சனி வக்ர பெயர்ச்சி
ஜோதிட சாஸ்திரத்தின் படி மொத்தம் 12 ராசிகள் இருக்கின்றன. அதுபோல ராசிகளில் கிரகங்களின் மற்றம் என்பது நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. கிரங்கள் எப்பொழுதும் ஓரே ராசியில் இருப்பதில்லை. ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடம் பெயர்கிறார்கள். அப்படி இடம் பெயரும் போது சில ராசிகளுக்கு நன்மையும், சில ராசிகளுக்கு தீமையையும் செய்யும்.
அதுபோல வேத ஜோதிடத்தின்படி, நீதிமான் மற்றும் கர்ம வினைகளுக்கான கிரகமான சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் அமர்ந்திருக்கிறார். அதாவது சனி பகவான் ஜூன் 17, 2023 அன்று இரவு 10.48 மணிக்கு கும்ப ராசியிலேயே வக்ர பெயர்ச்சி அடைவார். சனி இந்த வக்ர நிலையில் நவம்பர் 4, 2023 வரை இருப்பார். இதனால் சில ராசிகளுக்கு சனி பகவானின் பார்வை இருக்கிறது. எனவே இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் மழையாக பொழியப்போகிறது. எது எந்த ராசிகள் என்று பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள் யார்..?
விருச்சிக ராசி:
சனியின் வக்ர பெயர்ச்சியால் விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்க போகிறது. உங்களின் இலக்குகளில் கவனம் செலுத்தினால் வெற்றி நிச்சயம். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் நல்ல லாபத்தையும் பெறுவீர்கள். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். இந்த நேரத்தில் பணவரவு அதிகமாக காணப்படும். இதன் காரணமாக உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் காண்பீர்கள். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
மேஷ ராசி:
சனி பகவானின் வக்ர பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு நற்பலன்களை வாரி வழங்கப்போகிறது. பண சம்பாதிப்பதற்கான சிறந்த வாய்ப்புகள் உங்களை தேடிவரும். சனி பகவானின் அருள் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் நினைத்த அனைத்து செயல்களிலும் வெற்றி பெறுவீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் அதிகமாக காணப்படும். நண்பர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும்.
ஜூன் மாதம் முதல் டிசம்பர் வரை சனி பகவான் வக்ரம் அடைவதால் நல்லதா கெட்டதா |
தனுசு ராசி:
கும்பத்தில் சனியின் வக்ர பெயர்ச்சியால் தனுசு ராசிகளுக்கு இந்த காலம் பொன்னான காலமாக அமையபோகிறது. இந்த நேரத்தில் அனைத்திலும் வெற்றி காண்பீர்கள். பணிகளில் புதிய வாய்ப்பு உங்களை தேடி வரும். உங்கள் கடின உழைப்பிற்கான நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். பணவரவு உங்களுக்கு மகிழ்ச்சியை தரும். இந்த நேரத்தில் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக அமையும்.
கன்னி ராசி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு சனியின் வக்ர பெயர்ச்சியால் நல்ல பலன்கள் உங்களை தேடி வரப்போகிறது. இதுவரை எதிரிகளால் இருந்து வந்த பிரச்சனை அனைத்தும் நீங்கும். வெளியூர் பயணம் சென்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வேலை தேடி கொண்டிருக்கும் தனுசு ராசிக்காரர்களுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். நல்ல செய்திகள் உங்களை தேடி வரும். இதுவரை இருந்து வந்த கடன் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.
சனியின் வக்ர பெயர்ச்சி.. ஜூன் மாதம் இந்த ராசிக்காரர்களின் காட்டில் அதிர்ஷ்ட மழை தான் |
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |