ஆண் மற்றும் பெண் தும்மினால் என்ன பலன்? | தும்மல் சகுனம்
Thummal Sagunam in Tamil – சகுன சாஸ்த்திரங்களில் பலவகையான சகுன சாஸ்த்திரங்கள் உள்ளது. அவற்றில் ஒன்றுதான் தும்மல் சகுனம். யாராவது ஒரு செயலை செய்யும்பொழுது அல்லது நினைக்கும் பொழுதோ தும்மி விட்டார்கள் என்றால். கண்டிப்பாக அதனை கெட்ட சகுனமாகவே நினைக்கின்றன. பொதுவாக எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் சரி அவற்றில் இருக்கும் நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக்கொள்வது நல்லது. ஆகி இந்த தும்மலிலும் சகுனம் உள்ளது என்கிறது சாஸ்த்திரம். ஆகவே இந்த பதிவில் ஆண், பெண் தும்மினால் என்ன பலன் என்பது குறித்த தகவலை இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம்.
தும்மல் சகுனம் – Thummal Sagunam in Tamil:
No: 1
ஆண் ஏதாவது ஒரு விஷயத்தை மனதில் நினைக்கும் போது பெண் தும்மினால் அல்லது பெண் ஏதாவது ஒரு விஷயத்தை மனதில் நினைக்கும் போது ஆண் தும்மினால் அது மிகவும் நல்ல சகுனம் ஆகும். நீங்கள் மனதில் நினைத்த எண்ணங்கள் நல்ல படியாக நடந்து முடியும்.
No: 2
ஆண் ஏதாவது ஒரு செயலை மனதில் நினைக்கும் போது ஆண் தும்மினாலும், அல்லது பெண் ஏதாவது ஒரு விஷயத்தை மனதில் நினைக்கும் போது பெண் தும்மினாலும் அது சகுனம் சாஸ்த்திரம் முறை படி நல்லதல்ல, ஆக அது கெட்ட சகுனமாக பார்க்கப்படுகிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 நல்ல சகுனம், கெட்ட சகுனம் பார்ப்பது எப்படி?
No: 3
பொதுவாக தும்மலில் ஒற்றைத் தும்மல் என்பது சகுனம் சாஸ்த்திரம் படி நல்லது கிடையாது. ஆனால் இரட்டை தும்மல் என்பது மிகவும் நல்ல சகுனம் ஆகும். நீங்கள் நினைத்த காரியங்கள் நாள்படியாக நடந்து முடியும். இருப்பினும் தொடர்ச்சியாக தும்மல் வந்தால் அதற்கு பலன்கள் இல்லை.
No: 4
தும்முவதை ஒரு சகுனமாகவே நினைப்பதால், திருமணத்தில் தாலிகட்டும் போது அபசகுனமாக எவராவது தும்மினால் அதனை மணமக்கள் கேட்டுவிடக்கூடாது என்பதற்க்காக கேட்டே மேளம் பலமாகத் தட்டியும், நாதஸ்வரத்தை ஊதி பலமாக ஓசையெழுப்பியும், தும்மல் சத்தத்தை அடக்கிவிடுகின்றார்கள்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |