அஸ்வகந்தா மூலிகை சாப்பிடுவதால் இவ்வளவு தீமைகளா..?

Advertisement

Ashwagandha Side Effects in Tamil..!

வணக்கம் இனிமையான நேயர்களே… இன்றைய ஆரோக்கியம் பதிவில் அஸ்வகந்தா மூலிகை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளை பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க..  ‘அஸ்வம்‘ என்றால் வடமொழியில் குதிரை என்று பொருள் தருகிறது. ‘கந்தம்‘ என்றால் கிழங்கு என்பது பொருள். அஸ்வகந்தாவின் இலையினை முகர்ந்து பார்த்தால் குதிரையின் வாசம் வரும். அதனால் தான் இதை அஸ்வகந்தா என்று வடமொழியில் அழைக்கிறார்கள். அஸ்வகந்தா தீமைகளை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

இதையும் பாருங்கள் 👉 அஸ்வகந்தா லேகியம் நன்மைகள்

அஸ்வகந்தா தீமைகள்:

இந்த அஸ்வகந்தா ஒரு மூலிகை பொருள் ஆகும். இது மூலிகையின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. இதை அதிகளவில் பயன்படுத்துவதால் நமது உடலுக்கு தீமைகளை தருகிறது. இவை பல வகையில் நமக்கு ஆபத்தையும் உண்டாக்கும். இதற்கு மூல காரணமே நாம் சாப்பிட கூடிய அளவு தான். அதை பற்றி இங்கு பார்ப்போம்.

கல்லீரலை பாதிக்குமா..? 

இந்த அஸ்வகந்தா மூலிகை பொருளை நாம் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் சாப்பிட்டாலோ அல்லது மருத்துவர் கூறிய அளவிற்கு மேல் சாப்பிட்டாலோ அது நமது உடலுக்கு பல விளைவுகளை ஏற்படுத்துகிறது. இந்த அஸ்வகந்தா மூலிகையை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால் கல்லீரல் பாதிப்பு ஏற்படுகிறது.

வயிற்று கோளாறுகளை ஏற்படுத்துமா..?

அஸ்வகந்தா மூலிகை அதிகளவில் பயன்படுத்துவதால் வயிறு சம்மந்தப்பட்ட கோளாறுகளை ஏற்படுத்துகிறது. இதனால் கடுமையான வயிற்று வலி, வாந்தி , குமட்டல், வயிற்று போக்கு மற்றும் குடல் சம்மந்தப்பட்ட கோளாறுகளை ஏற்படுத்துகிறது. அதனால் அஸ்வகந்தா மூலிகை அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

கர்ப்பிணி பெண்கள் அஸ்வகந்தா சாப்பிடலாமா..? 

இந்த அஸ்வகந்தா மூலிகை பொருளை கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இதை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் கர்ப்பிணி பெண்கள் அஸ்வகந்தா மூலிகை பயன்படுத்த கூடாது.

ஒவ்வாமை பாதிப்பு உள்ளவர்கள் சாப்பிடலாமா..? 

அஸ்வகந்தா மூலிகை பொருளை ஒவ்வாமை பாதிப்பு உள்ளவர்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். தோல் சம்மந்தப்பட்ட நோய்களான அரிப்பு, தோல் வறட்சி மற்றும் அழற்சி போன்ற பாதிப்பு உள்ளவர்கள் அஸ்வகந்தா சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

குறிப்பு: ஆங்கில மருந்துகளை தினசரி சாப்பிட்டு வருபவர்கள் மற்றும் நோய்எதிர்ப்பு தடுப்பு மருந்துகள், மயக்க மருந்துகள் அல்லது நாட்பட்ட நோய்க்கான பிற மருந்துகளை எடுத்து கொள்பவர்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் அஸ்வகந்தா மூலிகை பொருளை சாப்பிட கூடாது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Natural health tips in tamil
Advertisement