திருமண மோதிரத்தை இடது கையில் அணிவதன் ரகசியம் தெரியுமா..?

Advertisement

திருமண சடங்குகள்

வணக்கம் ஆன்மீக நண்பர்களே..! திருமணம் என்றால் ஆயிரங்காலத்து பயிர் என்று நாம் முன்னோர்கள் சொல்வார்கள். அப்படி இரு மனங்கள் இணையும் அந்த திருமணத்தில் நிறைய சடங்குகள் இருக்கின்றன. அதில் திருமண மோதிரம் அணிவதும் ஒரு வித சடங்கு. அந்த திருமண மோதிரத்தை இடது கையில் தான்  அணிவார்கள். எதனால் அந்த மோதிரத்தை இடது கையில் அணிகிறார்கள் என்று திருமணம் ஆனவர்களும், திருமணம் ஆகப்போகும் நபர்களும் இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொண்டு  பயன்பெறுங்கள்.

இதையும் படியுங்கள்⇒ திருமணத்தின் போது அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன் தெரியுமா?

திருமணம்:

திருமணம் என்பது ஒருவருக்கு ஒருவர் நன்றாக புரிந்து கொண்டு அதன் பிறகு நடக்கும் ஒரு சடங்கு. இந்த திருமணத்தை ஒவ்வொரு மதத்திலும் ஒவ்வொரு முறைப்படி செய்து வருகிறார்கள். இந்து திருமணத்தில் கழுத்தில் தாலி கட்டுவது, காலில் மெட்டி அணிவது, கையில் மோதிரம் அணிவது இதுபோன்ற இன்னும் நிறைய சடங்குகள் இருக்கின்றன.

மோதிர பந்தம்:

பொதுவாக நிச்சயதார்த்தம் அல்லது திருமணம் இரண்டில் எதுவாக இருந்தாலும் மோதிரம் அணிவது வழக்கம். அப்படி அணியும் அந்த மோதிரத்தை இடது கையில் தான் அணிவார்கள் கவனித்து இருக்கீர்களா. எதனால் அப்படி செய்கிறார்கள் என்றால் அப்போது தான் ஆண், பெண் இருவருடைய பந்தமும் முடிவில்லாமல் தொடரும் என்பது ஒரு காரணம். அதுமட்டும் இல்லாமல் அப்படி மோதிரம் அணியும் அந்த விரல் காதல் விரல் என்பது எகிப்து நாகரத்திலிருந்து தோன்றியது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

திருமண மோதிரம்:

திருமண மோதிரம் என்பது ஒருவருக்கு பெருமையும் மங்கலத்தையும் தரக்கூடிய அணிகலன்களுள் முக்கியமான ஒன்று. அந்த மோதிரம் திருமணத்திற்கு பிறகு அவர்கள் இணைந்து வாழும் வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், புரிதல் அதிகரிப்பதற்காகவும் அணிவது என்பது ஒரு நம்பிக்கை.

மோதிர விரல்:

இடது கையில் சுண்டு விரலுக்கு பக்கத்தில் உள்ள விரலை தான் மோதிர விரல் என்று சொல்வார்கள். அந்த விரல் இதயத்திற்கு நெருக்கமான விரல் என்று கூறப்படுகிறது. மேலும் நிச்சயதார்த்த மோதிரத்தை அந்த விரலில் அணியும் போது தனது வாழ்க்கை துணையுடன் உணர்ச்சிவசமான ஒரு பிணைப்பை ஏற்படுத்தும் என்பது ஒரு நம்பிக்கை.

அதுமட்டும் இல்லாமல் அந்த மோதிரத்தை அணிந்தவர் உங்களுடைய இதயத்திற்கு நெருக்கமானவர் என்பதை உணர்த்தும் என்று கூறுகிறார்கள்.

கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு செய்வது ஏன்..?

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement