டீயில் இஞ்சி சேர்த்து குடித்தால் இவ்வளவு தீமைகள் உண்டாகுமா..?

Advertisement

இஞ்சி டீ தீமைகள்

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு பயனுள்ள தகவலை தான் பார்க்கப்போகிறோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறவும். சரி நீங்கள் டீயென்றால் விரும்பி குடிப்பீர்களா..? இது என்ன கேள்வி. டீயை பிடிக்காதவர்கள் என்று யாராவது இருக்க முடியுமா..! என்று சொல்வீர்கள். ஆனால் அது தான் உண்மை. உணவை விட டீயை தான் அதிகம் விரும்பி குடிக்கிறார்கள். சரி இது நம் அனைவருக்குமே தெரிந்த ஓன்று தான். நாம் இன்று இஞ்சி டீ குடிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி தான் பார்க்க போகின்றோம். அதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

இத்தனை நாளா இதை தெரிஞ்சுக்காமலே இஞ்சியை சாப்பாட்டில் பயன்படுத்தி இருக்கோமே

இஞ்சி டீ குடிப்பதால் ஏற்படும் தீமைகள்:

ginger tea side effects

டீ என்றால் நம் அனைவருக்குமே பிடிக்கும். அதுபோல டீயில் பல விதமான டீ வகைகள் இருக்கிறது. அதிலும் ரொம்ப ஸ்பெஷலான டீ என்றால் அது இஞ்சி டீ தான். இஞ்சி டீ போடுவது என்பது மிகவும் சுலபமான விஷயம் தான். அதனால் இன்றைய நிலையிலும் பலரது வீடுகளில் இஞ்சி டீ தான் போட்டு குடிக்கிறார்கள்.

காரணம் இஞ்சி டீயில் பல்வேறு நன்மைகள் இருக்கிறது. இஞ்சி நம் உடலில் இருக்கும் பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. இஞ்சியில் இருக்கும் சத்துக்கள் என்னவென்று நம் அனைவருக்குமே தெரியும்.

ஈஸியா இனி உங்கள் வீட்டிலையே இஞ்சிச்செடி வளர்க்கலாம் 

இஞ்சி டீ குடிப்பதால் ஏற்படும் தீமைகள்

என்னதான் இஞ்சி டீ குடிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைத்தாலும் அதையும் ஒரு அளவிற்கு தான் குடிக்க வேண்டும். அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தான்.

அதுபோல தான் இஞ்சி டீயும். இஞ்சி டீயை நாம் அதிகமாக குடித்து வந்தால் நமக்கு சில பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது. அது என்னென்ன என்று இங்கு காணலாம்.

தேங்காய் பூவில் இருக்கும் தீமைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா

இஞ்சி டீ குடிப்பதால் ஏற்படும் தீமைகள்

 நம் அன்றாட வாழ்க்கையில் அதிகமாக இஞ்சி டீ குடித்து வந்தால் நாக்கில் அரிப்பு, நாக்கில் எரிச்சல், வாய்ப்புண், வயிற்றில் புண் அல்லது எரிச்சல் போன்றவை ஏற்படுகிறது. இஞ்சி டீ அதிகமாக குடிப்பதால் உடலில் அமிலத் தன்மை அதிகரித்து, நெஞ்செரிச்சல், வயிற்று வலி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.  

இஞ்சி இரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மை கொண்டது என்பதால் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தப்போக்கு பிரச்சனை உள்ளவர்கள் இஞ்சி டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் வயிற்றில் அல்சர் பிரச்சனை, சிறுகுடல் பாதிப்பு உள்ளவர்கள் இஞ்சி டீயை அதிகமாக எடுத்து கொள்வதை தவிர்ப்பது நல்லது.

தேங்காய் பால் தீமைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil
Advertisement