தைப் பொங்கல் அன்று மறக்காமல் நாம் செய்ய வேண்டியவை என்ன தெரியுமா..?

Advertisement

பொங்கல் அன்று என்ன செய்ய வேண்டும்.? | What to Do on Pongal Day in Tamil

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பக்கூடிய ஒரு பண்டிகை என்றால் அது தைப்பொங்கல் தான். இதில் சிலர் தீபாளியை விட பொங்கலை தான் அதிகாமாக விரும்புகின்றனர். ஏனென்றால் நம் தமிழர்கள் உடைய பண்பாட்டை பெருமை கூறும் வகையில் தைப் பொங்கல் அனைவராலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அப்படி தை மாதம் 1-ம் தேதியன்று வரக்கூடிய பொங்கலின் போதும் நாம் மறக்காமல் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றி தான் இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம். சரி வாருங்கள் இந்த பதிவை படித்து அது என்ன என்று தெரிந்துக்கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்⇒ பண வரவு அதிகரிக்க பொங்கல் அன்று காலையில் எழுந்ததும் இதை பாருங்கள் போதும்

தைப் பொங்கல் அன்று செய்ய வேண்டியவை:

  • பொங்கலன்று சூரியன் உதயமாகும் முன்பே எழுந்து அனைவரும் குளித்து விட வேண்டும். ஏனென்றால் தைப்பொங்கல் அன்று நாம் சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து வழிபடுகிறோம். அதனால் பொங்கல் அன்று காலையில் சூரியன் உதயமாகும் முன்பு நாம் குளிக்க வேண்டும்.
  • அதுபோல பொங்கல் அன்று வீட்டில் இருக்கும் தாய்மார்கள் நெற்றியில் கட்டாயம் பொட்டு வைத்த கொண்டு தான் பொங்கல் வைக்க வேண்டும்.
  • வீட்டில் கிழக்கு திசையை நோக்கி தான் பொங்கல் பானை வைக்க வேண்டும். அதுமட்டும் இல்லாமல் பொங்கல் வைக்கும் பானையில் கட்டாயமாக இஞ்சி கொத்து மற்றும் மஞ்சள் கொத்து மற்றும் திருநீறு பொட்டு வைத்திருக்க வேண்டும். 
  • பொங்கல் வைப்பதற்கு முன்பு மறக்காமல் மஞ்சளால் பிள்ளையார் செய்து அதற்கு குங்குமம் பொட்டு வைத்து மாக்கோலம் போட வேண்டும்.
  • இதில் முக்கியமானது என்னவென்றால் நல்ல நேரம் பார்த்து பொங்கல் வைக்க வேண்டும். அடுப்பில் பொங்கல் பொங்கும் போது அனைவரும் பொங்கலோ பொங்கல் என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் இது மாதிரி சொல்லும் போது பொங்கல் பொங்குவது போல நமது வாழ்க்கையும் இதை போல செழிப்பாக வர வேண்டும் என்று அர்த்தம்.
  • பொங்கல் அன்று சாமி கும்பிடம் நேரத்தில் அபசகுன வார்த்தைகளை பேசக்கூடாது. அந்த பொங்கல் பானையில் இருக்கும் மஞ்சளினை வெயிலில் காய வைத்து வீட்டில் இருக்கும் தாய்மார்கள் உபயோகப்படுத்தினால் நல்லது.

தைப் பொங்கல் அன்று செய்யக்கூடாதவை:

  • தை மாதம் 1-ம் தேதி வருகின்ற தைப் பொங்கல் அன்று யாரும் தலைக்கு எண்ணெய் வைத்து குளிக்க கூடாது. அதுபோல வீட்டில் யாரும் குளிக்காமலும் இருக்க கூடாது.
  • பொங்கல் அன்று புதிய ஆடை அணியவில்லை என்றாலும் கிழிந்த ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும்.
  • உங்கள் வீட்டில் பொங்கல் அன்று பொங்கல் வைக்கும் பானையை அன்றே சுத்தம் செய்யக்கூடாது. மாட்டு பொங்கல் அல்லது காணும் பொங்கல் அன்று பானையை சுத்தம் செய்ய வேண்டும்.
  • ஆகவே பொங்கல் அன்று என்ன செய்ய வேண்டும் மற்றும் என்ன செய்யக்கூடாது என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்துக்கொண்டு பொங்கலை தித்திப்பாக அனைவரும் கொண்டாடி மகிழுங்கள்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement