சனியின் வக்ர பெயர்ச்சியால் 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்க போகிறது.. உங்க ராசி இருக்கா..

sani vakra peyarchi palangal

சனி வக்ர பெயர்ச்சி 2023

சனி கடவுளை நீதியின் கடவுளாக பார்க்கிறார்கள். சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்வதற்கு இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. 30 ஆண்டுகளுக்கு பிறகு சனி பகவான் கும்பத்தில் சேர்ந்து ஜூன் 17-ம் தேதி வக்ர பெயர்ச்சி அடைய போகிறார். இந்த வக்ர பெயர்ச்சியால் பல ராசிகளுக்கு பிரச்சனையை ஏற்படுத்தினாலும், அதே சமயம் அதிர்ஷ்டத்தையும் தர போகிறது. அது எந்தெந்த ராசிகள் என்று முழு பதிவையும் படித்து தெரிந்து கொள்ளவும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

மகரம் ராசி:

மகரம் ராசி

சனியின் வக்ர பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை தர போகிறது. சேமிப்பு அல்லது முதலீடு செய்வதற்கு உகந்த நேரமாக இருக்கிறது. சொத்து வாங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் பேசும் பொது வார்த்தைகளில் கவனம் வேண்டும்.

தனுசு ராசி:

தனுசு ராசி

சனியின் வக்ர பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களின் வாழ்க்கை அதிர்ஷ்டம் நிறைந்ததாக மாற போகிறது. அலுவலகங்களில் வேலை பார்ப்பவராக இருந்தால் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் வருமானம் அதிகரிக்கும். கடன் தொல்லைகள் ஏதும் இருந்தால் முடிவுக்கு வந்து விடும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். முதலீடு செய்ய வேண்டும் என்று நினைத்தால் இது உகந்த நேரமாக இருக்கும்.

2023 ஆம் ஆண்டு அடுத்த சனி பெயர்ச்சி யாருக்கு? சனி பெயர்ச்சி இருந்து விடுபடுபவர் ராசி எது ?

மிதுனம் ராசி:

மிதுனம் ராசி

நீங்கள் வியாபாரம் செய்பவராக இருந்தால் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரமாக அமைவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. குடும்பத்தில் வருமானம் அதிகரிக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.கடன் பிரச்சனை ஏதும் இருந்தால் முடிவுக்கு வரும்.

ரிஷபம் ராசி:

ரிஷபம் ராசி

ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி வக்ர பெயர்ச்சி எல்லா விதத்திலும் நன்மையை தர கூடியது. வெளி வற்றதில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். நீங்கள் முதலீடு செய்திருந்தால் அதிலிருந்து லாபம் கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். நெடுநாட்களாக இருந்த கடனை முடித்து விடுவீர்கள். உறவினர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.

மேஷம் ராசி:

மேஷம் ராசி

மேஷ ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர பெயர்ச்சி அனைத்து விதத்திலும் சாதகமான பலன்கள் கிடைக்கும். நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் உங்களின் செயல்களை கண்டு மற்றவர்கள் பாராட்டுவார்கள். உங்களின் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படும், அதனால் அலட்சியம் செய்யாமல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

சிம்மம் ராசி:

சிம்மம் ராசி

இந்த ராசிக்காரர்களின் தடைப்பட்ட பணிகள் அனைத்தும் மீண்டும் வேகம் பெறும். நீங்கள் வேலை பார்க்கும் இடம் முன்னேற்றம் அடையும். திருமண வாழ்வில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இந்த நேரத்தில் பெறுவார்கள். சனிபகவானின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுந்தாலும், குருபகவானின் பார்வையும் கிடைப்பதால் சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறும்.

ஒரு கைப்பிடி கல் உப்பு போதும் 10 நாட்களில் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்