வார ராசி பலன்கள் 2023 | Vara Rasi Palan 2023 | Weekly Rasi Palan 2023 in Tamil
Vara Rasi Palan 2023: ஆன்மீகத்தில் மொத்தம் 12 ராசிகளும் 27 நட்சத்திரங்களும் உள்ளது. இதில் உள்ள ராசிகள் அனைத்திற்கும் பலன்கள் என்பது அத்தகைய நட்சத்திரம் மற்றும் கிரகங்களின் அடிப்படையில் தான் அமைகிறது. ஆகையால் இதுபோன்ற பலன்களை எந்த ராசிக்கு எந்த மாதிரியான பலன்கள் உள்ளது என்றும் தெரிந்துக்கொண்டால் அதற்கு ஏற்ற மாதிரி எச்சரிக்கையாக இருக்கலாம. அந்த வகையில் இன்றைய பொதுநலம். காம் பதிவில் வார ராசிபலன் பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். சரி வாருங்கள் 12 ராசிகளின் பலன்கள் என்னவென்று விரிவாக பதிவை படித்து பார்க்கலாம்.
மேஷ ராசி இந்த வார ராசிபலன்:
மேஷ ராசிக்காரர்களே, இந்த வாரம் மகிழ்ச்சி நிறைந்த வாரமாக அமையும். அலுவலகத்தில் தங்கள் பணிகளில் மட்டுமே கவனமாக இருக்கவும். பதவிஉயர்வு, ஊதிய உயர்வு தற்போது கிடையாது. கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். மேலும் பணப்புழக்கம் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உள்ளது. பழைய கடன்களைத் தந்து முடிப்பீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சக பணியாளர்கள் நல்ல முறையில் ஒத்துழைப்பு வழங்குவார்கள்.
ரிஷப ராசி இந்த வார ராசிபலன்:
ரிஷப ராசிக்கார்களுக்கு இந்த வாரம் சீரான வாரமாக இருக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். நீண்டநாள்களாக எதிர்பார்த்து வந்த பதவி உயர்வு கிடைக்கும் வாய்புள்ளது. கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். உறவினர்களால் குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும். உங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் அளவிற்கு நிதிநிலை இருக்கும். கடன் கொடுக்கல் வாங்கலில் சற்று நிதானம் தேவை. தந்தை ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும்.
மிதுன ராசி இந்த வார ராசிபலன்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அனுகூலமான வாரமாக அமையும். இந்தவாரம் நீங்கள் புதிய முயற்சிகலாய்@மேற்கொள்ளலாம். மேலும் அலுவலகத்தில் தங்கள் பணிகளில் மட்டுமே கவனமாக இருக்கவும். உயர் அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பேசும் போது மனஸ்தாபங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். மேலும் பணத்தேவை போதுமானதாக இருக்கும். ஆரோக்கியத்தில் சிறு முன்னேற்றம் இருக்கும்.
கடக ராசி இந்த வார பலன்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உங்களுக்கு மிக சிறந்த வாரமாக இருக்கும். மேலும் இந்த வாரம் முழுவதும் செய்யும் செயலில் பொறுமை மற்றும் கவனமாக இருப்பது அவசியம். அதேபோல் தொழில் மற்றும் வியாபாரத்தில் நீண்ட நாள் எதிரிகள் நீங்குவார்கள். அதனால் தொழில் முன்னேற்றம் அடையும். துணையுடன் நட்பான முறையில் பேசினால் மட்டுமே புரிந்துணர்வு ஏற்படும். இந்த வாரம் முழுவதும் செலவுகள் அதிகரித்தாலும் போதுமான அளவு பண வரவு இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
சிம்ம ராசி இந்த வார ராசிபலன்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று சீரற்ற வாரமாக காணப்படுகிறது. அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது அவசியம். இந்த வாரத்தில் பிள்ளைகளால் நற்பெயர் கிடைக்கும். அரசாங்கத்தால் எதிர்பார்த்த காரியம் நல்லமுறையில் நடக்கும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த மாதிரியான பலன்கள் கிடைத்து மகிழ்ச்சி ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை பலப்படும். பணவரவுக்கு தேவைக்கு அதிகமாகவே இருக்கும். அதே சமயம் ஆடம்பர செலவுகளும் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கன்னி ராசி இந்த வார ராசிபலன்:
கன்னி ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கும் வாரமாக இருக்கிறது. அலுவலகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். கணவன் -மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் துணையிடம் பேசும் போது பொறுமையை கடைபிடிப்பது நல்லது. மேலும் பொருளாதார நிலை என்பது இந்த வாரத்தில் மிகவும் சிறப்பாக காணப்படும். வங்கியில் இருந்து எதிர்பார்த்த பலன் கிடைக்கும். வியாபாரம் அடுத்த நிலையை அடைய எடுத்த முயற்சிகள் அனைத்தும் சாதகமாக இருக்கும். ஆரோக்கியமும் சிறப்பாக காணப்படும்.
உங்கள் ராசிக்கு எந்த தொழில் சிறந்தது |
துலாம் ராசி இந்த வார ராசிபலன்:
இந்த வாரம் துலாம் ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த மாதிரியான பலன்களை அளிக்கும் வாரமாக அமையும். அலுவலகத்தில் நீண்டநாள்களாக எதிர்பார்த்த சலுகை இப்போது கிடைக்கும். மேலும் வியாபாரத்தை பொறுத்தவரை லாபம் அந்த அளவிற்கு இருக்காது. திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். பணவரவு ஓரளவு திருப்தி தரும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படுவதற் கில்லை. ஆரோக்கியமும் சிறப்பாக காணப்படும்.
விருச்சிகம் ராசி இந்த வார ராசிபலன்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சாதாரணமான வாரமாக இருக்கும். இந்த வாரத்தில் தொழில் மற்றும் வியாபாரத்தில் எதை செய்தாலும் எச்சரிக்கையுடன் செய்ய வேண்டும். ஏனென்றால் அப்போது தான் பிரச்சனைகள் வருவதை தவிர்க்கலாம். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. துணையுடன் பேசும் போது உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி பேசுவது நல்லது. இந்த வாரத்தில் அளவுக்கு அதிகமாக நிதிநிலை இருப்பதனால் அதனை தாராளமாக செலவு செய்வீர்கள். ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.
இந்த வார தனுசு ராசி பலன் பலன்கள்:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று சீரான வாரமாக இருக்கும். வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். திருமண முயற்சிகள் சற்று இழுபறிக்குப் பின்னர் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்பார்த்ததை விட பணவரவு அதிகமாக இருக்கும். பிறருக்குக் கொடுத்து வராது என்று நினைத்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருக்கவும். செரிமானப் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை.
மகரம் இந்த வார ராசிபலன்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மந்தமான வாரமாக இருக்கும். இந்த வாரத்தில் தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த பலம் கிடைக்காது. குடும்பத்தில் உறவினர்களால் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும். பிள்ளைகளால் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த வாரத்தில் நிதிநிலைமை சீராக இருந்தாலும், சேமிப்பதற்கு ஏற்ற வாரமாக அமையாது. ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.
கும்ப ராசி இந்த வார ராசி பலன்:
இந்த வாரம் கும்ப ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும் வாரமாக அமையும். மேலும் உடல் ஆரோக்கியம் இந்த வாரத்தை பொறுத்தவரை சிறப்பானதாக அமையும். துணையிடம் நட்பான முறையில் பேசுவதன் மூலம் உங்களுக்கான நல்லுறவை அதிகரித்து கொள்வீர்கள். உங்களின் கூடுதல் உழைப்பினை தொழில் மற்றும் வியாபாரத்தில் செலுத்துவதன் மூலம் அதற்கான பலன்கள் அதிகமாக கிடைக்கும். அளவுக்கு அதிகமாக பண வரவு இருந்தாலும் கூட அதற்கு ஏற்றவாறு செலவுகளும் காணப்படும்.
மீன ராசி இந்த வார ராசி பலன்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஆனது சவால்கள் நிறைந்த வாரமாக அமையும். அதனால் எடுத்த காரியத்தை நல்ல முறையில் செய்து முடிப்பது என்பது மிகவும் கடினம். அலுவகத்தில் பணியினை நல்ல முறையில் செய்து முடிக்க வேண்டும் என்றால் பணிகளை கவனமாக திட்டமிட்டு செய்தால் மட்டுமே முடியும். வியாபாரத்தில் புதிய செயலை செய்யும் முன் கலந்தோசிப்பது அவசியம். இந்த வாரம் குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எதுவும் எடுப்பதைத் தவிர்க்கவும். பொருளாதார நிலை என்பது நல்ல முறையில் இருக்கும்.
உங்கள் ராசிக்கு எது பொருத்தமான அதிர்ஷ்ட கல்
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |