Veetil Panam Thanga in Tamil
இன்றைய ஆன்மிகம் பதிவில் வீட்டில் பணம் தங்குவதற்கான வழிகளை பற்றி தான் பார்க்க போகிறோம். எவ்வளவு தான் கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் பணம் வீட்டில் தங்கவே இல்லை என்பது அனைவருக்கும் இருக்க கூடிய ஒரு பிரச்சனை தான். வீட்டில் பணம் தங்காததற்கு பல காரணங்கள் இருக்கின்றன. நாம் நம்மை அறியாமல் செய்யும் தவறுகளால் கூட வீட்டில் பணவரவு குறைய தொடங்கும். அதனால் நீங்கள் இந்த பதிவில் கூறியுள்ள தவறுகளை செய்தால் அதை திருத்தி கொள்ளுங்கள். வாங்க நண்பர்களே இந்த பதிவை முழுமையாக படித்து அதை தெரிந்து கொள்வோம்.
9 சனிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்தால் கடன் பிரச்சனை காணாமல் போய்விடும்..! |
வீட்டில் பணம் தங்க என்ன செய்ய வேண்டும்..?
இன்று பலரும் வீட்டில் பணவரவு இல்லை என்று பல பரிகாரங்களை செய்து வருகிறார்கள். பரிகாரங்கள் செய்தால் மட்டும் பத்தாது. நாம் செய்யும் தவறுகளையும் திருத்தி கொள்ள வேண்டும். அந்த தவறுகள் என்ன என்று இங்கு பார்ப்போம்.
1. நாம் வாழும் வீட்டில் எப்பொழுதும் சண்டை சச்சரவுகள் இல்லாமல் இருக்கவேண்டும். எந்த வீட்டில் சண்டைகள், பிரச்சனைகள் இருக்கின்றதோ அந்த வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்ய மாட்டார்கள். அதனால் வீட்டில் பணக்கஷ்டம் உண்டாகும். பணம் வீட்டில் தாங்காது.
2. உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும் சாமி படங்கள் எதிரெதிர் திசைகளில் இருக்க கூடாது. அப்படி உங்கள் வீட்டு பூஜை அறையில் சாமி படங்களோ அல்லது சாமி சிலைகளோ எதிர் எதிரே இருந்தால் வீட்டில் பணம் தாங்காது. பணத் தட்டுப்பாடு ஏற்படும்.
3. வீட்டில் ஓடாத கடிகாரம், உடைந்த கண்ணாடி போன்ற பொருட்கள் இருந்தால் அதை வைத்து கொள்ளாதீர்கள். இதுபோன்ற பொருட்கள் வீட்டில் இருந்தால் லட்சுமி கடாட்சம் இருக்காது. அதனால் பணக்கஷ்டம் ஏற்படும். பணவரவு இருக்காது.
4. வீட்டில் இருக்கும் பெண்கள் 6 மணிக்கு மேல் தலை சீவுவது, நகம் வெட்டுவது போன்ற செயல்களை செய்ய கூடாது. இந்த செயல்களை செய்தால் வீட்டில் இருக்கும் லட்சுமி கடாட்சம் நீங்கி விடும். கடன் பிரச்சனை அதிகரிக்கும்.
5. அதுபோல விசேஷமான நாட்கள் மற்றும் செவ்வாய், வெள்ளி போன்ற கிழமைகளில் பாகற்காய் சமைப்பதை தவிர்க்க வேண்டும். எந்த விசேஷமான நாளாக இருந்தாலும் சரி அன்று பாகற்காயை சமைக்க கூடாது. இதனால் வீட்டில் பணவரவு குறைய தொடங்கும்.
இதுபோன்ற செயல்கள் செய்வதை தவிர்த்தால் வீட்டில் பணக்கஷ்டம் நீங்கும். செல்வ வளம் பெருகும். மகாலட்சமி கடாட்சம் உண்டாகும்.
இதனை மட்டும் செய்தால் போதும் வீட்டில் உள்ள கடன் பிரச்சனை தீர்ந்துவிடும்..! |
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |