பூஜை அறை குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

Advertisement

பூஜை அறை குறிப்புகள் | Pooja Arai Tips in Tamil..!

வணக்கம் அன்பான நேயர்களே… இன்று இந்த பதிவில் நமது வீட்டு பூஜை அறையை எப்படி வைத்து கொள்வது என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். எல்லா பெண்களுக்குமே அவர்களுடைய வீட்டை சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதேபோலத் தான் பூஜை அறையும். அந்த வகையில் பூஜை அறை குறிப்புகள் பற்றி இந்த பதிவில் காண்போம்.

பூஜை அறை குறிப்புகள்:

இன்றைய காலகட்டம் என்ன தான் மாறி இருந்தாலும் ஆன்மீகம் என்பது மாறாத ஒன்றாக உள்ளது. நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த வழிமுறைகளை நாம் இப்பொழுதும் பின்பற்றி வருகிறோம். இப்பொழுதும் நம்மை விடவும் பெரிய சக்தி ஓன்று இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் தான் வாழ்ந்து வருகிறோம். அப்படி ஆன்மீகத்தில் அதிகளவு ஈடுபாடு கொண்டவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். உங்கள் பூஜை அறையை எப்படி வைத்து கொள்ள வேண்டும் என்பதற்கான சில குறிப்புகள் பற்றி பாப்போம்.

ஸ்டேப்: 1

முதலில் உங்கள் பூஜை அறையை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். பூஜை அறையில் காய்ந்த பூக்கள் மற்றும் பக்தி  ஏற்றிய பழங்கள் இருக்க கூடாது. பூஜை அறை மிகவும் பழுதடைந்தோ அல்லது ஓட்டடை படிந்தோ இருக்க கூடாது. பூஜை அறை எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும்.

ஸ்டேப்: 2

நீங்கள் விளக்கேற்றும் போது ஊற்றப்படும் எண்ணெயில் பச்சை கற்பூரத்தை தூள் செய்து அதில் போட வேண்டும். அப்படி கற்பூரம் சேர்த்த எண்ணெயில் விளக்கேற்றி வணங்கி வந்தால் நன்மை உண்டாகும்.

ஸ்டேப்: 3

நீங்கள் ஏற்றும் விளக்கை வெறும் தரையில் வைத்து ஏற்றக்கூடாது. அதை ஒரு தட்டில் வைத்து ஏற்ற வேண்டும். அதுமட்டுமில்லாமல் அந்த தட்டில் மஞ்சள் கலந்த அரிசி வைத்து அதன் மேல் விளக்கு ஏற்றி வணங்கி வரலாம். இப்படி செய்து வருவதால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

ஸ்டேப்: 4

பெரும்பாலும் சிலர் நிலை வாசலில் விளக்கு ஏற்றி வழிபட்டு வருவார்கள். அப்படி ஏற்றும் விளக்கை ஒரு தட்டில் வேப்பிலைகளை வைத்து அதன் மேல் விளக்கு வைத்து வணங்கி வந்தால் செல்வ பலன் கிடைக்கும். உங்களின் கஷ்டங்கள் எல்லாம் நீங்கிவிடும்.

ஸ்டேப்: 5

ஒரு பித்தளை அல்லது மண் சொம்பில் தண்ணீர் நிரப்பிக்கொள்ள வேண்டும். அதில் கற்பூரம் மற்றும் மஞ்சள் தூள், ஜவ்வாதை, பன்னீர் மற்றும் வேப்பிலை சேர்த்து அதனுடன் 1 ரூபாய் நாணயம் சேர்த்து உங்கள் பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தால் உங்கள் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும்.

ஸ்டேப்: 6

எப்பொழுதும் சாமி கும்பிடும் போது பக்தி  ஏற்றி வழிபடுவது உண்டு. அப்படி ஏற்றும் அந்த பக்தியை ஒரு தட்டில் பன்னீர் சிறிதளவு சேர்த்து அந்த பன்னீரை ஒரு பூ வைத்து தொட்டு பக்தி முழுவதும் தடவ வேண்டும். அப்படி செய்து வருவதால் பக்தி  நீண்ட நேரம் எரியும். அதுமட்டுமில்லாமல் வீடு முழுவதும் நல்ல மனம் வீசும்.

இதுபோன்ற ஆன்மீக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> ஆன்மீக தகவல்கள் 
Advertisement