ராகு கேது பெயர்ச்சி 2022 எப்போது? | Rahu Ketu Peyarchi 2022

Advertisement

2022 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் | Rahu Ketu Peyarchi in Tamil

ஆன்மீக நண்பர்களுக்கு வணக்கம்..நிழல் கிரகமாக இருக்கும் ராகு கேது 18 மாதங்களுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயருகிறது. ராகு மற்றும் கேது கெட்ட பலன்களை மட்டுமே தரக்கூடியது அல்ல. அவர்கள் சஞ்சரிக்கக்கூடிய இடத்தைப் பொருத்து பல்வேறு வகையில் சில ராசிகளுக்கு நல்ல பலன்கள், புதிய வாய்ப்புகள், அதிர்ஷ்டங்கள் தேடி வந்தடையும். வரவிற்கும் 2022-ம் ஆண்டிற்கான ராகு கேது எந்த ராசிக்கு அதிர்ஷ்டத்தை தரவிருக்கிறார் என்று தெரிஞ்சிக்க ஆர்வமாக இருக்கிறீர்களா. வாங்க இப்போதே படிச்சி தெரிஞ்சிப்போம்..

ராகு கேது தோஷம் நீங்க பரிகாரம்..!

ராகு கேது பெயர்ச்சி 2022 எப்போது? – rahu ketu peyarchi 2022 date

திருக்கணித பஞ்சாங்கத்தின் படி பிலவ வருடம், பங்குனி மாதம் 29ம் தேதி (12.04.2022) மதியம் 1.38 மணியளவில் ராகு மேஷ ராசிக்கும், கேது துலாம் ராசிக்கும் பெயர்ச்சியாகின்றனர்.

ராகு கேது பெயர்ச்சி பலன் – Rahu Ketu Peyarchi 2022:

ஆன்மீகத்தில் கேதுவை விட ராகுவிற்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். கரும் பாம்பு என அழைக்கப்படும், இராகு போக காரகன் ஆவார். செம்பாம்பு எனும் கேது மோட்ச காரகன் ஆவார்.

மனிதத் தலையும் பாம்பு உடலையும் கொண்ட இராகு கருமை நிறத்தை கொண்டவர், நீண்டு நெடியவர். குரூரமான குணம் உடையவர். அற்புதமான செயல்களை உருவாக்கிக் காட்டக்கூடிய ஆற்றல் மிக்கவர் இராகு ஆவார்.

இராகு திருநாகேஸ்வரம் எனும் ஊரில் தனது இரு தேவியர்களான நாகவல்லி, நாக்கன்னி சமேதராய், உள்பிரகாரத்தில் கோவில் கொண்டு அனைவருக்கும் அருள் பாலித்து வருகிறார். இந்த திருத்தலம் தான் இராகு பரிகாரத்திற்கு முதலிடமாகவும், சிறந்த இடமாகவும் விளங்குகிறது.

கேது பெயர்ச்சி: 

நிழல் கிரகத்தில் இராகு கேதுவிற்கு வீடுகள் தனியாக அமைக்கப்படவில்லை. எந்த வீட்டில் குடி இருக்கிறார்களோ அந்த வீட்டு அதிபதியின் குணத்தை கிரகித்துக் கொள்வர். இவர்கள் மற்ற கிரகங்களைப் போல் இல்லாமல் பின்னோக்கியே ராசி மண்டலத்தை வலம் வரக் கூடியவர்கள். கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி கேது ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் எமகண்டத்தில் வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள்:

ராகு கேது பெயர்ச்சியின் போது அவர்கள் அமைந்துள்ள இடத்தினை பொறுத்து ஒரு சில ராசிக்காரர்களுக்கு யோக பலனை அள்ளி கொடுப்பார். 2022-ல் எந்த ராசியினர் அந்த யோகத்தை அள்ளப்போகிறார் என்று தெரிஞ்சிப்போம்..

  • மிதுனம் 
  • கடகம் 
  • விருச்சிகம் 
  • கும்பம் 

மிதுன ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்:

மிதுன ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்

ராகு ராசிக்கு 11ம் இடத்திலும், கேது ராசியில் 5ம் இடத்திலும் சஞ்சாரம் செய்ய  உள்ளார். இந்த நேரத்தில் ராகு உங்களுக்கு சாதகமான சூழலில் சஞ்சாரம் செய்வதால் நிதிநிலை நீங்கள் நினைத்தப்படி நன்றாக இருக்கும். மேலும் குரு 5ம் பார்வையாலும் சிறப்பான பலன் கிடைக்கும். அதிக வருமானம் வரக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் செழித்து காணப்படும். நிரந்தரமாக வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பொருளாதாரம் உயரும் என்பதால் கடன் பிரச்சனை முற்றிலும் தீரும்.

