2023-யில் பல மடங்கு லாபத்தை தரப்போகும் சனி பெயர்ச்சி.. உங்கள் ராசி இதுவா?

Advertisement

சனி பெயர்ச்சி 2023 ரிஷபம்

வணக்கம் நண்பர்களே.. பொதுவாக சனி பெயர்ச்சி என்றாலே பலருக்கு பயம் இருக்கும். சனி பகவான் இந்த முறை என்ன செய்ய காத்திருக்கின்றாரோ என்று. சனி பகவான் ஒன்று கெட்டவர் அல்ல, ஆரம்பத்தில் கஷ்டத்தை கொடுத்தாலும் அதன் பிறகு நல்ல பலன்களையும் வாரி வழங்குவார். அந்த வகையில் வருகின்ற 2023-ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் நாள் ஒரு சனி பெயர்ச்சி நிகழ உள்ளது இந்த கிரகப் பெயர்ச்சியால் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன் கிடைக்கப்போகிறது? சனி பகவானின் பார்வையால் தொழில், வியாபாரம், வேலையில் ஏதேனும் மாற்றம் வருமா என்று பார்க்கலாம்.

Rishabam Sani Peyarchi 2023 in Tamil:

சனி பகவான் இந்த பெயர்ச்சியில் கும்பம் ராசியில் இடப்பெறுகிறார். ஆக இந்த பெயர்ச்சியில் சனிபகவானின் பார்வை 3,7,10-ஆம் இடங்களின் மீது விழுகிறது. அந்த வகையில் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் பார்வை விரைய ஸ்தானம், சுக ஸ்தானம், களத்திர ஸ்தானம் ஆகிய இடங்களில் விழுகிறது. ஆக வருகிறன சனி பெயர்ச்சி ரிஷபம் ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம் வாங்க.

சனி பெயர்ச்சி 2023 ரிஷபம் பலன்கள்:

பொதுவாக சனிபகவான் ரிஷபம் ராசியில் பிறந்தவர்களுக்கு யோக காரர் ஆவார். ஆக இப்பொழுது சனிபகவான் தொழில் ஸ்தானத்தில் அமர போகிறார். அதாவது தர்ம கர்மாதிபதி யோகமும் கை கூடி வரப்போகிறது. அதிலும் ரிஷப லக்னமாக இருந்தால் கூடுதல் யோகம் கிடைக்கப்போகிறது. 10-யில் சனி பகவானின் பார்வை படுவதால் பல மடங்கு வளர்ச்சியைத் தரப்போகிறார். அதாவது தொழில், வேலை, வியாபாரத்தில் விருத்தி அடையும். தொட்டது எல்லாம் துலங்கப்போகிறது.

உங்கள் வருமானம் கூடும்:

தொழில் வியாபாரத்தில் நீங்கள் செய்யும் முதலீடுகள் பல மடங்காக அதிகரிக்கும். அதோபோல் உங்களுக்கு சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். அந்த செலவுகள் பெருமைப்படும் புதிய தொழில் தொடங்குவதற்கான செலவாகவே இருக்கும். இந்த சமையத்தில் நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்துமே நிறைவேற கூடும்.

மேலும் சனிபகவானின் பார்வை நான்காம் வீடான சுக ஸ்தானத்தை பார்ப்பதால், நீங்கள் புதிய வீடு காட்டுவீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள், புதிதாக தொழில் ஆரம்பிப்பீர்கள் அங்க உங்கள் பொருளாதாரம் மிகவும் வளமாக இருக்கும்.

குடும்பம்:

இதுவரை கணவன் மனைவி உறவுக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் இதன் சனி பெயர்ச்சியின் போது சரி ஆகும். பிள்ளைகள், பெற்றோர்கள் இடையே ஒற்றுமை கூடும். உங்கள் தந்தியின் உடல் நலம் மேம்படும்.

ஆரோக்கியம்:

இருப்பினும் இந்த சனி பெயர்ச்சியின் போது உங்களுக்கு சின்ன சின்ன ஆரோக்கியபிரச்சனைகள் ஏற்படும். ஆக உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் மிகவும் கவணமாக இருக்க வேண்டும். இத்தகைய பிரச்சனைகளை ஈடுசெய்ய நீங்கள் தர்மம் செய்யலாம் அதாவது ஏழைகள், முதியவர்களுக்கு ஆடைகள் வாங்கித்தரலாம். மிதியடிகள் வாங்கித்தரலாம். இது சனிபகவானை சந்தோஷப்படுத்தும்.

இதையும் படியுங்கள் 👉👉 நாளைய ராசி பலன்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement