ராகு எமகண்டத்தில் குழந்தை பிறந்தால் அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்..!

What will life be like if a child is born during Rahu Yamagandam period in tamil

ராகு காலத்தில் குழந்தை பிறந்தால்

இன்றைய பதிவில் மூலம் ராகுகாலம், எமகண்டத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள போகிறோம். பொதுவாக குழந்தைகள் இந்த கிழமையில் பிறக்க வேண்டும், இந்த தேதியில் பிறந்தால் தான் நல்லது, இந்த நேரத்தில் பிறக்கவேண்டும் என்று நிறைய விதமான யோசனைகள் உள்ளது. அதிலும் குழந்தை ராகுகாலம், எமகண்டத்தில் பிறந்தால் அவருடைய வாழ்க்கை எப்படி இருக்க போகிறதோ என்று பயமுறுத்துவார்கள். அப்படி என்ன பா அவர்களுடைய வாழ்க்கை எப்படித்தான் இருக்கும் வாங்க அதையும் பார்த்துவிடலாம்..!

ராகுகாலம், எமகண்டத்தில் குழந்தை பிறந்தால்:

மனிதனுடைய பிறப்பு, இறப்பு பருவமடைவது  போன்ற விஷயங்கள் அனைத்துமே எதுவுமே நம்மால் மாற்ற முடியாது ஆதலால் குழந்தை பிறந்த நேரத்தை வைத்து அவருடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று பயப்படவேண்டாம்.

எமகண்டம் என்று சொல்வது குருவுடைய மகன் என்று சொல்லலாம். அப்படி இல்லையென்றால் குருவினுடைய உபகோள் என்று சொல்லாம். இதை கேது என்று சொல்வார்கள் அதாவது எமகண்டம் என்பது கேதுடைய அம்சம் கேதுவுடைய காலகட்டம் என்றும் சொல்லாம்.

ராகுகாலம், எமகண்டத்தில் குழந்தை பிறந்தால் அவருடைய  ஆயுள் செல்வம், வாழ்க்கையை எந்த விதத்திலும் பாதிக்காது என்பதை பெற்றோர்களும் சரி அதனை நினைத்து பயந்துகொண்டு இருப்பவர்கள் புரிந்துகொள்ளுங்கள்.

இவர்கள் வளரும் போது துர்க்கையை வணங்குவதை கவனமாக சொல்லிக் கொடுத்துவிடுங்கள். சற்று இவர்கள் பிடிவாதம் உடையவராக இருப்பார்கள். நினைத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதிலும் விட்டுக்கொடுக்காமல்  இருப்பார்கள்.

இந்த பிரபஞ்சத்தில் பிடிவாதமாக இருந்தால் தான் எதுவாக இருந்தாலும் கிடைக்கும் அதேபோல் ராகுகாலத்தில் பிறந்த குழந்தை தான் வெற்றியை குவிக்கும்.

எமகண்டத்தில் பிறந்தவர்கள் அதாவது கேதுவின் பிறந்த குழந்தை அதிகமாக எதிலும் ஈடுபடாமல் இருப்பார்கள். அதேபோல் அவர்களை சின்ன வயதிலிருந்து விநாயகரை வழிபட கற்றுக்கொடுங்கள். இவர்களும் சற்று வைராக்கியம் கொண்டவராக இருப்பார்கள்.

ராகுகாலத்தில் பிறந்த குழந்தைகள் ஆயில்யம், கேட்டை, ரேவதி, திருவாதிரை, சுவாதி, சதயம் நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் எந்த பாதிப்பையும் அடையமாட்டார்கள். மாபெரும் வெற்றியை குவிப்பார்கள்.

எமகண்டத்தில் பிறந்த குழந்தை புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் நிச்சயமாக இவர்கள் ஆராய்ச்சியாளராகவும், விண்வெளி துறையில் ஆதிக்கம் செலுத்துவார்கள். அதேபோல் இவர்கள் சாதனை புரிபவர்களாகவும் இருப்பார்கள்.

ஆகவே ராகுகாலம், எமகண்டத்தில் குழந்தை பிறந்தால் அதனால் எந்த பிரச்சனையும் கிடையாது ஆகவே யாரும் பயம் கொள்ள வேண்டும். அவர்கள் நிச்சயம் நினைத்த காரியத்தை செய்வார்கள்.

வெள்ளிக்கிழமை ஆண் குழந்தை பிறந்தால் என்ன பலன்

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்