பூமி பூஜை போட சிறந்த மாதம் | வாசல் நிலை வைக்க நல்ல நாள் 2026
வாஸ்து நாள் நேரம்: ஒவ்வொருவருக்கும் தான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் நமக்கென்று சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்ற பெரும் கனவு அனைவரின் மனதிலும் இயல்பாகவே இருக்கும். வீட்டிற்கு பூமி பூஜை (bhoomi poojan dates in 2026), வீடு கட்ட அஸ்திவாரம் அமைத்தல், கட்டட பணியை தொடங்குதல், வாசக்கால் வைக்க, புதிதாக வீடு கட்டி கிரக பிரவேசம் செய்தல் போன்ற பல வீடு சம்மந்த பூஜைகளை செய்வதாக இருந்தாலும் முகூர்த்த நாளில் செய்வதோடு வாஸ்து நாட்களிலும் செய்யலாம் என்கிறார்கள். வாஸ்து பிரச்சனை அனைத்தும் தீர்வதற்கு நாம் முதலில் மனையடி சாஸ்திரம் பார்த்து வீடு கட்டுவது நல்லது. குறிப்பாக வாஸ்து பிரச்சனைகளுடன் வசிக்கும் வீட்டில் நாம் குடியிருப்பதை தவிர்க்க வேண்டும்.
வாஸ்து பிரச்சனை வராமல் தடுக்க நாம் சொந்தமாக வீடு கட்டும்போது வாஸ்து சாஸ்திரம் (vasthu naal) பார்த்து முறையாக வீடு கட்டுவது அவசியம். சரி வாங்க இப்போது பூமி பூஜை போட சிறந்த மாதம் 2026, வாஸ்து செய்யும் நாட்கள் 2026, வாஸ்து செய்ய நேரம் போன்றவற்றை மாத வாரியாக தெரிந்துக்கொள்ளலாம்..!
வீடு கட்ட ஆரம்பிக்க நல்ல நாள் 2026:

பூமி பூஜை முக்கியத்துவம்:
பூமி பூஜை ஆனது இயற்கையின் ஐந்து கூறுகளான பூமி, காற்று, நெருப்பு, ஆகாயம் மற்றும் நீர், பூமி ஆகியவற்றை திருப்திப்படுத்துவதாகும்.
நிலத்தை பாதிக்கக்கூடிய கெட்ட சக்தியை நீக்குவதும், வாஸ்து தோஷங்கள் அல்லது தோஷங்களை நீக்குவதும் பூமி பூஜையின் பலன்களாக இருக்கிறது.
இது புதிய வீட்டில் வசிப்பவர்களின் குடும்பங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் அதே வேளையில், அந்தப் பகுதியைச் சுத்தப்படுத்துகிறது மற்றும் நேர்மறை ஆற்றலை ஈர்க்கிறது.
கட்டிடத்தின் போது பூமிக்கு அடியில் உள்ள உயிரினங்களுக்கு ஏதேனும் தீங்கு விளைவித்தால் மன்னிப்பு கேட்கும் வகையில் கட்டிடம் கட்டுபவர்கள் பூமி பூஜை செய்கிறார்கள்.
பூமி பூஜையை யார் செய்ய வேண்டும்:
பொதுவாக பூமி பூஜையை வீட்டின் தலைவரின் மனைவி செய்ய வேண்டும். இந்த பூஜையை எப்படி செய்ய வேண்டும் என்று ஆலோசிப்பதற்காக ஒரு பூசாரியை வைத்து கொள்வது நல்லது.
Veedu Katta Nalla Naal 2026 | வாசக்கால் வைக்க உகந்த மாதம் 2026
| Vasakal Vaikka Nalla Naal 2026 | வாசக்கால் வைக்க உகந்த நாள் 2026 | |
| தமிழ் தேதி | வாஸ்து நேரம் (vastu time 2026) |
| ஜனவரி 26, தை 12, திங்கள் | காலை 10.41 AM முதல் 11.17 AM வரை |
| பிப்ரவரியில் எந்த வாஸ்து நாட்களும் இல்லை. | |
| மார்ச் 06, மாசி 22, வெள்ளி | காலை 10.32 AM முதல் 11.08 AM வரை |
| ஏப்ரல் 23, சித்திரை 10, வியாழன் | காலை 08.54 AM முதல் 09.30 AM வரை |
| மே மாதம் எந்த வாஸ்து நாட்களும் இல்லை. | |
| ஜூன் 04, வைகாசி 21, வெள்ளி | காலை 09.58 AM முதல் 10.34 AM வரை |
| ஜூலை 27, ஆடி 11, திங்கள் | காலை 07.44 AM முதல் 08.20 AM வரை |
| ஆகஸ்ட் 23, ஆவணி 06, ஞாயிறு | காலை 07.23 AM முதல் 07.59 AM வரை |
| செப்டம்பர் மாதம் எந்த வாஸ்து நாட்களும் இல்லை. | |
| அக்டோபர் 28, ஐப்பசி 11, புதன் | காலை 07.44 AM முதல் 08.20 AM வரை |
| நவம்பர் 24, கார்த்திகை 08, செவ்வாய் | காலை 11.29 AM முதல் பகல் 12.05 PM வரை |
| டிசம்பர் மாதம் எந்த வாஸ்து நாட்களும் இல்லை. | |
| இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |














