தங்கம் மோதிரம் அணிவதன் பலன்கள்
நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவின் மூலம் தங்கம் எந்த ராசிக்காரர்கள் அணிந்தால் நல்லது என்பதை தெரிந்துகொள்வோம். பொதுவாக நம் உடலில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை அணிந்துகொள்வது பழக்கம் உள்ளது அதனை அணிவதன் பலன்களை எப்போதாவது யோசித்திருக்கிர்களா? அப்படி தெரியவில்லை என்றால் இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். பெண்கள் வெள்ளி நகை அணிவதால் இத்தனை நன்மைகளா..! அதனை தெரிந்துகொள்ளுங்கள். இன்று தங்க நகைகளை சில ராசிக்காரர்கள் மட்டும் அணிந்தால் அவ்வளவு நன்மையாம் அது எந்த ராசிக்காரர், அவர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்று தெரிந்துகொள்வோம் வாங்க..!
யார் தங்க நகை அணிந்தால் நன்மை கிடைக்கும்:
சிம்ம ராசி:
இந்த ராசிக்காரர் தங்கம் மோதிரம் அணிவதை மிகவும் மங்களகரமாக சொல்லப்படுகிறது. ஜோதிடத்தில் சிம்ம ராசிக்காரர் நெருப்பின் மறு உருவம் ஆகவே அவர் தங்கத்தால் ஆனா நகைகளை அணிந்தால் மிகவும் நல்லது.
கன்னி ராசி:
இந்த ராசிக்காரர் இன்பம் நிறைந்த வாழ்க்கையை மட்டும் விரும்புவர், மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கையை மட்டும் விரும்புவர். அவருக்கும் தங்கத்தால் ஆன மோதிரம் மற்றும் தங்கத்தால் ஆன நகைகளை அணிந்துகொள்ளலாம். அது அவருக்கு மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையையும் நிம்மதியையும் கொடுக்கும்.
துலாம் ராசி:
இந்த ராசிக்காரருக்கு தங்கம் அணிவது என்பது மங்களகரமாக விஷயமாகும். சாஸ்திர படி தங்கம் அணிந்து கொண்டால் அவருக்கு நன்மைகள் கிடைக்கும். அதேபோல் பல வகையான அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
மீனம் ராசி:
மீன ராசிக்காரருக்கு தங்கம் அணிந்துகொண்டால் வாழ்க்கையில் உள்ள தடைகள் விலகும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது. வாழ்க்கையில் பல நன்மைகள் நிகழும். அதேபோல் இந்த ராசிக்காரர் தங்கம் அணிவது என்பது மிகவும் கடினமான ஒன்று. சாஸ்திரத்தில் அனைத்தும் சரியாக இருக்கும் நபருக்கு மட்டுமே தங்கம் அணிய முடியும். சிலருக்கு அது மிகவும் குறைவாகதான் நடக்கும்.
இந்த ராசி ஆண்கள் மிகுந்த அறிவாற்றல் உடையவர்களாக இருப்பார்கள். இதில் உங்க ராசி இருக்கா..!
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |