புரட்டாசி மாத அமாவாசை சிறப்பு.! Purattasi Amavasai 2022

Purattasi Amavasai 2022 Date

புரட்டாசி மாத அமாவாசை 2022 எப்போது?

Purattasi Amavasai 2022 – வணக்கம் நண்பர்களே இன்று நாம் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மஹாளய அமாவாசையின் சிறப்பை பற்றி படித்து தெரிந்து கொள்வோம். ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும் அதில் சில மாதங்களில் வரக்கூடிய அமாவாசை சிறப்புக்குரிய அமாவாசை ஆகும்.  அந்த வகையில் இந்த புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய  மஹாளயம் பட்ச அமாவாசையானது மிக மிக சிறப்புக்குரிய அமாவாசை ஆகும். இந்த அமாவாசை புரட்டாசி மாதத்தில் வருவதினால் என்ன சிறப்பு,இந்த அமாவாசையை எப்படி வழிபடுவது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் படித்தறியலாம் வாங்க.

Purattasi Amavasai 2022 Date – புரட்டாசி மாத அமாவாசை 2022 நாள் மற்றும் நேரம்: 25.09.2022 அதிகாலை 04.05 முதல் 26.09.2022 அதிகாலை 04.21 வரை 

சிறப்பு:

புரட்டாசி மாதம் என்பது இறைவை வழிபடுவதற்கான மிக சிறந்த மாதம் ஆகும். பொதுவாக புரட்டாசி மாதம் என்றாலே பெருமாளை வழிபடக்கூடிய ஒரு மாதம். இதன் காரணமாக பெருமாளை நாம் உள்ளன்போடு வணங்கி பெருமாள் கோயில்களுக்கு சென்று வருவோம். இதற்கு என்ன காரணம் என்றால் சூரிய பகவான் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியை சஞ்சரித்து கொண்டே வருவார். அப்படி சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியை சஞ்சரித்து வரும்போது யார் ராசி நாதனோ அவருடைய பலன்கள் அதிகமாக அந்த மாதத்தில் கிடைக்குமாம். அந்த வகையில் இந்த புரட்டாசி மாதம் கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம் ஆகும்.

இந்த கன்னி ராசிக்கும் அதிபதியாக இருக்கக்கூடியவர் புதன் பகவான் ஆவார். இந்த புதன் பகவான் யார் என்றால் ஒரு நல்ல அற்புதமான கலை ஆற்றல் கொண்டவர் ஆவார். இந்த புதன் பகவானுக்கும், நாராயணருக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அது என்னவென்றால் இந்த புதன் பகவானுக்கு அதிபதியாக விளங்கக்கூடியவர் நாராயணர் ஆவார். ஆக புதனுடைய அருள் கிடைக்க நாராயணரை இந்த மாதம்  வழிப்பட்டால் முழுமையாக புதனின் அருளும் கிடைக்கும் அதேபோல், நாராயணரின் அருளாலும் கிடைக்கும். அதுவும் புதன் பகவான் ஒரு சைவ பிரியர் என்பதால் அந்த மாதம் முழுவதும் சைவ உணவுகளை மட்டும் உண்டு, புதனை வழிபட்டால் முழுமையான பலன்கள் கிடைக்கும்.

இந்த புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையை மஹாளய அமாவாசை என்கின்றன.

இந்த அமாவாசை அன்று நீங்கள் உங்கள் முன்னோர்களை வழிபடலாம். அதாவது கோவில்களிலோ, நீர்நிலைகளிலோ அல்லது வீட்டிலோ எங்கு வேணாலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம். இவ்வாறு இச்செய்வதால் முன்னிற்களின் ஆசிர்வாதம் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். பித்ரு தோஷம் இருந்தாலும் அது நீங்கிவிடும்..

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்