ஒரே ராசி ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் செய்யலாமா..! Same Rasi And Nakshatra Marriage In Tamil..!

Advertisement

ஒரே ராசி ஒரே நட்சத்திரத்தில் திருமணம் செய்யலாமா..! Same Rasi And Same Nakshatra Marriage..! 

Can Same Rasi And Nakshatra Get Married: நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் ஒரே ராசி மற்றும் ஒரே நட்சத்திரம் கொண்டவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா..! இதனை பற்றி ஆன்மீகம் கூறும் தகவலை பற்றி பார்க்கலாம். திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் முக்கியமான ஒன்றாகும். திருமணம் என்றாலே திருமணம் செய்ய போகும் தம்பதியினருக்கு ஜாதக பொருத்தம் பார்த்து செய்வது பாரம்பரிய வழக்கமாகும். சரி வாங்க நண்பர்களே இப்போது ஒரே ராசி நட்சத்திரத்தில் உள்ளவர்களுக்கு திருமணம் செய்யலாமா திருமணம் செய்தால் என்ன நிகழும் என்பதன் விவரத்தினை முழுமையாக படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!

திருமணம் பொருத்தம் என்பது:

திருமணம் என்பது கணவன் மனைவியாக அமையும் தாம்பத்தியினரின் மகிழ்ச்சியான வாழ்க்கை, குழந்தை பேறு, ஆயுள், செல்வநிலை, சுபிட்சமான எதிர்கால நிலை போன்ற எதிர்கால அம்சங்களை இருவரின் ஜாதகங்களை வைத்து அவர்களுடைய ராசி, நட்சத்திரம் கிரகங்களை வைத்து ஜோதிடர்கள் கணித்து கூறுவது வழக்கம்.

திருமண முடிவு:

திருமணம் செய்ய போகும் இருவருக்கும் ஒரே ராசி, ஒரே நட்சத்திரம் கொண்டவர்களுக்கு பொருத்தம் பார்க்கும் போது தம்பதியினரின் பிறந்த நட்சத்திரத்தினை வைத்து 10 பொருத்தங்கள் மற்றும் கிரகங்களை வைத்து திருமணம் முடிவு செய்யப்படுகிறது.

ஒரே ராசி / நட்சத்திரம் இருந்தால் என்ன நடக்கும்: 

திருமணம் செய்யும் ஆண் மற்றும் பெண் தம்பதியினருக்கு ஒரே நட்சத்திரம் இருந்தால் நட்சத்திர பொருத்தத்தில் 10 பொருத்தத்திற்கும் மேற்பட்ட பொருத்தங்கள் இருந்தாலும் திருமணத்தில் முக்கியமான பொருத்தம் என்று சொல்லக்கூடிய மாங்கல்ய பொருத்தம் அவர்களுக்கு இருக்காது.

அதனால் ஒரே ராசி ஒரே நட்சத்திரம் கொண்டவர்களுக்கு திருமணம் செய்வதை தவிர்த்து கொள்வது நல்லது.

பாதிப்பு ஏற்படக்கூடும்:

அடுத்து ஒரு ராசிக்கு ஏழரை சனி, அஷ்டம சனி வரும்பொழுது தம்பதியினர் இடையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் குடும்பத்தில் அதிக கருத்து வேறுபாடுகள் தோன்ற வாய்ப்புள்ளது.

ஒரே ராசி இருந்தால் சரி, திருமணம் ஆக போகும் பெண்ணிற்கு இருக்கும் நட்சத்திரத்திற்கு பின் உள்ள நட்சத்திரம் அந்த ஆணுக்கு இருந்தால் நன்மை அமையும். தம்பதியினருக்கு ஒரே ராசி, நட்சத்திரம் இருந்தால் ஒரே மாதிரியான ரசனைகள் தான் இருக்கும்.

