Suitable Zodiac Sign For Sagittarius in Tamil
அன்பு நெஞ்சம் கொண்ட அன்பு நேயர்களே… இன்றைய ஆன்மிகம் பதிவில் தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு எந்த ராசியில் பிறந்தவர்கள் பொருத்தமாக இருப்பார்கள் என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். ஜோதிட சாஸ்திரத்தில் 12 ராசிகள் உள்ளன. அந்த 12 ராசிகளில் 9 இடத்தை பிடித்துள்ள ராசி தான் தனுசு. இந்த தனுசு ராசியில் மூலம், பூராடம் மற்றும் உத்திராடம் என்று 3 நட்சத்திரங்கள் உள்ளன. எல்லா ராசிக்கும் திருமண பொருத்தம் இருக்கும். திருமணத்தின் போது ராசி பொருத்தம் கட்டாயம் பார்ப்பார்கள். அந்த வகையில் இன்று இந்த பதிவின் மூலம் தனுசு ராசிக்கு பொருத்தமான ராசி எது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
தனுசு ராசி திருமண வாழ்க்கை |
தனுசு ராசிக்கு பொருத்தமான ராசி எது..?
தனுசு ராசிக்காரர்கள் பொதுவாக எந்த ஒரு விஷயத்தையும் சாதாரணமாக எடுத்து கொள்ளும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் அடுத்தவர்களின் மனநிலையை புரிந்து கொண்டு செயல்படுபவர்களாக இருப்பார்கள்.
இவர்களிடம் நற்குணங்கள் நிறைந்து காணப்படும். இவர்கள் மற்றவர்களிடம் மரியாதையுடன் பழகுவார்கள். எந்த ஒரு செயலிலும் வெற்றி பெறுவார்கள். இவர்கள் பிடித்த ஒருவருக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு ஆசைகள் அதிகமாக இருக்கும். இவர்கள் கலையை ரசிக்கக்கூடியவர்களாக இருப்பார்கள். விட்டுக் கொடுத்து வாழும் மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஆன்மீகத்தில் அதிகளவு ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களிடம் விட்டு கொடுத்து செல்லும் குணம் இயற்கையாகவே காணப்படும். இவர்களுக்கு நடவு வட்டாரம் ஆனது பெரிதாக இருக்கும். புத்தி கூர்மை உடையவராக இருப்பார்கள். இதனால் எந்த செயல் செய்தாலும் அதில் வெற்றி அடையாமல் இருக்க மாட்டார்கள்.
தனுசு ராசியில் பிறந்தவர்களின் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இவர்களின் திருமணம் காதல் திருமணமாக இருக்கும். இவர்களின் திருமணம் தாமதமாக நடக்கும். இருந்தாலும் திருமணத்திற்கு பின் தனுசு ராசிக்காரர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இவர்கள் திருமண வாழ்க்கையில் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் பிரச்சனை வந்தால் கூட அதில் விட்டு கொடுத்து செல்லும் குணம் உடையவர்களாக இருப்பார்கள்.
தனுசு ராசியில் பிறந்த பெண்ணுக்கு பொருத்தமான ராசி எது..?
தனுசு ராசியில் பிறந்த பெண்ணிற்கு விருச்சிக ராசி மற்றும் துலாம் ராசியில் பிறந்த ஆண் ராசிக்காரர்கள் பொருத்தமாக இருப்பார்கள்.
தனுசு ராசிக்காரர்களுக்கு சிம்மம் ராசி, மேஷம் ராசி, மிதுனம் ராசி, மீனம் ராசி, கன்னி ராசி மற்றும் தனுசு ராசியில் பிறந்த ஆண் ராசிக்காரர்கள் பொருத்தமாக இருப்பார்கள்.
தனுசு ராசி பெண்கள் இந்த ராசிக்காரர்களை திருமணம் செய்து கொண்டால் அவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
தனுசு ராசியில் பிறந்த ஆணுக்கு பொருத்தமான ராசி எது..?
தனுசு ராசியில் பிறந்த ஆணுக்கு கும்பம் ராசி மற்றும் மகர ராசியில் பிறந்த பெண் பொருத்தமாக இருக்கும்.
தனுசு ராசியில் பிறந்த ஆண்களுக்கு சிம்மம் ராசி, மேஷம் ராசி, மிதுனம் ராசி, மீனம் ராசி, கன்னி ராசியில் பெண்கள் பொருத்தமான ராசிக்காரர்களாக இருப்பார்கள்.
மேலும், தனுசு ராசியில் பிறந்த ஆண்கள் இந்த ராசியில் பிறந்த பெண்களை திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
திருமணத்தில் எந்த ராசிக்கு எது பொருத்தமான ராசி |
இது போன்ற ஆன்மீக தகவலை தெரிந்துக்கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |