அதிக உதிரப்போக்கு நிற்க | Over Bleeding During Periods Remedies in Tamil

How to Stop Over Bleeding in Tamil

மாதவிடாய் அதிக உதிரப் போக்கு குறைய | How to Stop Over Bleeding in Tamil

மாதவிடாய் காலத்தில் பெண்கள் எல்லோருமே மிகவும் அவதிக்குள்ளாவார்கள். சில பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் பயங்கரமாக வயிற்றில் வலி ஏற்படும். சிலருக்கு வலி எதுவும் இருக்காது. ஆனால் வலி இல்லாமல் அதிக ரத்த போக்கு பிரச்சனை இருக்கும். இதனால் அந்த நேரத்தில் போதுமான ஆற்றல் பெண்களிடம் காணப்படாது. ஒரு சிலருக்கு மாதவிடாயின் போது முதல் நாளே அதிகமாக இரத்த போக்கு பிரச்சனை இருக்கும். ஒரு சிலருக்குத்தான் இரண்டாவது நாள் அதிக உதிரப்போக்கு காணப்படும். நமது உடலில் அதிக இரத்தம் வெளியேறும்போது இரத்த சிவப்பணுக்கள் குறைந்து இதனால் தான் பலருக்கும் இரத்த சோகை குறைபாடு ஏற்படுகிறது. அதிக உதிரப்போக்கு பிரச்சனையை ஆரம்ப காலத்திலே நாம் கண்டறிந்தால் எளிமையாக சரி செய்துவிடலாம். இந்த பதிவில் மாதவிடாயின் போது அதிக இரத்த போக்கிற்கான காரணம், அதிகமான உதிரப்போக்கிற்கான அறிகுறி, எதனால் ஏற்படுகிறது போன்ற பல விஷயங்களை பொதுநலம்.காம் பதிவு மூலம் உங்களுக்கு தெரியப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை சரியாக பாட்டி வைத்தியம்..!

அதிக இரத்த போக்கு ஏற்பட காரணம்:

சாதாரணமாக மாதவிடாயின் காலமானது 28 நாட்கள் என்று கணக்கிடப்பட்டு வைக்கப்பட்டள்ளது. மாதவிடாயின் போது 30 முதல் 40 ML அளவிற்கு நமது உடலிலிருந்து இரத்தத்தினை இழக்க வேண்டிய நிலை ஏற்படும். சரியான, சமமான, ஆர்ஸ்டிரைஜன் மற்றும் புரோஜெஸ்டிரோன் ஹார்மோன்கள் இடையே ஏற்படுகிறது. மாதவிடாயின் போது ஹார்மோன்கள் எண்டோமெட்ரியம் என்ற காரணியை உருவாக்குகிறது.

மேல் கூறியுள்ள இரண்டு ஹார்மோன்களுக்கும் இடையில் நடக்கும் சமமற்ற நிலை மூலம் மாதவிடாயின் போது பெண்களுக்கு அதிக இரத்தப்போக்கு பிரச்சனை ஏற்படுகிறது. மேல் கூறிய இரண்டு ஹார்மோன்களும் சமமாக இருந்தால் மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப் போக்கு இருக்காது. ஹார்மோன்கள் சமமான நிலையில் இல்லாத போது என்டோமெட்ரியம் என்பது அதிகமான ரத்தப்போக்கை  ஏற்படுத்திவிடுகிறது.

அதிகமாக இரத்த போக்கின் போது வழக்கத்தை விட அதிகமாக நாப்கின் பயன்படுத்தும் சூழல் ஏற்படும். அந்த நேரத்தில் உங்களுக்கு இரண்டு மடங்காக நாப்கின் தேவைப்படும். அதிக இரத்த போக்கு காரணத்தினால் சிலருக்கு மாதவிடாய் காலமானது 7 நாட்கள் வரையிலும் நீட்டிக்கப்படும். அது போன்ற பிரச்சனையை சந்திப்பவர்கள் உங்கள் பாரம்பரிய மகப்பேறு மருத்துவரை சந்தித்து அதற்கான தகுந்த சிகிச்சைகளை மேற்கொண்டு வரலாம்.

வயது அடிப்படையில் அதிக இரத்த போக்கிற்கான அறிகுறி:

20-25 வயதிற்கு உள்ளவர்களின் மாதவிடாய் அறிகுறி: Polycystic Ovaries” என்று சொல்லக்கூடிய கர்ப்பப் பையில் நீர்க்கட்டிகள் இருப்பது ஒரு காரணமாக கூட  இருக்கலாம். மேலும் உடற்பயிற்சி எதுவும் செய்யாமல் இருப்பது, உணவு வகைகளை சரியான முறையில் எடுத்துக்கொள்ளாமல் இருந்தாலும் உடலில் மாதவிடாயின் போது அதிக ரத்தப்போக்கு ஏற்படும்.

25-35 வயதிற்கு உள்ளவர்களின் மாதவிடாய் அறிகுறி: இந்த வயதில் அதிக இரத்தப்போக்கு இருந்தால் கர்ப்பப்பைவாய் புற்றுநோய்க்கான மிக முக்கியமான அறிகுறியாகக்கூட இருக்கலாம். இந்த வயதில் உள்ள பெண்கள் மாதவிடாய் காலத்தின் போது அதிக ரத்தப்போக்கு ஏற்படுவதை சாதாரணமாக நினைத்து விடக்கூடாது. இந்த பிரச்சனையை ஆரம்ப காலத்திலே நாம் கண்டறிந்து விட்டால் ஈசியாக  குணப்படுத்திவிடலாம். சில நேரத்தில் இது நீர்க்கட்டிப் பிரச்சனையாக கூட இருக்க வாய்ப்புள்ளது. அபார்ஷன் ஏற்படுவதைக் குறிக்கலாம். எனவே, உடலில் மாதவிடாய் காலத்தின் நேரத்தில் அதிக ரத்தப்போக்கை அலட்சியப்படுத்தாமல் உடனே தகுந்த மருத்துவரிடம் சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது நல்லது.

40 வயதை கடந்தவர்களுக்கு: 40 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு மாதவிடாயின் போது அதிக உதிர போக்கு ஏற்பட்டால், கர்ப்பப்பைவாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக மெனோபாஸ் காலத்துக்குப் பிறகும் ரத்தப்போக்கு ஏற்பட்டால் (Post Menopausal Bleeding) மருத்துவரிடம் பரிசோதனை செய்து அதற்கான சரியான காரணத்தைக் அறிந்துக்கொள்வது மிகவும்  நல்லது.

இரத்தம் அதிகரிக்க

மாற்றம் அடைந்த உணவு முறைகள்:

பெரும்பாலும் உடலில் சத்தில் குறைபாடாக இருப்பது இரும்புசத்து. அதிலும் 100-க்கு 98% இரத்தசோகை குறைவினால் பெண்கள் தான் பெரும்பாலும் அவதிப்படுகிறார்கள். ஏனென்றால் பெண்கள் தான் மாதவிடாய், பிரசவம், பருவமடைதல் போன்ற அனைத்திலும் அதிகமாக இரத்த இழப்பினை மேற்கொண்டு வருகிறார்கள்.

அதிக இரத்தப்போக்கினை குறைக்க இருப்புச்சத்து நிறைந்த கீரை, மாதுளை, அத்திப்பழம், பப்பாளி போன்ற உணவு வகைகளை சாப்பிட்டு வரலாம். மருத்துவரின் ஆலோசனைப்படி சத்து மாத்திரைகளும் அதிக இரத்தப்போக்கிற்கு சாப்பிடலாம். இப்படி, அதிக ரத்தப்போக்கு ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அந்தக் காரணத்தைச் சரியாகதெரிந்துகொண்டு அதற்கான சிகிச்சையை பின்பற்றினால் அதிக இரத்த போக்கிலிருந்து தப்பித்துவிடலாம்.

அதிக இரத்த போக்கு எதனால் ஏற்படுகிறது?

  1. மாதவிடாய் காலத்தில் கருமுட்டை உற்பத்தி செய்யத் தவறும்போது, கர்ப்பப்பையானது செயல் இழந்து காணப்படுவதால் அதிக இரத்த போக்கு ஏற்படுகிறது.
  2. உடலில் கர்ப்பப்பை மற்றும் சினைப்பையில் நீர்க்கட்டி இருந்தால் மாதவிடாயின் போது அதிகமாக இரத்த போக்கு ஏற்படும்.
  3. கர்ப்பப்பைவாயில் புற்றுநோய் இருந்தால் அதிக உதிரப்போக்கு ஏற்படலாம்.
  4. கர்ப்பப்பைச் சுரப்பு திசுக்கட்டியால் (Adenomyosis) ஏற்படலாம்.
  5. மேலும் தைராய்டு பிரச்சனை, சிறுநீரகக் குறைபாடுகள், மருந்து ஒவ்வாமைகளால் அதிக இரத்த போக்கு வாய்ப்புள்ளது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil maruthuvam tips