கிரகநிலைகள் மாறும்போது இருவரின் வாழ்க்கையும் மிக பாதிப்படைய செய்யும். இதனால் ஒரே ராசியாக இருந்தாலும் நட்சத்திரம் மட்டும் வேறு இருந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

newமுக்கிய திருமண பொருத்தம்..! Mukkiya Thirumana Porutham..!

எந்தெந்த நட்சத்திரம் சேர்க்கலாம் / சேர்க்கக்கூடாது:

திருமணம் செய்ய போகும் ஆண், பெண் இருவருக்கும் பகையோனி நட்சத்திரம் இருந்தால் திருமணம் செய்யக்கூடாது. இதனை மீறி திருமணம் செய்பவர்களுக்கு வாழ்வில் எப்போதும் சண்டைகள் இருந்துகொண்டே இருக்கும்.

அடுத்து பெண்ணிற்கு 7 ஆம் நட்சத்திரத்தினை சேர்ந்த ஆண் மகனை திருமணம் செய்து வைத்தால் வீட்டில் தினமும் சித்திரவதை நடக்கும். பெண்ணிற்கு 12,17-வது நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களை மணம் செய்து வைத்தால் வீட்டில் துரதஷ்டமும், தர்த்தரியம் ஏற்படும்.

அடுத்து பெண்ணிற்கு 22– வது நட்சத்திரத்தில் உள்ள ஆண் மகனை திருமணம் செய்தால் அந்த ஆணிற்கு ஆயுள் குறைந்துவிடும்.

அடுத்ததாக மாமியார் ராசிக்கு மருமகள் ராசியானது 6, 8-வது ராசியாக வந்தால் தம்பதியினரை தனி குடும்பம் வைப்பது நல்லது. இதனால் பல வித பிரச்சனைகள் குறையும்.

எந்த நட்சத்திரம் உள்ளவர்களுக்கு திருமணம் செய்யலாம்:

திருமணம் செய்ய போகும் ஆண் / பெண் இருவருக்கும் ரோகினி, திருவாதிரை, மகம், அஸ்தம், உத்திரட்டாதி, ரேவதி, விசாகம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களில் ஆண், பெண் இருவருக்கும் ஒரே மாதிரியான நட்சத்திரம் இருந்தது என்றால் திருமணம் முடிப்பது நல்லது.

அஸ்வினி, கார்த்திகை, மிருகசீரிடம், புனர்பூசம், பூரம், பூசம், உத்திரம், சித்திரை, அனுஷம், பூராடம் போன்ற நட்சத்திரங்கள் இருவருக்கும் ஒரே நட்சத்திரங்கள் கொண்டவர்களாக இருந்தால் பரிகாரத்திற்கு பின்பு திருமணம் செய்து கொள்ளலாம்.

திருமணம் செய்யக்கூடாத ஒரே நட்சத்திரம்:

பரணி, ஆயில்யம், ஸ்வாதி, கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி போன்ற நட்சத்திரம் ஆண், பெண் இருவருக்கும் ஒன்றாக இருந்தால் திருமணம் செய்யாமல் இருப்பது மிகவும் நல்லது.

பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி, கேட்டை, சித்திரை, விசாகம், மகம், ஸ்வாதி போன்ற 12 நட்சத்திர தினங்களில் பணம் கொடுக்கவும், வாங்கவும் கூடாது. மீறி செய்தால் பணம் திரும்ப வராது. பணத்தினை திரும்ப செலுத்துவதில் கஷ்டம் ஏற்படும். இந்த நட்சத்திரங்களில் பிரயாணம் செய்தால் சிக்கல்கள் ஏற்படும். அடுத்து உடலில் நோய்வாய்பட்டால் குணமடைவதற்கு நீண்ட நாள் ஆகும்.

newதிருமண தடை நீங்க செல்ல வேண்டிய கோவில்கள்..!
இது போன்ற ஆன்மீக தகவலை தெரிந்துக்கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும். ஆன்மீக தகவல்கள் 
Advertisement