அத்திப்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு தீமைகளா.! இவர்கள் மட்டும் சாப்பிட கூடாது.?

Advertisement

அத்திப்பழம் தீமைகள்

வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் அத்திப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகளை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். பொதுவாகவே அத்திப்பழத்தில் அதிகமான சத்துக்கள் நிறைந்துள்ளது என்று பலரும் அதனை சாப்பிட்டு வருவார்கள் முக்கியமாக கர்ப்பிணி பெண்கள் அதிகமாவே இந்த அத்திப்பழத்தை உடலில் இரத்தம் ஊறுவதற்காக சாப்பிட்டு வருவார்கள், ஆனால் இந்த அத்திப்பழத்தை அதிக அளவில் எடுத்துக்கொள்ளும் பொழுது உடலில் ஏற்படும் சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தும், அவை என்னவென்று நம் பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க.

அத்திப்பழம் சாகுபடி முறை & பயன்கள்..!

அத்திப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் | Athipalam Side Effects in Tamil:

உடலில் ஏதேனும் சத்துக்கள் தேவை என்பதற்காக சில மருத்துவம் நிறைந்த பழங்களை சாப்பிட்டு வந்தாலும், அவை சில நேரங்களில் உடலுக்கு நஞ்சாக மாறிக்கிறது.

அத்திப்பழத்தை தூய்மையாகவோ அல்லது உலரவைத்தோ அதிகமாக சாப்பிடும் பொழுது உடலுக்கு பல தீங்குகளை தருகிறது.  இந்த அத்திப்பழத்தில் நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளதால் இவை செரிமான கோளாறுகளை ஏற்படுத்துவதற்கும் முக்கியமாக இருக்கிறது. இவற்றில் நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள், தாதுக்கள் போன்றவை நிறைந்துள்ளது.

வயிற்று வலி பிரச்சனை:

வயிற்று வலி

வயிற்று வலி பிரச்சனை உள்ளவர்கள் அத்திப்பழத்தை எடுத்துக்கொள்ள கூடாது, இதனை வயிற்று பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிட்டு வருவதால் ஜீரணமாகுவதற்கு அதிக நேரங்களை எடுத்துக்கொள்ளும், அதோடு மட்டுமின்றி வயிற்றில் அதிக வலியும்,  குமட்டல், வாந்தி, வயிறு உப்புதல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் பாதிப்புள்ளதாக இருக்கிறது.

குடல் இயக்கங்களில் பிரச்சனை ஏற்பட காரணம்:

குடல் இயக்கங்களில் பிரச்சனை

அத்திப்பழமானது விதைகளால் நிரம்பியுள்ள பழமாகும். இந்த பழத்தை பெரும்பாலும் ஒரு சிலர் கடித்து சாப்பிடுவதை விட அதை விழுங்குவதே அதிகம்.  இதுபோல் விழுங்கி சாப்பிடுவதால் ஜீரணம் ஆவதற்கு கடினமாகிறது, இது போன்ற பிரச்சனைகளால் குடலில் அடைப்பை உண்டாக்கி கல்லீரலுக்கும், குடலுக்கும் பல தீங்குகளை விளைவிக்க கூடியதாக இருக்கிறது. மேலும் இந்த அத்திப்பழம் ஆனது வெப்பத்தை கொண்டதால் இவை மலக்குடலில் இரத்தப்போக்கு உண்டாக செய்கிறது.

நீரழிவு நோய்:

நீரழிவு நோய்

அத்திப்பழம் ஆனது இரத்த சர்க்கரை நோய்களை குறைத்து வந்தாலும், இதனை அதிகமாக தொடர்ந்து சாப்பிட்டு வரும்பொழுது இரத்த சர்க்கரையின் அளவை மிகவும் அதிகமாக குறைத்து விடும் இதனால் பல பின் விளைவுகளை சந்திப்பது போல இருக்கும், எனவே நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு மாத்திரை எடுத்து கொள்பவர்கள் அத்திப்பழத்தை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

ஆஸ்துமா ஏற்பட காரணம்:

ஆஸ்துமா

ஆஸ்த்துமா நோயால் அவதிப்படுபவர்கள் அத்திப்பழத்தை சாப்பிட கூடாது என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். சிலருக்கு பிறந்ததில் இருந்தே ஒவ்வாமை அலர்ஜி மற்றும் ஆஸ்துமா பிரச்சனைகள் இருக்கும். இது போன்ற பிரச்சனை உள்ளவர்கள் காட்டாயம் அத்திப்பழத்தை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

அத்திப்பழத்தை சாப்பிடுவதற்கு முன்னால் இதை கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க..!

அத்திப்பழம் யார் சாப்பிட கூடாது?

  • சர்க்கரை நோய் உள்ளவர்கள் அத்திப்பழம் சாப்பிடக்கூடாது.
  • பித்தப்பை கல் உள்ளவர்கள் அத்திப்பழம் சாப்பிடக்கூடாது.
  • ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அத்திப்பழம் சாப்பிடக்கூடாது.
  • அழற்சி உள்ளவர்கள் அத்திப்பழம் சாப்பிடக்கூடாது.
  • எலும்பு பிரச்சனை உள்ளவர்கள் அத்திப்பழம் சாப்பிடக்கூடாது.
  • சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருப்பவர்கள் அத்தி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Natural health tips in tamil

 

Advertisement