துலாம் குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022

thulam rasi guru peyarchi

Guru Peyarchi Thulam 2020 to 2021 in Tamil

guru peyarchi 2021 thulam rasi: வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் 2021-2022 ஆம் ஆண்டு துலாம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்களை பற்றித்தான் பார்க்கப் போகிறோம். இந்த குரு பெயர்ச்சியானது நல்ல பழங்களை துலாம் ராசியினருக்கு கொடுக்கப்போவது 100% உறுதி. துலாம் ராசிக்காரர்களுக்கு ஒரு மேன்மையான கால கட்டத்தை கொடுக்கப்போகிறது இந்த குரு பெயர்ச்சி. கடந்த ஆண்டில் நல்ல பலன்களை கொடுக்காத குரு இந்த ஆண்டில் எது மாதிரியான பலன்களை அள்ளி தரப்போகிறார் என்று துலாம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்களை படித்தறிவோம்.

மேஷம் குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022

துலாம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2021:

துலாம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2021

குரு பெயர்ச்சி பலன்கள் 2021 to 2022 துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு இதுவரை கிடைக்காமல் இருந்த அனைத்து நற்பலன்களும் இந்த குரு பெயர்ச்சியில் கிடைக்கும். 5-ல் குரு என்கிற நிலைமை மிகவும் அரிதாகவே வரும். வாழ்வில் நடந்த அனைத்து கஷ்டங்களும் நீங்கி நல்ல நிலைமைக்கு வரப்போகிறீர்கள். குருவின் ஒன்பதாம் பார்வை உங்கள் ராசியின் மீது இன்னும் 13 மாத காலத்திற்கு பார்க்கப்போகிறார். ராசியில் குரு பார்வை இருப்பதால் எப்போதும் புத்துணர்ச்சியோடு இருப்பீர்கள்.

அதிர்ஷ்டம்: எதிலும் சிந்தித்து செயல்படுவீர்கள். இந்த குரு பெயர்ச்சியில் அதிர்ஷ்டம் உங்கள் பக்கத்தில் இருப்பது போன்று உணர்வீர்கள். எல்லா விதத்திலும் உங்களுக்கு நன்மை மட்டுமே கிடைக்கக்கூடிய பெயர்ச்சி.

குணம்: துலாம் ராசியின் சின்னம் திராஸ். மற்றவர்களிடம் பேசும்போது த்ராஸ் போன்று சுயநலம் பார்க்காமல் ஒரே மாதிரியாக பேசுவீர்கள். சுயநலம் உள்ளவர்களிடம் பழகமாட்டார்கள்.

பாக்கியம்: பாக்கியஸ்தானம் என்பது அவர்களுடைய வயதிற்கு ஏற்றாற்போல் திருமண பாக்கியம், புத்திர பாக்கியம் மற்றும் தொழில் அமைப்புகளை கொடுக்கக்கூடியது. தகுதிக்கேற்ப அனைத்து பாக்கியங்களும் கிடைக்கக்கூடும்.

திருமணம்: இந்த குரு பெயர்ச்சியில் இதுவரை திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆகும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும். ஒரு சிலருக்கு இரண்டாம் திருமண வாழ்க்கையானது நல்லபடியாக நடக்கும்.

வேலை: பல நாட்களாக மனதிற்கு பிடிக்காமல் வேலைக்கு சென்றவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உங்களுடைய கடின உழைப்புக்கு ஏற்ற நல்ல பலன் கிடைக்கும்.

தன்னம்பிக்கை: மற்றவர்கள் கூறுவதை நம்பாமல் இவர்கள் கண்ணால் பார்த்த பிறகு நம்பக்கூடியவர்கள். புத்திசாலித்தனத்துடன் எதையும் சிந்திக்கக்கூடியவர்கள். மற்றவர்கள் கூறும் விஷயத்தினை பொறுமையாக கேட்கக்கூடியவர்கள். உங்களுக்குள் தன்னம்பிக்கை, புகழ், கவுரவம் அதிகரிக்கும்.

தொழில்/ வியாபாரம்: தொழில் வியாபாரம் போன்றவைகளில் லாபம் நன்றாக கிடைக்கும். இதுவரை குறைந்த முதலீட்டில் நல்ல லாபம் கிடைக்காதவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியில் நல்ல லாபம் பெறுவீர்கள். பொருளாதார நிலை வளர்ச்சிகரமாக இருக்கும்.

ஆரோக்கியம்: உடலிலும் மனதிலும் தேக ஆரோக்கியம் இருக்கும். எங்கும், எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். உடல் நல்ல ஆரோக்கியமாய் இருப்பதால் எந்த ஒரு வேலையையும் உடனடியாக முடிப்பீர்கள்.

ரிஷபம் குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022

 

பணம்: பணவரவு அதிகரித்து குடும்பத்தில் உங்கள் ஆலோசனைகள் அனைவராலும் ஏற்கப்படும்.

கல்வி: உயர்கல்வி படிப்பதற்கு இதுவரை இருந்து வந்த அனைத்து இடையூறுகளும் விலகும். கல்லூரிகளில் இதுவரை அரியர்ஸ் வைத்திருப்பவர்கள் கிளியர்ஸ் செய்வீர்கள்.

குடும்பம்: குடும்பத்தில் சொந்தமாக வீடு கட்ட நினைத்தவர்களுக்கு இதுவரை பல கஷ்டம் வந்திருந்தாலும் இப்போது அந்த நிலை மாறி வீடு கட்டுவீர்கள். வீட்டிற்கு கிரகப்பிரவேசம் செய்வீர்கள். சிலருக்கு வீட்டு மனை வாங்க வாய்ப்பு கிடைக்கும். தங்களிடம் இருக்கும் வாகனத்தினை விட விலை அதிகம் உள்ள வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தில் சொத்து மற்றும் நகை சேர்க்கை அதிகரிக்கும். கணவன் மனைவி உறவுக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் இதுவரை இருந்த அனைத்து சண்டை சச்சரவுகளும் நீங்கி மகிழ்ச்சி நிலைக்கும்.

பரிகாரம்: உங்களுடைய ஜென்ம நட்சத்திரம் அல்லது வியாழக்கிழமை அன்று குரு ஹோரையில் குருவின் வாகனமான யானைக்கு விருப்பமான உணவுகளை கொடுத்து அதன் ஆசிகளை பெறுங்கள்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்