அகத்திக்கீரை நன்மைகள் | Agathi Keerai Benefits in Tamil

Agathi Keerai Benefits in Tamil

அகத்திக்கீரை பயன்கள் | Agathi Keerai Uses in Tamil

வணக்கம் நண்பர்களே கீரை என்றாலே பல சத்துக்கள் அடங்கியுள்ளது என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஒவ்வொரு கீரையிலும் எண்ண முடியாத அளவிற்கு பல நன்மைகள் உள்ளது. அதில் அகத்திக்கீரையில் என்னென்ன நன்மைகள் உள்ளது என்று தெரிந்துக்கொள்ளுவோம். அகத்திக்கீரையை மாதத்தில் ஒரு நாள் அமாவாசை அன்றும் விசேஷ நாட்களில் சமையல் செய்து சாப்பிடுவார்கள். அனைத்து கீரை கடையிலும் எளிமையாக கிடைக்கக்கூடியது இந்த அகத்திக்கீரை. அகத்திக்கீரையில் வைட்டமின் உயிர்ச்சத்தும், சுண்ணாம்புச் சத்தும் அதிகளவு இடம்பெற்றுள்ளது. இப்படி பல நன்மை நிறைந்துள்ள அகத்திக்கீரை பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

முருங்கை கீரை நன்மைகள்

உடல் உஷ்ணம் குறைய:

உடல் உஷ்ணம் குறைய

சிலருக்கு உடலில் உஷ்ணம் அதிகமாக இருக்கும். இதனால் கண்களில் நீர் வடிதல், முகத்தில் கொப்பளம் போன்றவை ஏற்படும். உடல் உஷ்ணம், இளநரை போன்றவற்றை வராமல் தடுக்க அகத்திக்கீரையை அரைத்து உச்சந்தலையில் ஒருமணி நேரம் ஊர வைத்து தேய்த்து குளித்து வர உடல் உஷ்ணம் மற்றும் இளநரை நீங்கும்.

இரத்தம் உறைதல் குணமாக:

இரத்தம் உறைதல் குணமாக

ஏதேனும் உடலில் அடிபட்டு இரத்தம் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தால் அகத்திக் கீரையை அரைத்துக் காயம்பட்ட இடத்தில் வைத்துக் கட்டினால் இரத்தம் நின்று சீழ்பிடிக்காமல் விரைவில் காயம் குணமாகும்.

பித்தம் குறைய:

பித்தம் குறைய

அகத்திக் கீரையைச் சாம்பாரில் சேர்த்து உணவுடன் சாப்பிட்டால் பித்தம் குறையும், கபம், வாதம் நீங்கும்.

எலும்பு வலுப்பெற அகத்தி:

 agathi keerai benefits in tamil

அகத்தி கீரையில் எலும்புகள் பலம் பெறுவதற்கான சுண்ணாம்பு சத்து அதிகளவு இருக்கிறது. உடலுக்கு தேவையான சுண்ணாம்பு சத்து கிடைக்க அடிக்கடி அகத்திக்கீரை சாப்பிட்டு வரலாம். உடலில் போதுமான சுண்ணாம்பு சத்து இல்லையென்றால் எலும்புகளின் வளர்ச்சி குறைந்துவிடும். வயது முதிர்வு அடைந்த காலத்தில் சிலருக்கு எலும்புகள் பலமற்று உடைந்து போய்விடும். இதற்கு காரணம் போதுமான சுண்ணாம்பு சத்து உடலில் இல்லாததால் தான். சுண்ணாம்பு சத்து நிறைந்த அகத்திக்கீரையை சாப்பிட்டு வந்தால் எலும்புகளை பாதுகாக்கலாம்.

தோல் சம்பந்த நோய் குணமாக:

 agathi keerai uses in tamil

ஒரு சிலருக்கு எப்போதும் தோல் சம்பந்தமான அரிப்பு, அலர்ஜி, தேமல், சொறி சிரங்கு போன்ற நோய்கள் இருந்துக்கொண்டே இருக்கும். இதற்கு சரியான தீர்வு அகத்தி கீரை சம அளவு எடுத்துக்கொண்டு அதனுடன் தேங்காயை அரைத்து அதன் சாறினை எடுத்து அந்த சாற்றில் மஞ்சள் தூள் சேர்த்து தோல் நோய் உள்ளங்களில் பற்று போட்டுவர தோல் சம்பந்தமான அனைத்து நோய்களும் பறந்தோடிவிடும்.

சைனஸ் நோய் சரியாக:

 அகத்திக்கீரை நன்மைகள்

அடிக்கடி பலரும் இப்போது சந்திக்கக்கூடிய பிரச்சனையில் ஒன்று சைனஸ், தலைவலி பிரச்சனைதான். இதனால் பலமணி நேரம் தொடர்ந்து எந்த வேலைகளையும் அவர்களால் செய்ய முடியாது. விடாது தலைவலி இருப்பவர்கள், சைனஸ் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், தலையில் நீர் கோர்த்து கொண்டு அவதிப்படுபவர்கள் அகத்திகீரையின் சாறினை நெற்றியில் தடவி வரலாம்.

பசலைக்கீரை பயன்கள்

உடல் சுறுசுறுப்பாக இருக்க:

 அகத்திக்கீரை பயன்கள்

சிலர் எப்போதும் உடல் சோர்வுடனே காணப்படுவார்கள். அதற்கு காரணம் மூளை பகுதியில் கோளாறு ஏற்பட்டிருத்தல். இதனால் எப்போதும் மூளையானது மந்த நிலையில் இருக்கும், எப்போதும் உடல் சோர்வு, ஞாபக திறன் குறைவாக உள்ளவர்கள் உணவில் அடிக்கடி அகத்திக்கீரையை சேர்த்து சாப்பிட்டு வர இவை அனைத்தும் பூரண குணமாகும்.

வயிற்று வலி/ மலசிக்கல் குணமாக:

 benefits of agathi keerai in tamil

அடிக்கடி மலச்சிக்கல் பிரச்சினையினால் அவதிப்படுபவர்கள் இன்றும் பலர் உண்டு. மலசிக்கல் மட்டுமல்லாமல் பெண்களுக்கு நிகராக ஆண்களும் வயிற்று வலியில் துன்பப்படுகிறார்கள். மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபட அகத்திக்கீரை சாப்பிட்டு வரலாம். அதோடு வயிற்று வலி குணமாக அகத்திக் கீரையைச் சாறு பிழிந்து அதில் தேன் சேர்த்து சாப்பிட்டால் வயிற்று வலி குறைந்துவிடும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆரோக்கியம்