தைப்பூசம் 2022 தமிழ் தேதி | Thaipusam 2022

Thaipusam 2022

தைப்பூசம் எத்தனாம் தேதி வருகிறது தெரியுமா?

தைப்பூசம் என்பது தமிழ் கடவுளான முருகனுக்கு கொண்டாடப்படும் திருநாள் ஆகும். இந்த தினத்தில் உலகெங்கிலும் இருக்கும் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள், காவடி போன்ற பல நிகழ்வுகள் நடக்கும். தைப்பூசம் ஆண்டுதோறும் தை மாதம் பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு நடத்தப்படும் விழாவாகும்.

சரி இந்த 2022-ம் ஆண்டு தைப்பூசம் எப்பொழுது வருகிறது, அதன் சிறப்புகள் போன்ற தகவல்களை இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

தைப்பூசம் 2022 தமிழ் தேதி:

தை மாதம் 05-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அதாவது 18.01.2022 அன்று கொண்டாடப்படுகிறது.

தைப்பூசம் சிறப்பு:

தைப்பூசத்தன்று முருகப்பெருமான் கோவில்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து வந்தும் அலகு குத்தியும் தைப்பூச திருவிழாவை கொண்டாடுகின்றனர்.

தைப்பூசம் மிகவும் சுபிட்சமான நாள் என்பது நம்பிக்கை. எனவே அன்று தொடங்கும் நல்ல காரியங்கள் எதுவானாலும் சிறந்த பலனைக் கொடுக்கும் என்பது தொன்றுதொட்ட நம்பிக்கை.

தைப்பூச நன்னாளில் வேல் வழிபாடு செய்வது மிகுந்த நன்மைகளை அளிக்கும் என்பார்கள். வீட்டில் வேல் வைத்து வழிபாடு செய்பவர்கள் பூச நாளில் மகா ருத்ர அபிஷேகம் செய்வது சிறந்தது.

இந்த தைப்பூசம் தமிழகத்தைப் போலவே மலேசியாவிலும் தைப்பூசத் திருவிழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்று பத்து மலை முருகன் வெள்ளி ரதத்தில் கோலாகலமாக பவனி வருவார். உலக நாடுகளில் தைப்பூசத்திற்காக அரசு விடுமுறை விடப் படுவது மலேசியாவில் மட்டுமே. இது மட்டும் இன்றி இலங்கை, சிங்கப்பூர், மொரிசியஸ், சுமத்திரா போன்ற தென் கிழக்கு ஆசியப் பகுதிகள், ஆஸ்திரேலியா, பிஜி, தென்னாப்பிரிக்கா போன்ற பகுதிகளிலும் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும் முக்கிய விழா இந்த தைப்பூசம்.

தமிழக்தில் தைப்பூசம் அன்று திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, திருத்தணி, சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை என முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

தைப்பூசத்தன்று முருகனை நினைத்து விரதம் இருந்தால், குடும்பத்தில் செல்வம் பெருகும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமையும், பாசமும் அதிகரிக்கும். நோய்கள் ஏதேனும் இருந்தால் விலகி விடும்.

தைப்பூச விழா:

வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஒரு தை மாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தன்றுதான் ஒளியானார். இதனைக் குறிக்கும் விதமாக அவர் ஒளியான வடலூருக்கு அருகில் உள்ள மேட்டுக்குப்பத்தில், தைப்பூசத்தன்று இலட்சக்கணக்கானோர் கூடி வள்ளலார் விழாவைக் கொண்டாடுகிறார்கள். சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர்.

தைப்பூசம் விரதம் இருப்பது எப்படி? | Thai Poosam Viratham

தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, திருநீறு, உருத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபடுவர். தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்வர். உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் கோயிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்வர்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்