சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள் 2021 | Sukran Peyarchi

சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள் 2021 அதிர்ஷ்டம் பெரும் ராசிக்காரர்கள் யார்?

Sukran Peyarchi 2021:- பொதுவாக ஒவ்வொரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகும் கிரகங்கள் அந்த பெயர்ச்சியின் போது அனைத்து ராசிகளுக்கும் ஒரு சில அதிர்ஷ்ட வாய்ப்புகளை வழங்கி செல்கிறது. அந்த வகையில் 02.10.2021 இன்று காலை 10 மணி அளவில் சுக்கிர பகவான் தனது சொந்த ராசியான துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். ஆகவே ஒருவருக்கு கலை, அழகு, படைப்பாற்றல், சொத்து, சுகம் போன்ற ஆடம்பர வாழ்க்கையை வழங்கும் சுக்கிரன் பகவான். இந்த பெயர்ச்சியின் போது அனைத்து ராசியினரின் குடும்ப வாழ்க்கையிலும் சில நல்ல மாற்றங்கள் நிகழ இருக்கிறது. அவற்றில் எந்தெந்த ராசிக்காரர்கள் நல்ல பலன்களை பெறப்போகிறார்கள் என்று இந்த பதிவில் நாம் படித்து தெரிந்துகொள்வோம்.

சுக்கிரன் பெயர்ச்சி 2021 எப்போது | Sukran Peyarchi 2021

ரிஷபம்:

சுக்கிரன் பகவான் ரிஷபராசிக்காரர்களின் அதிபதி ஆவார். ஆகவே இந்த சுக்கிரன் பெயர்ச்சியின் போது சுக்கிரன். உங்களது ராசியில் 7-ம் வீடான மனைவி, தொழில் கூட்டாளி சாதனங்களில் சஞ்சாரம் செய்ய போகிறார். ஆகவே உங்களது வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் நிகழ உள்ளது. குறிப்பாக திருமணம் பந்தத்தில் உள்ளவர்களுக்கும், துணையுடனான பிணைப்பு, அன்பு அதிகரித்து காணப்படும். சின்சியராக காதலித்துக்கொண்டிருப்பவர்கள் இப்பொழுது திருமணத்திற்கு தயாராகலாம். ஊடகம், பேஷன் தொழில் சார்ந்தவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.

கடகம்:

சுக்கிர பகவான் இந்த பெயர்ச்சியின் போது உங்களது ராசியில் 5-ம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு சஞ்சாரம் செய்ய உள்ளார். ஆகவே உங்கள் காதல் அதிக வலுப்பெறும். கணவன் மனைவி உறவுக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்கும் இப்பொழுது ஒற்றுமை அதிகரித்து காணப்படும். கல்வி கற்கும் மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். கலை மற்றும் எழுத்து துறையில் தொடர்புள்ளவர்களுக்கு புதுமையான வாய்ப்புகள் கிடைக்கும்.

சிம்மம்:

சுக்கிர பகவான் இந்த பெயர்ச்சியின் போது தங்களது ராசியில் 4-ம் வீட்டில் பெயர்ச்சி ஆக போகிறார். தங்களது ராசியில் 4-ம் வீடு என்பது சுகம் ஸ்தானம் ஆகும். ஆகவே இந்த சுக்கிரன் பெயர்ச்சி தங்களது வீட்டில் அதிக மகிழ்ச்சியை நிரப்பும். உறவினர்களுடன் ஒற்றுமையை அதிகரித்தும். உங்களது தொழில் அல்லது வியாபாரத்தில் அதிக முன்னேற்றத்தையும், அதிக லாபத்தையும் ஏற்படுத்தும். சிம்ம ராசிக்காரர்கள் சிலர் புதிய வாகனம் வாங்கவும் வாய்ப்பு இருக்கிறது. மேலும் தாயுடன் உள்ள உறவானது மேலும் மேலும் வலிமை பெரும்.

துலாம்:

சுக்கிர பகவான் இந்த பெயர்ச்சியின் போது தங்களது ராசிக்கு குடும்ப, தன ஸ்தானத்திற்கு செல்வதால். நீங்கள் சிறந்த பலன்களை பெறப்போகிறீர்கள். உங்கள் பேச்சில் இனிமை காணப்படும். வெளி இடங்களில் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரித்து காணப்படும். நீங்கள் வேலை செய்யும் இடத்தில் நீங்கள் நல்ல முன்னற்றதினையும், நல்ல லாபத்தையும் பெறமுடியும்.

விருச்சிகம்:

சுக்கிரன் பகவான் தங்களது ராசியில் தான் பெயர்ச்சி அடைகிறார் என்பதினால். உங்களது கலை மற்றும் அழகு மீதான நாட்டம் அதிகரித்து காணப்படும். தங்களது வாழ்க்கை துணை மீது அதிக அன்பை வெளிப்படுத்துவதோடு, அவர்களுடன் அதிக நேரத்தினை செலவிடுவீர்கள். மேலும் கணவன் மனைவி உறவுக்குள் வெகு நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி இருவரும் ஒற்றுமையாக இருப்பீர்கள். நல்ல புரிதல் காணப்படும்.

மகரம்:

சுக்கிரன் உங்களது ராசியில் 11-ம் இடமான லாபஸ்தானத்திற்கு இடம்பெயர்கிறார் என்பதால் பல வழிகளில் உங்களுக்கு நன்மைகள் நிகழப்போகிறது. வியாபாரம்/ தொழில் விஷயங்களில் நீங்கள் முதலீடு செய்ததற்கு இப்பொழுது பங்கு லாபம் குவியும். தங்கள் வீட்டிற்கு தேவையான அனைத்து விஷயங்களையும் பூர்த்தி செய்வீர்கள். ஆடை, ஆபரணங்கள் பொருட்களை வாங்குவீர்கள்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்