ஆண்மை குறைவு அறிகுறிகள் | Aanmai Kuraivu Symptoms in Tamil

Advertisement

Aanmai Kuraivu Symptoms in Tamil

பொதுவாக நமது உடல் சீராக இயங்க வேண்டும் என்றால் நமது உடலில் போதுமான அளவு ஹார்மோன்கள் சுரக்க வேண்டும். குறிப்பாக ஆண்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கையில் ஹார்மோன்கள் தான் முக்கியமான இடத்தை வகிக்கின்றன. அவற்றில்  பெண்களின் உடலில் புரோஜெஸ்டிரோனும், ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோனும் போதிய அளவில் இருக்க வேண்டியது அவசியம். இவற்றில் ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் என்ற ஹார்மோன் தான் ஆண்களின் ஆண்மையை வெளிப்படுத்துகிறது. சரி இந்த டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைந்தால் என்னென்ன அறிகுறிகள் ஏற்படும், ஆண்மை குறைபாடு என்றால் என்ன என்பதை பற்றியும் இப்பொழுது படித்தறியலாம் வாங்க..

ஆண்மை குறைவு அறிகுறிகள்:

1) உங்கள் உடலில் டெஸ்டோஸ்டிரோன் குறைகிறது என்றால் பாலுணர்ச்சியானது குறைய ஆரம்பிக்கும். ஆகவே உடலில் பாலுணர்ச்சி குறைகிறது என்றால் அதற்கு காரணம் டெஸ்டோஸ்டிரோன் குறைவே முக்கிய காரணமாகும்.

2) ஒருவருடைய மன இறுக்கமும் டெஸ்டோஸ்டிரோன் குறைவாக உள்ளது என்பதை தான் வெளிப்படுத்தும்.

3) குறைவான எனர்ஜியும் ஆண்மை குறைவுக்குக்கான அறிகுறி என்று கருதப்படுகிறது ஒருவருடைய உடலில் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைவாக இருந்தால், எனர்ஜியானது குறைவாக இருக்கும்.

4) ஆண்மை குறைவின் மற்றொரு அறிகுறி என்றால் இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாத நிலை ஏற்படும்.

5) பொதுவாக ஆண்களின் உடலில் போதுமான டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் இல்லையென்றால் அவர்களது உடல் ஆற்றல் மற்றும் வலிமை மிகவும் குறைந்து காணப்படும். குறிப்பாக ஒரு சிறிய வேலையை கூட அவர்களினால் செய்து முடிக்க முடியாத அளவிற்கு உடல் மிகவும் வலிமை இழந்து காணப்படும்.

6) ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைவாக இருந்தால் உடல் பருமன், டைப் 2 நீரிழிவு நோய், தைராயிடு போன்ற பிரச்சனைகளில் ஏதேனும் ஏற்படக்கூடும்.

7) மற்ற நேரங்களுடன் ஒப்பிடுகையில், விந்து வெளிப்படுதல் குறைவாக இருந்தால், அதுவும் டெஸ்டோஸ்டிரோன் குறைவாக உள்ளது என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.

8) முன்பை விட உறவில் ஈடுபடும் போது, விறைப்புத்தன்மையானது குறைவாக இருந்தால், அதுவும் டெஸ்டோஸ்டிரோன் குறைவாக உள்ளது என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.

9) ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் குறைவாக இருந்தால், அவர்களின் விதைப்பையின் அளவானது சுருங்க ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, சிலருக்கு விதைப்பையை தொட்டால் எந்த ஒரு உணர்ச்சியும் தெரியாது.

10) அதிக உடல் உழைப்பு, அதிக உடற்பயிற்சி, அதிகப்படியான உடல் சூடு, சரியான நிலையில் வளராத விதைப்பை போன்ற முக்கிய காரணங்களினாலும் ஆண்மை குறைவு பிரச்சனை ஏற்படும்.

ஆண்மை அதிகரிக்க இயற்கை உணவுகள்

ஆண்மை குறைவு என்றால் என்ன?

ஆண்களின் பாலுறவு பிரச்சினைகள் பலவகைப்படும். இவை உடல் ரீதியானவையும் மனரீதியானவையுமாகும். இது உறவு கொள்வதில் விருப்பமின்மை, விறைப்புத்தன்மை அடைவதில் சிக்கல் அல்லது குறைபாடு, விந்தணுக்கள் வெளிப்படுவதில் கோளாறு, விந்தணுக்களின் தரம் மற்றும் அளவு குறைவு, உச்சக்கட்டத்தை அடைவதில் சிக்கல் அல்லது உச்சநிலை அடையாமை ஆகிய அனைத்தையும் குறிக்கும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips in tamil
Advertisement