்ற பெயருக்கு ஒளிமிக்க, அழகுள்ள விநாயகர் என்று பொருள்.

வலங்கைமான் மாரியம்மன் கோவில் வரலாறு..!

பிள்ளையார்பட்டி கோவில் உல் செல்லும் முறை:-

விநாயகர் சந்நிதிக்கு எதிர்ப்புறம் அமைந்த வடக்கு கோபுர வாயில் வழியாக சென்று வழிபட்டு முடித்துவிட்டு, கிழக்கு பக்கம் இருக்கும் ராஜகோபுர வாசல் வழியாக வெளியே வரவேண்டும்.

பிள்ளையார்பட்டி கோவில் திருவிழாக்கள்:-

விநாயகர் சதுர்த்தி திருவிழா ஆவணி மாதம் 10 நாட்கள் நடக்கின்றன. விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் விமர்சையாக நடைபெறும் திருவிழாவாகும். இதில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

பிள்ளையார்பட்டி பூஜை நேரம்:-

ஐந்து கால பூசை நடைபெறுகிறது. அதிகாலை, காலை, மதியம், மாலை, இரவு ஆகிய காலங்களில் பூஜைகள் நடைபெறும்.

பிள்ளையார்பட்டி கோவில் (pillayarpatti temple) நேர்த்தி கடன்:-

இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும், இத்தலத்தில் உள்ள பிள்ளையாருக்கு, முக்குறுணி மோதகம்(கொழுக்கட்டை) படைத்து வழிபடுகிறார்கள். தொழில் அபிவிருத்தி வேண்டுவோர் இத்தலத்தில் கணபதி ஹோமம் செய்து பயனடைகிறார்கள். மேலும் அருகம்புல் மாலை அணிவித்து வழிபாடு செய்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துகிறார்கள்.

புட்லூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் சிறப்புகள்..!

பிள்ளையார்பட்டி கோவில் (pillayarpatti temple) பிராத்தனைகள்:-

திருமண தடை, குழந்தை வரம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிராத்திக்கலாம்.

பிள்ளையார்பட்டி கோவில் நடை திறப்பு:-

காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை நடை திறக்கப்படும். பின்பு மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை நடை திறக்கப்படும்.

கற்பக விநாயகர் ஆலயத்திற்கு செல்லும் வழி:-

காரைக்குடி பேருந்து நிலையத்திலிருந்து 13 கிமீ தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது. சிவகங்கை பேருந்து நிலையத்திலிருந்து 28 கிமீ தொலைவில் பிள்ளையார்பட்டி கோவில் அமைந்துள்ளது. திருப்பத்தூர் – குன்றக்குடி பேருந்துகளில் பயணித்தால் பிள்ளையார்பட்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி கோவிலை எளிதில் அடையலாம்.

பிள்ளையார்பட்டி கோவில் முகவரி (pillayarpatti temple address):-

அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோவில், திருப்புத்தூர் தாலுகா, பிள்ளையார்பட்டி – 630207, சிவகங்கை மாவட்டம்.

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Aanmeega Thagavalgal