Ginger Multipurpose in Tamil
இன்றைய பதிவை முழுதாக படித்து முடிக்கும் பொழுது உங்களுக்கு ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்ட மனத்திருப்தி கிடைக்கும். அப்படி என்ன பயனுள்ள தகவல் என்று நீங்கள் சிந்தனை செய்வது புரிகின்றது. இன்றைய பதிவில் இஞ்சியின் பல வகையான பயன்கள் பற்றி தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம்.
இஞ்சியில் அப்படி என்ன பல வகையான நன்மைகள் உள்ளது என்று தானே சிந்தனை செய்கிறீர்கள். இன்றைய பதிவை முழுதாக படித்தால் உங்களின் அனைத்து சிந்தனைகளுக்கான தெளிவான பதில் கிடைக்கும். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> இத்தனை நாளா வெங்காயத்தை சமையலுக்கு பயன்படுத்தியும் இதை தெரிஞ்சிக்காம விட்டுட்டோமே
இஞ்சியின் பல்வேறு பயன்கள்:
சமையலில் இஞ்சி:
பொதுவாக இஞ்சி என்றாலே நாம் அனைவரின் மனதிலேயும் முதலில் நினைவிற்கு வருவது அதன் சமையல் பயன்பாடு மட்டும் தான். இந்திய பாரம்பரிய சமையல்கள் முதல் மேலை நாட்டு சமையல்களிலும் இந்த இஞ்சி அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது.
அதிலும் குறிப்பாக இதனை பசை போல் அரைத்து பிரியாணி, அசைவ உணவு வகைகள் மற்றும் சூப்பு வகைகளில் பயன்படுத்தலாம். மேலும் இதனை நன்கு காய வைத்து சுக்காக மாற்றி அதில் டீ மற்றும் காபி போன்றவை தயாரித்து பருகலாம்.
ஆரோக்கியத்தில் இஞ்சி:
பொதுவாக இஞ்சினை சமையலுக்கு பயன்படுத்துவதில் உள்ள இரகசியமே இதில் பல வகையான சத்துக்கள் உள்ளதால் இது நமது உடலுக்கு மிகுந்த நன்மைகளை அளிக்கும் என்பதால் தான்.
இஞ்சியை நன்கு பொடியாக அரைத்து நெற்றியில் தடவும் பொழுது உங்களின் தலைவலி குணமாகும். இஞ்சினை தேநீர் போல வைத்து பருகுவதன் மூலம் தசைகளில் உள்ள வலிகள் நீங்கும்.
50 கிராம் உலர்ந்த இஞ்சி பொடி மற்றும் நெல்லிக்காய் பொடி இரண்டையும் ஒன்றாக கலந்து வைத்து கொண்டு இதிலிருந்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தண்ணீரில் கலந்து காலை மற்றும் மாலை குடித்து வர உடல் பருமன் குறையும்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> உங்கள் வீட்டில் வெற்றிலை செடியை வளர்க்கிறீர்களா அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க
பூண்டு சாறு மற்றும் உலர் இஞ்சி பொடியை தண்ணீரில் கலந்து வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றத்தை குறைக்கிறது. மேலும் ஒரு சிட்டிகை உலர் இஞ்சி பொடியை வாயில் வைத்து வர பல் வலி குணமாகும்.
அழகை மேம்படுத்துவதில் இஞ்சி:
இஞ்சியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உங்கள் சருமத்தின் கொலாஜனை பாதுகாக்க உதவுகின்றது. இதற்காக நீங்கள் ஒரு சிறிய துண்டு இஞ்சியை எடுத்து அதன் மேற்பகுதி தோலை நீக்கி விட்டு உங்களின் தோலின் மேற்பகுதியில் ஒரு நாளைக்கு மூன்று முறை தேய்க்கவும்.
மேலும் தொடர்ந்து இஞ்சியை உணவில் சேர்த்து வருவதன் மூலம் உங்களுக்கு வயதான தோற்றமே ஏற்படாது என்று கூறப்படுகின்றது. பொதுவாக கிழக்கு ஆசிய மக்கள் பல ஆண்டுகளாக முடி வளர்ச்சியை ஊக்குவிக்க இஞ்சியை பயன்படுத்துகின்றனர்.
அதாவது வெங்காயம் ,இஞ்சி மற்றும் கற்றாழை ஆகியவற்றை நன்கு பசைபோல் அரைத்து ஆலிவ் எண்ணெயுடன் கலந்து தலையில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிப்பதன் மூலம் உங்கள் தலையில் உள்ள அனைத்து பிரச்சனையும் நீங்கி விடும்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> உங்கள் வீட்டில் மாமரம் இருக்கா அப்படியென்றால் இந்த விஷயம் தெரிந்திருக்கவேண்டுமே
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். | Multipurpose |