கடக ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்:

கடக ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்

கடக ராசியினருக்கு ராகுவின் சஞ்சாரம் பார்வையானது அதிர்ஷ்ட பலன் தருவதாக அமையும். இந்த காலத்தில் உங்களுக்கு பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் தைரியம் அதிகரிப்பதோடு, நிதிநிலையும் உயர்ந்து காணப்படும். எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும். குடும்பம், பணியிடத்தில் உங்களுக்கு சிக்கல் தீர்ந்து மன நிம்மதி கிடைக்கும்.

அருள்மிகு திருநாகேஸ்வரம் ராகு பகவான் ஸ்தலம் சிறப்புகள்..!

விருச்சிக ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள்:

விருச்சிக ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

கேது மாற்றம் அடைவது விருச்சிக ராசியினருக்கு சிறந்த பலனை கொடுக்கும். உங்களின் திறமை பளிச்சிடும். தொழில், வியாபாரத்திற்கு ஏற்ற சாதகமான சூழல் நிழவும். வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். பணியில் உள்ளவர்களுக்கு பணியிடத்தில் சாதகமான சூழல் இருக்கும். பதவி உயர்வும், சம்பள உயர்வும் சிறப்பாக கிடைக்கும். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் நல்ல பலன் கிடைக்கும். எல்லாத் துறைகளிலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

கும்ப ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள்:

கும்ப ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

கும்ப ராசிக்கு ராகு – கேது கிரக சஞ்சாரம் சாதகமான இடத்தில் சஞ்சாரம் செய்வது விசேஷம். உங்களின் ஆற்றல், செயல்திறன் அதிகரித்து காணப்படும். பணியிடத்தில் உங்கள் பணிக்கான அங்கிகாரம் கிடைக்கும். பணியிடத்தில் வேலை சார்ந்த பயணங்கள் நல்ல லாபம் தருவதாக இருக்கும்.

ராகு – கேது நவகிரக அந்தஸ்து:

ராகு, கேது கிரக அந்தஸ்தைப் பெற்ற நவகிரகங்களில் சேர்ந்ததாகும். ஒவ்வொரு கிரகத்திற்கும் தனியாக நாள் ஒதுக்கப்பட்ட நிலையில் ராகு – கேதுக்கு என தனி நாட்கள் இல்லாததால் தினமும் ராகு காலம் என ராகு கிரகத்துக்கும், எமகண்டம் என கேது பகவானுக்கும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கப்பட்டது.

இந்த நிகழ்வுக்கு பிறகு தான் ராகு – கேதுவை இணைத்து கெளரி பஞ்சாங்கம் பதிலாக புதிய பஞ்சாங்கம் பின்பற்றப்பட்டு வருகிறது. மற்ற கிரகங்களைப் போல் இல்லாமல் ராகு – கேது வலமிருந்து இடது பக்கமாக சுற்றுகிறது.

செவ்வாய் தோஷம் நீங்க பரிகாரம்..!

ராகு கேது என்பவர்கள் யார் தெரியுமா?

மோகினி அவதாரமாக வந்து மகாவிஷ்ணு அமிர்தத்தை தேவர்களுக்கு பகிர்ந்து கொடுத்தார். அப்போது மோகினியாக வந்தது விஷ்ணு பகவான் என்றும், அவர் தேவர்களுக்கு மட்டும் அமிர்தத்தை கொடுப்பதை அறிந்து கொண்ட ஒரு அசுரன், தேவர்களைப் போல் உருவத்தை மாற்றிக் கொண்டு அசுரனும் அந்த அமிர்தத்தை பருகினார்.

இதை கண்டுபிடித்த சூரியன் மற்றும் சந்திரன் மோகினி அவதாரமான மகாவிஷ்ணுவிடம் தெரிவித்தனர். உடனே தன் சுதர்சன சக்கரத்தால் அந்த அசுரனை தலையை துண்டித்துக் கொன்றுவிட்டார். இதில் உடல் இல்லாத தலை ராகுவானது. தலை இல்லாத உடல் கேது ஆனார்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement