தூக்கம் அதிகம் வர காரணம்
வணக்கம் நண்பர்களே இன்று ஆரோக்கியம் பதிவில் அதிகம் தூக்கம் வருவது ஏன் என்பதை பற்றி பார்க்கப்போகிறோம். பொதுவாக தூக்கம் என்பது ஒரு மனிதனுக்கு முக்கியமானது. ஒரு மனிதனுக்கு உணவு தண்ணீர் எவ்வளவு முக்கியமோ அதனை போல் தூக்கம் என்பது முக்கியம். ஒரு நாள் தூங்காமல் இருந்தால் அன்று எப்போதும் போல் இருக்க முடியாது. நன்றாக தூங்கினால் கூட சிலர் படுத்த உடனே தூங்கிவிடுவார்கள். இன்னும் சிலர் எவ்வளவு தூங்கினாலும் தூக்கம் வருகிறது என்று சொல்வார்கள். இப்போது அதற்கான காரணங்களை பற்றித்தான் பார்க்க போகிறோம்.
தூக்கம் அதிகம் வர காரணம்:
- அதிகம் தூக்கம் வருவதற்கு காரணம் அதிகம் மன உளைச்சல், உடல் அசதி இந்த இரண்டும் இருந்தால் எப்போதும் தூங்கிக்கொண்டே இருப்பீர்கள்.
- அதிகம் யோசித்துக்கொண்டே இருந்தால் தூக்கம் வரும். யோசித்ததை யாரிடமும் சொல்லாமல் உங்களுக்குள்வைத்துக்கொண்டு சொல்லாமல் இருந்தாலும் நேரம் தூங்குவீர்கள்.
- ஒரு மனிதன் குறைந்தது எட்டு மணி நேரம் தூங்க வேண்டும் அப்படி இல்லாமல் குறைந்த நேரம் தூங்கினால் உங்களுக்கு அதிகம் தூக்கம் வருவதற்கு காரணம்.
- யாரிடமும் பேசாமலும், எல்லாவற்றையும் உங்களிடையே வைத்துக்கொண்டால் அதுவே நிங்கள் அதிகம் தூங்குவதற்கு காரணம்.
- அதிகம் தூங்காமல் இருப்பதற்கு உங்களின் எதிர்மறை எண்ணங்களும் இதற்கு காரணம். ஏனென்றால் உடல் அளவிலும் அவர்கள் எதிர்மறை எண்ணங்களை கொண்டிருப்பார்கள்.
- நீரிழிவு நோய்கள் உடலை பலவீனமாக மாற்றி தூக்கத்தை அதிகமாக தரும்.
- இரவு நேரங்களில் அதிகமாக சாப்பிட்டால் நன்றாக தூங்க முடிவும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது மிகவும் தவறான ஒன்று. அதிகம் உணவுகளை சாப்பிட்டால் செரிமாணத்திற்கு நேரம் அதிகமாகும் அதனால் தூக்கமுடியாமல் போகும். பகல் நேரங்களில் தூங்குவீர்கள்.
- மனித உடலை மூன்று வகைகளாக பிரிகிறார்கள் அது வாதம், பித்தம், கபம் என்று பிரிகிறார்கள். இதன் மூன்றில் தான் இருப்பார்கள். மற்ற உடலை விட கபம் உடல் அமைப்பில் உள்ளவர்களுக்கு அதிகம் தூக்கம் தேவைப்படுகிறது. அந்த வகையில் நீங்கள் இருக்கிறீர்கள் என்றால் இரவு நேரங்களில் அதிகம் தூக்கத்திற்காக நேரம் செலவு செய்யுங்கள்.
- முக்கியமாக நாம் தூங்காமல் இருப்பதற்கு முக்கிய காரணம் நாம் தான். காலை எழுந்தவுடன் ஒரே இடத்தில் உட்காராமல் அதிகம் வேலை செய்யுங்கள். புத்தகம் படியுங்கள், இல்லையேற்றால் நண்பர்களிடம் பேசி விளையாடுங்கள். இதனை செய்வதன் மூலம் உடல் புத்துணர்ச்சி பெரும், காலை நேரங்களில் சுறு சுறுப்பாக விளங்குவீர்கள்.
- அதிகம் நேரம் தூங்குவதற்கு காரணம் உங்களின் சோம்பல்கள் தான் காரணம். இனி காலையில் எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்யுங்கள். புத்தகம் படியுங்கள், அதிகம் பேசுங்கள் இப்படி அன்றாடம் மனிதர்கள் செய்யும் வேலையைகளை செய்து வந்தால் தூக்கம் பகல் நேரங்களில் வருவதை தவிர்க்கலாம்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> |
Tamil maruthuvam tips |