கவுனி அரிசி தீமைகள் | Karuppu Kavuni Rice Side Effects in Tamil
வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் கருப்பு கவனி அரிசியின் தீமைகளை பற்றித் தான் தெரிந்து கொள்ளப்போகிறோம். அரிசிகளில் பல வகைகள் உள்ளன. அரிசி வகைகளில் உயர்ந்த அரிசி கருப்பு கவுனி என்றும் சொல்லப்படுகிறது. அதில் இந்த கருப்பு கவனி அரிசியானது பல ஆரோக்கியங்களுக்கும், மருத்துவங்களுக்கும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்றது கருப்பு கவுனி அரிசி. இதில் சில மருத்தவ குணங்கள் இருந்தாலும், ஒரு சிலருக்கு பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துகிறது. இந்த அரிசியை பெரும்பாலும் அரசர்கள் தான் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதில் அப்படி என்ன நன்மைகள் இருக்கிறது என்றும், இவை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளை நம் பதிவின் மூலம் பார்க்கலாம் வாங்க.
கவுனி அரிசி மருத்துவ பயன்கள்..! |
கருப்பு கவுனி அரிசி சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்:
- கருப்பு கவுனி அரிசியை கர்ப்பம் அடைந்திருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகு கொடுப்பது நல்லது.
- கருப்பு கவுனி அரிசியில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனை பாதித்தவருக்கு இந்த கருப்பு கவுனி அரிசி அதிகம் சேர்ப்பதால் அதிகமான வயிற்று போக்கு மற்றும் இரைப்பை குடல் விளைவுகள் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.
- கருப்பு கவுனி அரிசியை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
கருப்பு கவுனி அரிசி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:
- கருப்பு கவுனி அரிசியில் அதிகப்படியான இரும்புசத்து, நார்ச்சத்து, கால்சியம் போன்ற பல வகையான சத்துக்கள் நிறைந்து உள்ளன.
- கருப்பு கவுனி அரிசியில் மிகவும் அதிகமான இரும்பு சத்துக்கள் இருப்பதால் இவை இரத்த சோகை மற்றும் ஹீமோகுளோபின் குறைவாக இருப்பவர்களுக்கும் நன்மை தருகிறது.
- கல்லீரலில் உள்ள செல்களை புதுப்பிக்கும் மாற்றங்களையும் இந்த கருப்பு கவுனி அரிசிக்கு உள்ளது.
- இந்த கருப்பு கவுனி அரிசியில் மிக குறைந்த அளவு Carbohydrates இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு இது நன்மை தருகிறது.
- பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் மற்றும் மாதவிடாய் பிரச்சனைகள் உள்ளவர்கள் கருப்பு கவுனி அரிசியை சேர்த்துக்கொள்வதால் நன்மைகள் அளிக்கிறது.
- இருதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கு இந்த கருப்பு கவுனி அரிசியை உபயோகித்து வரலாம். அதுமட்டுமில்லாமல் கேன்சர் வருவதையும் தடுக்கிறது.
- தோல் சம்மந்தப்பட்ட அரிப்பு, படை, புண்கள், எரிச்சல் போன்ற அலர்ஜிகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இந்த கருப்பு கவனி அரிசி நல்ல ஒரு மருந்தாக இருக்கிறது.
- இந்த அரிசியில் அதிகம் Antioxidant இருப்பதால் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகவும், தூய்மையாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது.
- கருப்பு கவுனி அரிசியில் நார்ச்சத்துக்கள் அதிகம் காணப்படுவதால் கெட்ட கொலஸ்ட்ராலை கரைத்து HDL என்னும் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும்.
- கருப்பு கவுனி அரிசியில் 4.9 கிராம் நார்ச்சத்துக்கள் இருப்பதால் செரிமான கோளாறுகள், வயிறு உப்புதல், வயிற்று போக்கு, வயிற்று வழிகள் பிரச்சனைகளை தடுப்பதற்கும் உதவியாக இருக்கிறது.
- இரத்த குழாய்களில் படிந்திருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைப்பதற்கு இந்த கருப்பு கவுனி அரிசி உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் மன அழுத்தத்தை தடுப்பதற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |