விநாயகர் சதுர்த்தி பூஜைக்கு உகந்த நேரம் 2022

Vinayagar Chaturthi 2022 Puja Time in Tamil

Vinayagar Chaturthi 2022 Puja Time in Tamil

வணக்கம் நண்பர்களே.. இந்து கடவுளின் முழுமுதற் கடவுளான விநாயகருக்கு சிறப்பாக கொண்டாடப்படும் நாள் தான் விநாயகர் சதுர்த்தி. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருநாள் ஆகஸ்ட் 31-ம் நாம் புதன்கிழமை அன்று வருகிறது. இந்த நாளில் இந்துக்கள் விநாயகரை வழிபடுவார்கள் அதாவது விநாயகருக்கு பிடித்த உணவுகளை படைத்து வழிபடுவார்கள். தெருக்களில் விநாயகர் சிலை வைக்கப்படும், ஊர்வலமாக எடுத்து செல்லப்படும். அதேபோல் கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த பூஜைகளை எந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம் வாங்க..

விநாயகர் சதுர்த்தி பூஜைக்கு உகந்த நேரம்:

ஆகஸ்ட் 30 – பிற்பகல் 3:33 மணி
ஆகஸ்ட் 31 – பிற்பகல் 3:32 மணி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் ஏன் கொண்டாடுகிறார்கள் தெரியுமா? ⇒ சங்கடஹர சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி சுப முகூர்த்த நேரம்:

ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தி என்பது ஆவணி மாதம் வருகின்றது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஆவணி 15ஆம் நாள் வருகிறது. விநாயகர் அவதரித்த அல்லது பிறந்த நாளே விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி நாளின் பிள்ளையாரை வழிபடுவதற்கு சுப முகூர்த்த நேரம் வரும் ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி காலை 11.04 முதல் அன்றைய தினம் மதியம் 01.37 வரை ஆகும். இந்த சதுர்த்தி நாளில் விநாயகப் பெருமானை வேண்டி விரதம் இருக்க உகந்த நாள். இந்த நாளில் விநாயகர் உங்களுக்கு கேட்ட வரத்தை அள்ளி கொடுப்பார் என்பது காலம் காலமாக இந்து மக்களின் நம்பிக்கை ஆகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 விநாயகர் வரலாறு

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்