விருச்சிக ராசிக்காரர்களுக்கு பொருத்தமான ராசிக்காரர்கள் யார்..?

Advertisement

Suitable Zodiac Sign For Scorpio in Tamil

வணக்கம் அன்பார்ந்த நேயர்களே… இன்றைய ஆன்மிகம் பதிவில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு பொருத்தமான ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். ஜோதிட சாஸ்திரத்தில் மொத்தம் 12 ராசிகள் உள்ளன.  உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் ஏதாவது ஒரு ராசியில் பிறந்திருப்பார்கள். அதுபோல நாம் இன்று விருச்சிக ராசிக்காரர்களை பற்றி தான் பார்க்க போகிறோம். விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு எந்த ராசிக்காரர்கள் பொருத்தமானவர்களாக இருப்பார்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க…

விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் பலன்கள்

விருச்சிக ராசிக்கு பொருத்தமான ராசி:

ராசிகளில் 8 ஆவது இடத்தில் இருக்கும் ராசி தான் விருச்சிகம். விருச்சிக ராசியில் விசாகம், அனுஷம் மற்றும் கேட்டை என்ற 3 நட்சத்திரங்கள் உள்ளன. விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய் பகவான் ஆவார்.

விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் கம்பீரமான தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் பிடிவாத குணம் அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும் அதை அலட்டி கொள்ள மாட்டார்கள்.

விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் தன்னுடயதை யாருக்காகவும் விட்டு கொடுக்க மாட்டார்கள். இவர்களிடம் முன் கோபம் அதிகம் இருக்கும். இந்த ராசியில் பிறந்தவர்கள் பேச்சில் உட்பொருள் வைத்துப் பேசுபவர்களாக இருப்பார்கள்.

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. திருமண பொருத்தம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்று சொல்வார்கள். திருமண பொருத்தம் பார்த்து தான் திருமணம் செய்வார்கள்.

அந்த வகையில் விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு பொருத்தமான ராசிக்காரர்கள் யார் என்பதை பார்க்கலாம் வாங்க.

விருச்சிக ராசியில் பிறந்த ஆண்:

விருச்சிக ராசியில் பிறந்த ஆணுக்கு மீனம், கடகம், தனுசு மற்றும் மகரம் ராசிக்காரர்கள் பொருத்தமானவராக இருப்பார்கள்.

விருச்சிக ராசியில் பிறந்த ஆண்கள் இந்த ராசியில் பிறந்த பெண்களை திருமணம் செய்து கொண்டால் அவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

விருச்சிக ராசியில் பிறந்த பெண்:

விருச்சிக ராசியில் பிறந்த பெண்களுக்கு மிதுனம், ரிஷபம், மேஷம், தனுசு மற்றும் கடகம் போன்ற ராசிக்காரர்கள் பொருத்தமானவர்களாக இருப்பார்கள்.

விருச்சிக ராசியில் பிறந்த பெண்கள் இந்த ராசியில் பிறந்த ஆண்களை திருமணம் செய்து கொண்டால் அவர்களின் வாழ்க்கை அமோகமாக இருக்கும்.

திருமணத்தில் எந்த ராசிக்கு எது பொருத்தமான ராசி

 

இது போன்ற ஆன்மீக தகவலை தெரிந்துக்கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement