Sani Jayanthi Palangal in Tamil
பொதுவாக நமது சூரிய குடும்பத்தில் இரண்டாவது மிக பெரிய கிரகம் எது என்றால் அது சனி கோள் தான். இதனை தான் ஜோதிடத்தில் சனி பகவான் என்று அழைப்பார்கள். இந்த சனி பகவான் மிகவும் மந்தமானவர் ஆனால் மிகவும் நீதிமான் ஆவார். இந்த நீதிமான் சனி பகவான் பிறந்த நாள் தான் சனி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. இந்த சனி ஜெயந்தி அன்று நீங்கள் சனிபகவானிடம் என்ன வேண்டினாலும் நிறைவேறும் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது.
அதிலும் இந்த ஆண்டு வரும் சனி ஜெயந்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்த சனி ஜெயந்தி நாளில் 3 ராஜயோகங்கள் உருவாகியுள்ளன. இந்த 3 ராஜயோகங்களால் 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் மாற்றம் ஏற்படும். அதிலும் குறிப்பாக சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட மழையில் முழுமையாக நினைய போகிறார்கள். அவை எந்தெந்த ராசிக்காரர்கள் என்பதை இந்த பதிவை முழுதாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தான் ஜாக்போர்ட் அடிக்க போகுது
Three Rajyoga on Shani Jayanti These Zodiac Signs will be Lucky in Tamil:
சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களை வழங்குபவர். இந்த சனியின் வக்கிர பார்வை விழுந்தால், அதன் விளைவாக ஒருவரது வாழ்க்கை தலைகீழாக மாறும். ஜோதிட சாஸ்திரத்தின் படி, சனியின் தாக்கத்தில் உள்ளவர்கள் சனி பகவான் முறையாக வழிபட்டு வந்தால், அவரால் சந்திக்கும் பிரச்சனைகளைக் குறைக்கலாம்.
அதுவும் சனி ஜெயந்தி நாளில் சனி பகவானை வழிபட்டால் சனியின் அருளைப் பெறலாம். அதே போல் இந்த ஆண்டு வைகாசி மாதம் வரும் அமாவாசை நாளில் கொண்டாடப்படும். அதாவது இந்த ஆண்டு மே 19 ஆம் தேதி சனி ஜெயந்தி வருகிறது.
இந்த சனி ஜெயந்தி நாளில் ஷோபன் யோகா, சச ராஜ யோகம் மற்றும் கஜகேசரி யோகம் என 3 ராஜயோகங்கள் உருவாகியுள்ளன. இதனால் குறிப்பிட்ட 4 ராசிக்காரர்கள் மட்டும் அதிர்ஷ்ட மழையில் முழுமையாக நினைய போகிறார்கள். அவை எந்தெந்த ராசிக்காரர்கள் என்பதை விரிவாக இங்கு காணலாம்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு சனி ஜெயந்தியானது மிகவும் சிறப்பான நன்மைகளை வழங்க போகின்றது. சிம்ம ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கப் போகிறது.
மேலும் நிதி நிலை சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்கள் தங்களின் பணியில் வெற்றி காண்பார்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும்.
குரு உதயமாவதால் இந்த 5 ராசிக்காரர்கள் தான் அதிர்ஷ்ட மழையில் முழுமையாக நனைய போகின்றார்கள்
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு சனி ஜெயந்தியில் உருவாக உள்ள 3 ராஜயோகங்களால் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படப் போகின்றது. தொழில் செய்பவர்களுக்கு அதிக லாபம் கிடைக்க போகின்றது.
மேஷ ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் மற்றும் மன ரீதியான பிரச்சனைகள் ஏதும் இருந்தால் அதிலிருந்து விடுபடுவீர்கள்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு சனி ஜெயந்தியானது பல வகையான நன்மைகளைத் தரப் போகிறது. மேலும் இந்த சனி ஜெயந்தி அன்று மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சனியும் 11 ஆவது வீட்டில் குருவும் உள்ளனர். இதன் விளைவாக நிதி நிலையில் வளர்ச்சி ஏற்படப் போகின்றது. மேலும் உங்களின் பல நாள் கனவுகள் நனவாகப் போகிறது.
இந்த 5 ராசிக்காரர்கள் தான் மிகவும் தைரியசாலியாம் இதில் உங்க ராசி இருக்கானு பாருங்க
கும்பம்:
கும்ப ராசிக்காரர்கள் சனி ஜெயந்தி நாளில் உருவாகும் யோகங்களால் உங்களின் கடின உழைப்பிற்கான முழு பலனை பெறுவீர்கள். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
பணியிடத்தில் உங்களின் நிலை வலுவாக இருக்கும். அதாவது நீங்கள் கூறும் அனைத்து வார்த்தைகளையும் மற்றவர்கள் கேட்பார்கள். மேலும் நிலுவையில் இருந்த வேலைகளும் மீண்டும் தொடங்கப்பட்டு, வெற்றிகரமாக முடிக்கப்படும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |